மொத்தப் பக்கக்காட்சிகள்

சி.எஸ்.பி வங்கி: வசதியான பணப்புழக்க நிலை

சி.எஸ்.பி வங்கியின் (CSB 

Bank) இயக்குநர்கள் குழு, 31.03.2020 உடன் முடிவடைந்த 


நிதி ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதி முடிவுகளை 15.06.

2020 தேதி நடந்த கூட்டத்தில் பதிவு செய்தது.


சொத்து தரத்தில் (Asset Quality) மிகச் சிறப்பான முன்னேற்றம்

·        மொத்த வாராகடன் (Gross NPA) 31.03.2019 நிலவரப்படி ரூ. 531 கோடியாக இருந்தது. இது 31.03.2020 நிலவரப்படி  ரூ. 409  கோடியாக குறைந்துள்ளது. இது 23% குறைவாகும்.  மொத்த வாராகடன் குறைவு, வழங்கப்பட்ட கடன்களில் 4.9% லிருந்து 3.5% ஆக  குறைந்தது.

 

·        நிகர வாராகடன் (Net NPA) 31.03.2019 நிலவரப்படி ரூ. 241  கோடியாக இருந்தது. இது 31.03.2020 நிலவரப்படி  ரூ. 217 கோடியாக குறைந்தது. இது 10% குறைவாகும்.  நிகர வாராகடன் குறைவு, வழங்கப்பட்ட கடன்களில் 2.3% லிருந்து 1.9% ஆக  குறைந்தது.

 

·     வாராகடன் ஓதுக்கீடு விகிதம் (Provision Coverage)  78% லிருந்து 80% ஆக மேம்பட்டுள்ளது

 மூலதன தன்னிறைவு  விகிதம் (Capital Adequacy Ratio) 31.03.2019  நிலவரப்படி 6.7 சதவிகிதமாக இருந்தது. இது 31.03.2020 நிலவரப்படி 22.5 சதவிகிதமாக மேம்பட்டுள்ளது.  கடன் விகிதம் (Leverage Ratio) 31.03.2019 நிலவரப்படி 6.6 சதவிகிதமாக இருந்தது. இது 31.03.2020 நிலவரப்படி 8.9 சதவிகிதமாக மேம்பட்டிருக்கிறது.

வசதியான பணப்புழக்க நிலை (Comfortable Liquidity Position). பணப்புழக்க பாதுகாப்பு விகிதம் (Liquidity Coverage Ratio) ஆர்பிஐயின் தேவையான 100% விட 245% வசதியாக உள்ளது.  மார்ச் மாதத்திற்குப் பிறகு, கோவிட் காலங்களில் கூட வைப்புத் தொகை (Deposits) ரூ.430 கோடி அதிகரித்துள்ளது.

 ஒள) காசா கலவை (CASA mix) 31.03.2020 நிலவரப்படி 29.2% ஆக உயர்ந்திருக்கிறது. இது 31.03.2019 நிலவரப்படி 27.8% ஆக  இருந்தது.

 வழங்கப்பட்ட கடன் வளர்ச்சி (Advance Growth),

·        தங்க நகைக் கடன்கள்  ரூ. 841 கோடி அல்லது 28.4% வளர்ச்சியைக் காட்டி இருக்கிறது.

·        எல்.சி.பி.டி (LCBD) கடன்  மூலமான வருமானம்  ரூ. 367  கோடி அல்லது  46%   குறைவு

·        வேளாண் மற்றும் நுண்கடன் (Agri & MFI) பிரிவு வளர்ச்சியில் சுமார் ரூ. 160 கோடி பங்களித்துள்ளது.

·        2019- 20 ஆம் ஆண்டில் எச்சரிக்கையான கடன் வழங்கும்  உத்தியை தொடர்ந்து  வழங்கப்பட்ட கடன் ஒட்டு மொத்த வளர்ச்சி ஆண்டு கணக்கில் 7% முன்னேற்றத்தில் பதிவு செய்துள்ளது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...