மொத்தப் பக்கக்காட்சிகள்

கார்வி பங்கு அடமானப் பிரச்னை: சிறு முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?


கார்வி  பங்கு அடமானப் பிரச்னை: சிறு முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

பங்கு முதலீட்டாளர்களின் பங்குகளை அடமானம் வைத்து, கடன் பெற்ற கார்வி நிறுவனத்துக்குப் புதிய முதலீட்டாளகளைச் சேர்க்கவும், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவும் செபி அமைப்பு 2019 நவம்பர் 22-ம் தேதி தடை விதித்தது.

சுமார்  83,000 முதலீட்டாளர்களுக்கு அடமானம் வைக்கப்பட்ட பங்குகள், அவர்களின் டீமேட் கணக்குகளில் மீண்டும் வரவு வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 7,000 முதலீட்டாளர்களுக்குப் பங்குகளைத் திருப்பி அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, முதலீட்டாளர்களின் டி.பி கணக்கில் பங்குகள் இருந்தால், பிரச்னை எதுவும் இல்லை.



அப்படியல்லாமல் தரகு நிறுவனத்தின் பூல் (Pool) கணக்கில் பங்குகள் இருந்தால், அவை அடமானம் வைக்கப்பட்டிருக்கலாம்.

உங்கள் பங்குகள் அடமானம் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதைஹோல்டிங் ஸ்டேட்மென்ட்’- வைத்து தெரிந்துகொள்ளலாம்.

இதற்கு, முதலீட்டாளர்கள் டீமேட் கணக்கு வைத்திருக்கும் கார்வி கிளையை அணுகிஹோல்டிங் ஸ்டேட்மென்ட்பெறலாம்.

அங்கு கிடைக்கவில்லை எனில், service@karvey.com முகவரிக்கு மின்னஞ்சல் செய்து பெறலாம்.

ஹோல்டிங் ஸ்டேட்மென்ட்டை அனைத்து முதலீட்டாளர்களும்  ஆறு மாதம் அல்லது ஆண்டுக்கு ஒருமுறை பார்த்துக்கொள்வது நல்லது.

கார்வி பங்கு அடமானப் பிரச்சினையில் செபி அமைப்பு 2020  ஜனவரி 6 ஆம் தேதி இறுதி முடிவை அறிவிக்க கூடும் என்கிறார்கள்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...