மொத்தப் பக்கக்காட்சிகள்

சி.எஸ்.பி வங்கி கோவிட் - 19 கால செயல்பாடு

கோவிட் - 19   கால  செயல்பாடு

 

சி.எஸ்.பி வங்கியின் (CSB Bank) இயக்குநர்கள் குழு, 31.03.2020 உடன் முடிவடைந்த நிதி ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை 15.06.2020 தேதி நடந்த கூட்டத்தில் பதிவு செய்தது.

 

முக்கிய அம்சங்கள்


அ) சி.எஸ்.பி வங்கி, தொடர்ச்சியான இழப்புகளை உடைத்து, லாபங்களை பதிவு செய்திருக்கிறது. பல மந்தமான வருட இழப்புகளுக்குப் பிறகு, வங்கி லாபங்களை பதிவு செய்ய முடிந்திருக்கிறது. இப்போது வளரத் தயாராக உள்ளது.

ஆ) 2019- 2020 ஆம் ஆண்டில், வரிக்கு முந்தைய லாபம் (Profit before Tax) ரூ. 134 கோடியாகும். இது 2018- 2019 -இல் ரூ.300 கோடி இழப்பாக இருந்தது.  ஒரு முறை இழப்பு ரூ. 87 கோடி ரூபாய் என்ற போதிலும். குறைந்த வரி விகித சலுகையால் வங்கியின்  நிகர லாபம் (Net profit) 2019- 2020 ஆம் ஆண்டில் ரூ. 13 கோடி. 2018- 2019 ஆம் ஆண்டில்  ரூ. 197 கோடி இழப்பிலிருந்தது.ஒத்திவைக்கப்பட்ட வரி சொத்துகளின் (deferred tax assets -DTA) மறு அளவீட்டு  மற்றும் குறைந்தபட்ச மாற்று வரி (minimum alternate tax -MAT) மாற்றியமைப்பது காரணமாக, லாபம் மற்றும் இழப்பு (profit & loss  -P&L)) மீது ஒரு முறை தாக்கம் ரூ. 87 கோடி  ஆனால் இது இல்லை என்றால் 2019-2020 - க்கான நிகர லாபம் ரூ. 100 கோடியாகும். இந்த நடவடிக்கையின் நோக்கம், குறைந்த வரி விகிதங்கள் மூலம்  அடுத்து காலாண்டுகளில் வங்கிக்கு  லாபம் வந்து சேரும்.

இ) அதன்  ஐந்தொகையை வலுப்படுத்த (strengthen its Balance sheet), வங்கி கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி கூடுதல் ஒதுக்கீடுகளையும் வைத்திருக்கிறது:

   ஆர்.பி.ஐயின் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களுக்கு மேல் உள்ள விகிதங்களில்  வாராக் கடன் (NPA) ஒதுக்கீடு: ரூ .93 கோடி

·        மோசடிக்கான ஒதுக்கீட்டை பயன்படுத்தவில்லை: ரூ.22  கோடி

·        பத்திர ரசீதுகளின் நிகர தேய்மானம் புத்தகத்திற்கு வருவதற்கான அதிகரிப்புகளைக் கருத்தில் கொள்ளவில்லை: ரூ .9 கோடி

·        ஆர்.பி.ஐயின் கோவிட் நிவாரணத்தின்படி சொத்து தர நன்மைகள் பெறப்பட்ட கடன்களுக்கான  ஒதுக்கீட்டு விருப்பத்தைப் பயன்படுத்தவில்லை: ரூ. 1 கோடி

ஈ)2019- 2020 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு லாபம் (Operating Profit) இது வரை இல்லாத அளவாக ரூ. 281 கோடியாகும்.  இது  2018- 2019 ஆம் ஆண்டில் ரூ. 13 கோடி - 2000% அதிகரிப்பு ஆகும்

உ) 2019-2020 ஆம் ஆண்டில், வங்கியின் நிகர வட்டி வருமானம் (Net Interest Income - NII)) ரூ. 592 கோடியாக இருந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டில் ரூ. 440 கோடியாக இருந்தது. இது  ரூ. 152 கோடி அல்லது 35% வளர்ச்சியாகும்.

·        வழங்கப்பட்ட கடன்கள் மீதான வருமானம் 9.9%-லிருந்து 0.70% அதிகரித்து 10.6 சதவிகிதமாக மேம்பட்டது

·        நிதித் திரட்டும் செலவு (Cost of Deposits) 5.9% ஆக நிலையாக உள்ளது.

·        நிகர லாப வரம்பு 2.5%-லிருந்து  0.70% அதிகரித்து  3.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது

 

ஊ)  2019-2020 ஆம் ஆண்டில், வட்டி அல்லாத வருமானம் (Non-Interest Income) வலுவான வளர்ச்சியைக் கண்டு ரூ. 222 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.136 கோடியாக இருந்தது. இது 63% அதிகரிப்பு  ஆகும். 2020 நான்காம் காலாண்டில் வட்டி அல்லாத வருமானம் ரூ. 87 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 46  கோடியாக இருந்தது.

எ) செயல்பாட்டு செலவு (Operating Expense - Opex) கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஒபெக்ஸ் 2018- 2019 ரூ. 563 கோடியாக இருந்தது. இது 2019- 2020 இல் ரூ. 533 கோடியாக குறைந்துள்ளது.

ஏ) செலவு வருமான விகிதம் (Cost Income Ratio) மிகவும் மேம்பட்டுள்ளது: 2019- 2020 ஆம் முழு நிதி  ஆண்டில் 66% ஆகவும்,  2019- 2020 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 56% ஆகவும் இருந்தது. ஒப்பிடுகையில், செலவு வருமான விகிதம் முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட கணிசமாக மேம்பட்டிருக்கிறது (2018- 2019 க்கு 98% மற்றும் 2018-2019 ஆம் ஆண்டின்  நான்காம் காலாண்டில் 123%).


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...