மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடு: 2019-ல் எப்படி?

இந்திய பங்குச் சந்தையின் செயல்பாடு: 2019-ல் எப்படி?

 இந்திய பங்குச் சந்தையின் குறியீடுகளில் ஒன்றான சென்செக்ஸ் புள்ளிகள் 2019 ஆம் ஆண்டில் 14% அதிகரித்தது. இதனால், முதலீட்டாளர்களின் பங்குகளின் மதிப்பு சுமார் ரூ. 11 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. பி.எஸ்.இ-ல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குச் சந்தை மூலதன மதிப்பு, 2019- ஆம் ஆண்டில் ரூ.11,05,363.35 கோடி அதிகரித்து ரூ.1,55,53,829.04 கோடியாக உயர்ந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் சென்செக்ஸ் 5.9% உயர்ந்து 2011 புள்ளிகள் ஏற்றம்பெற்றிருந்தது.அதேநேரத்தில், பங்குச் சந்தை மூலதனம் ரூ.7,25,401.31 கோடி குறைந்து ரூ.1,44,48,465.69 கோடியாக இருந்திருந்தது.

 2019 ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சியும், இந்தியப் பங்குச் சந்தை வளர்ச்சியும் வேறு வேறு திசையில் காணப்பட்டன. பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருந்தபோதும் முக்கிய பெரிய நிறுவனப் பங்குகள் சிலவற்றின் (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டி.சி.எஸ், ஹெச்.சி.எஃப்.சி பேங்க், ஹெச்.சி.எஃப்.சி போன்றவை) விலை ஏற்றம் கண்டதால் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் ஏற்றம் கண்டன.

மற்றப்படி, மிட் கேப், ஸ்மால் கேப் பங்குகள், ஃபண்ட்கள் இழப்பிலேயிலே இருக்கின்றன. புதிய ஆண்டான 2020-ல் இதேபோன்ற நிலை தொடரக்கூடும். ஏனெனில், இந்தியப் பொருளாதாரம் மீண்டுவருவதற்கு சில காலம் பிடிக்கும். ஆனால் பங்குச் சந்தை ஏற்றத்தில் பயணிக்கக்கூடும். 2019-ல், சென்செக்ஸ் 40000 என்ற புள்ளிகளையும், நிஃப்டி 12000 புள்ளிகளையும் தாண்டி சாதனைபடைத்துள்ளன. 2019, டிசம்பர் 20-ல் வரலாற்று உச்சமாக சென்செக்ஸ் 41809.96 புள்ளிகளை எட்டியது. சந்தை மூலதனத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தைப் பிடித்தது. டி.சி.எஸ் இரண்டாவது இடத்தையும், ஹெச்.சி.எஃப்.சி பேங்க் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...