மொத்தப் பக்கக்காட்சிகள்

கவின்கேர் – எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள் - 2020 Business

 

கவின்கேர் – எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள்  - 2020, புத்தாக்க தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்பட்டது

 

~ சமூக மதிப்பீடுகள் கொண்ட தொழில்முனைவோர்கள் மீது ஒளிவெள்ளத்தைப் பாய்ச்ச ஒரு தளத்தினை வழங்கும் சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகளின் 9-வது பதிப்பு, இரு வகையினங்களின் கீழ் 5 தொழில்முனைவோர்களை அங்கீகரித்து, கௌரவித்தது~

இதுவரை வெளிச்சத்திற்கு வராத, சிறந்த குறிக்கோளுடன் கூடிய தொழில்முனைவு புத்தாக்கங்களை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் தனது முயற்சிகளை தளராது மேற்கொள்ளும் கவின்கேர் மற்றும் எம்எம்ஏ, இம்முறை சின்னிகிருஷ்ணன் விருதுகளின் – 9-வது பதிப்பை  ஒரு தனித்துவமான, நேரடி தொடர்பில்லாத வழிமுறையில் இன்று ஒருங்கிணைந்து நடத்தியது.  தனித்துவ பண்பு, தரமுயர்த்தும் திறன் மற்றும் மக்களுக்கும் / வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கக்கூடிய நன்மைகள் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களின் அடிப்படையில் தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரியில் வளர்ந்து வரும்  சிறுதொழில் முனைவகங்களை, கௌரவம் மிக்க சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள்’, அடையாளம் கண்டறிந்து புதுமை படைத்த தொழில்முனைவோர்களை கௌரவிப்பதை தனது நோக்கமாகக் கொண்டிருக்கிறது. சிறந்த தொழில் சிந்தனை வகையினத்தின் கீழ் இருவருக்கும் மற்றும் புத்தாக்க வகையினத்தின் கீழ் 3 புத்தாக்க தொழில்முனைவோர்களுக்கும் அவர்களது நவீன, புரட்சிகர சாதனைகளுக்காக இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.  கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் – ன் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு. சஞ்சய் கிர்லோஸ்கர், இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக பங்கேற்று, வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். 

இதன் ஒன்பது ஆண்டுகள் பயணத்தில் முதன்முறையாக, இந்த விருதுவழங்கும் நிகழ்வானது தொடக்கத்திலிருந்து முடிவு வரை முற்றிலும்  மெய்நிகர் முறையில் நடத்தப்பட்டது.  கோவிட்-19 பெருந்தொற்று சூழலின் காரணமாக, ஒரு மெய்நிகர் செயல்தளத்தில் இவ்விருதுகளை வழங்குவதற்காக விருதுக்கான நடுவர்கள் குழு உறுப்பினர்களையும் மற்றும் தலைமை விருந்தினரையும் ஒருங்கிணைக்க கவின்கேர் மற்றும் எம்எம்ஏ இணைந்து முடிவு செய்தன.  இந்த நிகழ்வின் சிறப்பையும், கௌரவத்தையும் இன்னும் உயர்த்தும் வகையில் உலகளாவிய பார்வையாளர்களை சென்றடையும் வகையில் இந்நிகழ்விற்காக டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தை மிக நேர்த்தியாக கவின்கேர் மற்றும் எம்எம்ஏ ஒருங்கிணைத்து வழங்கின.   

இந்நிகழ்வு பற்றி தனது கருத்தைப் பகிர்ந்துகொண்ட  கவின்கேர் பிரைவேட் லிமிடெட்-ன் தலைவரும்   மேலாண்மை இயக்குனருமான திரு. CK ரங்கநாதன் கூறுகையில், “இந்த பெருந்தொற்றானது, நாம் அனைவரையுமே புத்தாக்க சிந்தனையோடு செயல்படவும் மற்றும் சாத்தியமில்லாததை சாத்தியமானதாக ஆக்குமாறும் செய்திருக்கிறது.  இன்றைய டிஜிட்டல் உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டின் மூலம் தொழில்துறைக்கு, சமூகத்திற்க்கு மற்றும் பொதுமக்களுக்கும் மிகச்சிறந்த மதிப்பினை சேர்த்து வழங்குகின்ற, இதுவரை அதிகமாக பிரபலமாகாத சிறந்த தொழில்முனைவோர்களை கண்டறிந்து, வெளிப்படுத்துவதற்கான எமது பயணத்தை தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 

சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட, ஒத்திசைவான வழிமுறையில் இந்த புத்தாக்கங்களை உலக அளவிலான பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்வதற்கான ஒரு வாய்ப்பையும் எங்களுக்கு இந்த காலகட்டம் வழங்கியிருக்கிறது. அனைத்து வெற்றியாளர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன்; மற்றும் அவர்களது தொழில் முன்னேற்ற நடவடிக்கைகளில் இன்னும் சிறப்பாகவும், கடினமாகவும் உழைக்குமாறு அவர்களை நான் ஊக்குவிக்கிறேன்,” என்று கூறினார்.

டான்ஃபாஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் – ன் இந்திய பிராந்தியத்திற்கான தலைவர் மற்றும் எம்எம்ஏ – ன் தலைவருமான திரு. ரவிச்சந்திரன் புருஷோத்தமன் பேசுகையில், “இந்த கௌரவம் மிக்க விருது நிகழ்வை நடத்துவதிலும் மற்றும் விருதுக்கான தகுதியும், திறனும் உள்ள நபர்களை அடையாளம் காண்பதிலும் கவின்கேர் உடன் எம்எம்ஏ இணைந்து செயல்பட்டத்தில் பெருமகிழ்ச்சி கொள்கிறது.  நிலவி வரும் பெருந்தொற்று சூழலின் காரணமாக நடுவர்கள் குழுவின் சந்திப்பு உட்பட, விருதுக்கான ஒட்டுமொத்த செயல்முறையும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது.  தொடர்ச்சியாக 11-வது முறையாக இந்நாட்டில் மிகச்சிறந்த மேலாண்மை சங்கம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் எம்எம்ஏ மற்றும் கவின்கேர் நிறுவனத்தால் இணைந்து நடத்தப்பட்டிருக்கும் இந்த சிறப்பான நிகழ்ச்சியே ஒரு மாபெரும் புத்தாக்கமாகும்,” என்று கூறினார்.

காலம்சென்ற திரு. ஆர். சின்னிகிருஷ்ணன் அவர்களின் நினைவை போற்றவும் மற்றும் அவரது புரட்சிகரமான புத்தாக்க செயல்பாடுகளை கொண்டாடவும் 2011-ம் ஆண்டில் சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருது நிறுவப்பட்டது மற்றும் 28 சிறு–தொழில் நிறுவனங்களை, அவைகளின் புத்தாக்கமான செயல் நடைமுறைகளுக்காக இவ்விருது அங்கீகரித்து கௌரவித்திருக்கிறது.  புத்தாக்க விருதுகளைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு, சந்தையாக்கல், நிதி, வடிவமைப்பு, பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் உருவாக்கம், மனிதவளம் ஆகிய துறைகளில் ஆதரவு வழங்குவதற்காக கவின்கேர் நிறுவனத்தால் இவர்களுக்கு வழிகாட்டலும், உரிய ஆலோசனையும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தொழில் வாய்ப்பாகவும் மற்றும் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் செயற்பரப்பை உயர்த்தி விரிவாக்கம் செய்யக்கூடிய அடுத்த பெரிய சிந்தனையை அங்கீகரிக்கவும் மற்றும் ஆதரவுகாட்டி, பேணி வளர்க்கவும் வேண்டுமென்ற நோக்கத்தோடு “சிறந்த தொழில் சிந்தனைகள் என்ற வகையினம் சமீபத்தில் இந்த விருதில் அறிமுகம் செய்யப்பட்டது. 

நகர்வுத்திறன் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உதவ, ஒரு ஸ்மார்ட் சக்கர நாற்காலியை சஹாயத்தா என்ற பெயரில் உருவாக்கிய மிஸ். ஸ்ருதி பாபு அவர்களுக்கு இந்நிகழ்வில் ஒரு சிறப்பு அங்கீகார விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதிலுமிருந்து 314 விண்ணப்பங்கள், விருதுக்கான செயல்முறை அழைப்பில் கிடைக்கப்பெற்றன. இச்செயல்முறை ஆலோசக நிறுவனம் E&Y நிறுவனத்தால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு கண்டிப்பான வழிகாட்டல் விதிகளின் கீழ் இந்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் செய்யப்பட்டனர்.  கௌரவம் மிக்க இவ்விருதை பெறும் வெற்றியாளர்களை தேர்வுசெய்ய மெய்நிகர் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட வல்லுனர்கள் அடங்கிய நடுவர் குழுவில் செயிண்ட் கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் – ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சந்தானம், டெய்ம்ளர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் பி லிமிடெட் – ன் தலைமைச் செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. சத்யகாம் ஆர்யா, எல்&டி இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர் இன்ஜினியரிங் லிமிடெட் – ன் தலைமைச் செயல் அலுவலர் திரு. ஆனந்த் பாண்டே, ஷர்துல் அமர்ச்சண்ட் மங்கள்தாஸ் அண்டு கோ – ன் சென்னை பிரிவு தலைவரும்,

 

பார்ட்னருமான திரு. ஆனந்த் பூஷன், ஐஐடி மெட்ராஸ் – ன் மேலாண்மை படிப்புகள் துறையின் தலைவர் டாக்டர். புரொஃபசர் எல்.எஸ். கணேஷ், ஃபார்ஸ்டார் டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் லிமிடெட் – ன் நிர்வாக இயக்குனர் டாக்டர். ரேகா ஷெட்டி, ஐடிசி லிமிடெட் – ன் பேக்கிங் & பிரிண்டிங் பிரிவின் தலைமைச் செயல் அலுவலர் திரு. ஆர். செங்குட்டுவன் ஆகிய வல்லுனர்கள் இடம்பெற்றிருந்தனர். 

9-வது கவின்கேர் - சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள் 2020 நிகழ்வில் கீழ்வரும் தொழில்முனைவோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன: 

இனோவேஷன் பிரிவு:  

எம்ஏகே நிறுவனங்கள் குழுமத்தின் தலைவர் பொறியாளர் மாணிக்கம் A.கவுண்டர் மற்றும் எம்ஏகே இந்தியா லிமிடெட் தலைமை அறிவியலாளர் டாக்டர். ராமன் சிவகுமார் ஆகியோருக்கு, எம்ஏகே பசுமை எரிவாயு எனப்படும் அவர்களின் புதுமைப்படைப்பான, எதுவும் வீணாகாத, மாசுபடுத்தாத குப்பைகளை எரிக்கும் அமைப்பை அங்கீகரித்து விருது வழங்கப்பட்டுள்ளது.  அவர்களுடைய புதுமைப்படைப்பு கழிவுகளை இயற்கை எரு, கனிம சாம்பல் மற்றும் கரிமமாக மாற்றுவதற்கு உதவுகிறது.  சிமெண்ட் போன்ற பண்புகள் உள்ள எரிசாம்பலை திட நடைபாதை கற்கள் செய்வதற்குப் பயன்படுத்தலாம்.  இந்த புதிய படைப்பில் பள்ளங்களை நிரப்புவதற்கு பொருட்கள் பயன்டுத்துவதை முற்றிலும் குறைப்பதற்குரிய திறன் உள்ளது. 

எஸ் & ஜி இனோவேட்டர், நிறுவனர் லெப்டினன்ட் டாக்டர். கே.பி. ஸ்ரீதர்  அவர்களுக்கு திறந்த ஆழ்துளை கிணற்று பள்ளங்களில் தவறி விழக்கூடிய பச்சிளங் குழந்தைகள், சிறார்கள் அல்லது விலங்குகளை 15 நிமிடங்களில் மீட்கக்கூடிய அவரின் ஆழ்துளை கிணற்றுப் பள்ளத்தில் விழக்கூடியவர்களை மீட்கக்கூடிய இயந்திர புதுமைப்படைப்பை அங்கீகரித்து விருது வழங்கப்பட்டுள்ளது.  இது ஒரு வார்ம், ரேக் மற்றும் பினியன் கியர் தொகுப்பு கொண்ட ஒரு மிகவும் எளிய முறையில் இயங்குகிறது.  இது 150 அடி வரையிலான ஆழத்தை எட்டக்கூடியது மற்றும் இதில் IR கேமரா பொருத்தப்பட்டுள்ளது.  இந்த இயந்திரம் NDRF, தீயணைப்பு சேவை துறைகள் மற்றும் பல்வேறு என்ஜிஓக்களால் மேற்கொள்ளப்படும் மீட்கும் நடவடிக்கைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.   

ஃபியூச்சர்ஃபார்ம் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. ஸ்ரீராம் கோபால் அவர்களுக்கு, மண்பொருட்கள் இல்லாமல் தாவரங்களை வளர்த்து 95 சதவிகிதம் நீரை சேமிப்பதற்கு நமக்கு உதவக்கூடிய அவருடைய மண் இல்லாச் செடி வளர்ப்பு அமைப்பை அங்கீகரித்து விருது வழங்கப்பட்டுள்ளது.  மேககஅடிப்படையிலான பருவநிலை மேலாண்மை, திறன்மிக்க நீர்ப்பாசனம் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை அமைப்பு கொண்ட இந்த தொழில்நுட்பம் முக்கிய பெருநகரங்களைச் சுற்றி உயர் தொழில்நுட்ப பண்ணைகளை உருவாக்குவதில் உதவும் 

 

மகத்தான யோசனைகள் வழங்கு பிரிவு:

திரு. அம்ரிதா கணேஷ் அவர்களுக்கு கழிவுநீர் வடிகால்கள், குழிகள் மற்றும் ஆழ்துளைகளில் தீங்கு விளைவிக்கக்கூடிய வாயுக்களை கண்டறிந்து அப்புறப்படுத்துவதன் மூலம் ஒரு புதுமையான குறைந்தவிலை கருவியை (சாதனத்தை) உருவாக்கியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது. 

மகத்தான யோசனைகளுக்கான விசேஷ நடுவர் விருது 

மிஸ். ஸ்ருதி பாபு அவர்களுக்கு, பராமரிப்பு உதவிபுரிபவர்களிடமிருந்து குறைந்தபட்ச உதவிபுரிவதலுடன் இடம்பெயர்வதற்கும், மலம் கழிப்பதற்கும் இயக்கப் பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவிபுரிவதற்காக சஹாயாதா என்ற ஒரு ஸ்மார்ட் சக்கர நாற்காலியை உருவாக்கியதற்காக விருது வழங்கப்பட்டுள்ளது.  இயக்கப் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே இந்த உருவாக்கத்தின் நோக்கமாகும்.

சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருது குறித்து:

சாஷே புரட்சியின் முன்னோடியான காலம்சென்ற திரு. ஆர். சின்னிகிருஷ்ணணைப் பற்றி விவரிப்பதற்கு, அவர் ஒரு இலட்சிய கனவுகாண்பவர், புதிய படைப்பாளி, சிந்தனைச் சிற்பி, தொழில்முனைவோர் என்று ஒரு சில வார்த்தைகளில் விவரித்துவிடமுடியாது. 'பணக்காரர்கள் வாங்கி அனுபவித்து மகிழும் பொருட்கள், ஏழை மனிதனும் வாங்கி பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும்' என்ற எளிய கோட்பாட்டின் அடிப்படையில் அவரது சிந்தனைகள் அமைந்திருந்தது. இன்றைக்கு அவரது புதுமையான செயல்பாடுகளை சாஷேக்கள் வடிவத்தில் ஒவ்வொரு கடையிலும் நாம் காண்கிறோம். அவரது கனவானது உயிருள்ளதாக மற்றும் இன்னும் சிறப்பாக இருப்பதற்கு அவைகள் சாட்சியங்களாக திகழ்கின்றன. சிறிய மற்றும் குறு அளவிலான தொழில்நிறுவனங்களை நடத்துகின்ற ஆண் மற்றும் பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக மறைந்த திரு. ஆர். சின்னிகிருஷ்ணன் அவர்களுக்கு செலுத்தப்படும் ஒரு மரியாதை கலந்த அஞ்சலியாக, கவின்கேர் இந்த விருதை நிறுவியிருக்கிறது. 'சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருது', புதுமையான செயல்பாட்டின் ஒட்டுமொத்த மதிப்பு மற்றும் அதன் தனித்துவத்தன்மை, மக்களுக்கு அது வழங்கும் பலன்கள், தரமுயர்த்துவதற்கான அதன் திறன்நிலை ஆகிய அம்சங்களின்மீது சிறப்பு கவனம் செலுத்துகிறது. விருதுக்கான குறும்பட்டியலில் இடம்பெறுபவர்கள் பல்வேறு சிறப்பு தொழில்செயல்பாடுகளை உள்ளடக்கிய அவர்களது தொழில் மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்திலும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு, மேலும் முன்னேற்றம் காண வழிநடத்தப்படுவார்கள்.

கவின்கேர் பிரைவேட் லிமிடெட் குறித்து:

கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, உணவுகள், பால்பொருட்கள், பானங்கள், சூழல் மற்றும் சலூன்கள் ஆகிய துறையில் தொழிற்பிரிவுகளைக்கொண்டு, ஒரு பன்முக செயல்பாடுள்ள  ஒரு எஃப்எம்சிஜி பெருநிறுவனமாகும். இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), ஃபேர்னஸ் கிரீம்கள் (ஃபேர் எவர்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட்) ஆகியவை அடங்கும். உடல்நலம் மற்றும் தூய்மை வகையினத்தில் தனது செயல்பாடுகளை சமீபத்தில் விரிவாக்கம் செய்திருக்கும் கவின்கேர், காய்கறிகள் மற்றும் பழங்களின் தூய்மை மற்றும் பாதுகாப்பிற்காக சாஃபூ (மற்றும் பல்வேறு மேற்பரப்புகள் மற்றும் சாதனங்களுக்கான தொற்றுநீக்கியான பாக்டோ-வி என தொற்றுநீக்கல் செய்து தூய்மைப்படுத்தும் தயாரிப்புகளின் அணிவரிசையை வழங்குகிறது.  இதன் முக்கியமான ஃபர்சனல் கேர் பிராண்டுகளின் கீழ் ஹேண்டு சானிடைசர்கள் மற்றும் லிக்விட் சோப்பு தயாரிப்புகளையும் கவின்கேர் வழங்கி வருகிறது.  இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமானது, இந்த பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவுகிறது. மிகப்பெரியளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கும் இந்நிறுவனம், தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றி இருக்கிறது. “பேரார்வமும், பெருமகிழ்ச்சியும் கொண்ட பணியாளர்கள் வழியாக புத்தாக்கத்தை ஊக்குவித்து மக்களால் பெரிதும் விரும்பப்படும் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம், தொழில்துறையின் வளர்ச்சியை விட கணிசமான அளவு இன்னும் சிறப்பாக நாங்கள் வளர்ச்சி காண்போம்” என்ற தனது கார்ப்பரேட் செயல்நோக்கம் மற்றும் திட்டத்தின் மீது வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதே கவின்கேரின் வெற்றிக்கு காரணமாகும்.  

 

மெட்ராஸ் மேனெஜ்மென்ட் அசோசியேஷன் குறித்து (MMA): 

மேலாண்மை / நிர்வாக கல்வி, பயிற்சி மற்றும் மேம்பாடு செயல்பாடுகளை இந்நாட்டின் இப்பகுதியில் முன்னிலைப்படுத்தி ஊக்குவிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, 1956-ம் ஆண்டில் மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (MMA) நிறுவப்பட்டது. “இந்தியாவில் உலகத்தரம் வாய்ந்த மேலாண்மை உயர்நேர்த்திக்கு ஊற்றுக்கண்ணாக திகழ்வது” என்பதே MMA –ன் தொலைநோக்கு திட்டமாகும்.  

தனது உறுப்பினர்களாக 8000-க்கும் அதிகமான கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிலகங்கள், தொழில்முறை நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் எக்ஸிகியூட்டிவ்களை இது கொண்டிருக்கிறது. உயர் நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களுக்கு கருத்தரங்குகள் உட்பட ஒவ்வொரு ஆண்டும் சுமார் 750 எக்ஸிகியூட்டிவ் டெவலப்மெண்ட் செயல்நடவடிக்கை நிகழ்வுகளை இது ஏற்பாடு செய்து நடத்துகிறது. MMA  நடத்தும் வழக்கமான நிகழ்வுகளில்  59,000 –க்கும் அதிகமான எக்ஸிகியூட்டிவ்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவில் இந்தியா மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் அமைப்பின் (AIMA) மிகப்பெரிய கிளை சங்கமாக MMA இருக்கிறது. 2019-20 ஆம் ஆண்டுக்கான  AIMA-ன் “தேசிய அளவிலான உயர்நேர்த்தி விருதுஉட்பட,  “இந்தியாவில் சிறந்த மேலாண்மை சங்கம்” என்ற விருதையும் தொடர்ச்சியாக 11 முறைகள் MMA பெற்றிருக்கிறது.  ஆம்பூர், ஆத்தூர், ஈரோடு, ஓசூர், நாமக்கல், சேலம், ஸ்ரீ சிட்டி, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய அமைவிடங்களில் உள்ளூர் அளவிலான கிளை சங்கங்களையும் MMA கொண்டிருக்கிறது.

கார்பரேட் நிறுவன தலைமை அலுவலர்கள் மட்டுமல்லாது, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள், ஐஐடி மெட்ராஸ் மற்றும் IFMR-ன் இயக்குநர்கள், தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலர் ஆகியோரும் உறுப்பினர்களாக இதன் நிர்வாகக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts