மொத்தப் பக்கக்காட்சிகள்

சரியான சந்தை நேரம் என்ற பயத்தைத் தணிக்கும் முதலீட்டு முறை..!

 சரியான சந்தை நேரம்  right market timing  என்ற பயத்தைத் தணிக்கும் முதலீட்டு முறை..!

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் ,“ஷுருவாத் சிப்ஸ் என்ற புதிய பிரசாரத்தைத் தொடங்குகிறது

முக்கிய அம்சங்கள்:

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டின் முதலீட்டாளர் விழிப்புணர்வு பிரச்சாரம், பெரிய மற்றும் சிறிய - அனைத்து நிதி இலக்குகளையும் நிறைவேற்றும்  முறையான முதலீட்டு திட்டத்தின் (Systematic Investment Plan – SIP - எஸ்.ஐ.பி) நன்மைகள் மற்றும் முக்கியத்துவத்தைப் பற்றி முதலீட்டாளர்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது - –https://www.youtube.com/watch?v=zXvqgm-ui_Y

மேலும், செயலி (app) மூலம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு தடையற்ற அனுபவத்தை வழங்குவதற்காக இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தனது மொபைல் செயலியை புதுப்பித்துள்ளது

ஏப்ரல் 2020 முதல், செயலி மூலமான முதலீடு மாதத்திற்கு 30% என்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது.

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டில்  செயலி மூலமான புதிய நேரடி முதலீட்டின் பங்களிப்பு 23% (செப்டம்பர் 2020 நிலவரப்படி) ஆக உள்ளது. 

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் பரஸ்பர நிதி (Mutual Fund - மியூச்சுவல் ஃபண்ட்) நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. அதன் புதிய டிஜிட்டல் பிரச்சாரத்தை ஷுருவாத் சிப்ஸ்(“ShuruaatSIPse”) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் நோக்கம், நிதி நோக்கத்தை பூர்த்தி செய்ய எஸ்,ஐ.பிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி முதலீட்டாளர்களுக்கு சொல்லிக் கொடுப்பதாகும்.  

சீரான முதலீட்டின் முக்கியத்துவத்தைப் பற்றி தற்போதைய தொற்று நோய் பரவல் (pandemic) நமக்கு கற்பித்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் இடர்ப்பாட்டை (Risk) சந்திக்கும் திறன் வெகுவாக மாறிவிட்டது, இதுபோன்ற சூழ்நிலையில்  எஸ்.ஐ.பிகள், கஷ்டப்பட்டு நாம் சம்பாதித்த நமது பணத்தைப் பாதுகாக்கவும் வளரவும் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

  நெகிழ்வுத் தன்மை, சீரான அணுகுமுறை, ரூபாய்  அடக்கவிலை சராசரி மற்றும் கூட்டு வளர்ச்சிக்கான வாய்ப்பு (flexibility, disciplined approach, rupee cost averaging, and compounding potential)  போன்ற பல நன்மைகள் காரணமாக, ஒருவரின் முதலீட்டுக் கலவையில் (investment portfolio.) எஸ்.ஐ.பி முதலீட்டு முறை ஒரு  குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளது. ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டின் புதிய டிஜிட்டல் பிரச்சாரம், ஷுருவாத்சிப்ஸ் முதலீட்டாளர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்திலும், ஒரு பாதுகாப்பான முதலீட்டுக் கலவை மிக முக்கியமானது என்பதை உணர வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த டிஜிட்டல் பிரச்சாரம் நாம் ஒரு இசைக்கலைஞராக நம் வாழ்க்கையைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பது, அல்லது  சொந்தத் தொழில்களில் இறங்குவது, அல்லது  சொந்த செல்வத்தை உருவாக்குவதற்கான பயணத்தைத் தொடங்குவது ஆகியவற்றுக்கான ஒரு முறையான மற்றும் சீரான  முதலீட்டு வடிவமாகும். எஸ்.ஐ.பி  முறையில் இடைவெளி எதுவும் விடாமல் முதலீடு செய்வது,சரியான சந்தை நேரம்’ (‘right market timing’) என்ற பயத்தைத் தணிக்கிறது. கூடவே, முதலீட்டாளர்கள் எந்தவொரு உணர்ச்சிகரமான சார்புகளிலிருந்தும் விலகி இருக்க உதவுகிறது.

வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் தனிநபர்கள் வெவ்வேறு சவால்கள், விருப்பங்கள் மற்றும் குறிக்கோள்களை சந்திக்கிறார்கள் என்ற நுண்ணறிவையும் இந்தப் பிரச்சாரம் உருவாக்குகிறது. அத்தகைய ஒவ்வொரு வாழ்க்கை நிலை மற்றும் தேவைக்கும், ஒரு எஸ்.ஐ.பி எளிதானது, நெகிழ்வுத்தன்மை மற்றும் மலிவு ஆகியவற்றை வழங்கும் சிறந்த முதலீட்டு முறையாக இது இருக்கும்.

திரு சந்திரேஷ் குமார் நிகம், எம்.டி & சி.., ஆக்ஸிஸ் .எம்.சி. (Mr. Chandresh Kumar Nigam, MD & CEO, Axis AMC) கூறும் போதுஒவ்வொரு புதிய இலக்கிற்கான பயணமும் சரியான திசையில் முதல் அடியை எடுப்பது மூலம் ஆரம்பமாகிறது. இதேபோல், நிதி நலனுக்காக (financial wellness), பொறுப்பான முதலீட்டை நோக்கி உங்களுக்கு ஒரு படி தேவை - அது ஒரு பெரிய படியாக இருக்க தேவையில்லை. இது ஒரு சிறிய படியாக இருக்கலாம்; வசதியாக  இருக்க வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால், தொடங்குவது, கவனம் செலுத்துவது மற்றும் சீரான மற்றும் முறையான அணுகுமுறையை பின்பற்றுவதாகும். ஷுருவாத்சிப்ஸ் பிரச்சாரத்தின் மூலம், ஒரு எஸ்.ஐ.பி உடன் முதலீட்டு பயணத்தைத் தொடங்குவதின் முக்கியத்துவத்தை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.

முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு பயணத்தை எளிதாக்குவதற்காக, ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் தனது மொபைல் செயலியை பல சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக மாற்றிய அமைத்திருக்கிறது. பல முதலீடுகளை ஒருங்கிணைப்பது,  கைவிடப்பட்ட பரிவர்த்தனைகளை மீண்டும் தொடங்குவது, ஒரு திட்டத்திலிருந்து வேறு திட்டத்திற்கு எளிதாக மாற்றுவது போன்ற சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய சந்தையில் கிடைக்கும் சமீபத்திய செயலிகளில் இது ஒன்றாகும்.

மேலும், யு.பி.ஐ (UPI) மூலம் முதலீடு செய்வது, புதிய முதலீடுகள் மற்றும் கூடுதல் முதலீடுகளை (top-ups) எளிதில் செய்வதற்கான திறன், என்.ஏ.வி புதுப்பிப்புகளை அணுகல் மற்றும் பயணத்தின் போது கணக்கு அறிக்கைகளை பார்ப்பது ஆகியவற்றை இந்தச் செயலி செயல்படுத்துகிறது.

2020 ஏப்ரல் மாதம் முதல், செயலி மூலமான முதலீடு மாதத்திற்கு 30% என்ற விகிதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்டில்  செயலி மூலமான புதிய நேரடி முதலீட்டின் பங்களிப்பு 23% (செப்டம்பர் 2020 நிலவரப்படி) ஆக உள்ளது

ஆக்ஸிஸ் .எம்.சி  பற்றி (About Axis AMC):

ஆக்ஸிஸ் சொத்து மேலாண்மை நிறுவனம் (Axis AMC), மியூச்சுவல் ஃபண்ட்கள் (பரஸ்பர நிதிகள்), போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவைகள் மற்றும் மாற்று முதலீடுகள் (alternative investments) என ஒருங்கிணைந்த சொத்து மேலாண்மை வழங்கும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும்

 

Mr. Ujjawal Punmiya

AVP – Public Relations & Corporate Communications

M: +91 9619130947

E: ujjawal.punmiya@axismf.com

 

ஷுருவாத் எஸ்.ஐ.பி சே (Shuruaat SIP Se) என்பது ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின், ஒரு முதலீட்டாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு முயற்சி ஆகும். முதலீட்டாளர்கள் ஒரு முறை  உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (KYC)  செயல்முறையை  செய்து வேண்டும். மேலும் கூடுதல் தகவலுக்கு, www.axismf.com - பார்வையிடவும் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும். முதலீட்டாளர்கள் பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்களை மட்டுமே கையாள வேண்டும், அவற்றின் விவரங்கள் www.sebi.gov.in - இடைத்தரகர்கள் / சந்தை உள்கட்டமைப்பு நிறுவனங்கள் (Intermediaries/Market Infrastructure Institutions) பிரிவில் கிடைக்கின்றன


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...