மொத்தப் பக்கக்காட்சிகள்

டைகான் சென்னை 2019 மாநாடு - ஜென் இ இணைந்து நடத்துகிறது..!


டைகான் சென்னை 2019 மாநாடு - ஜென் இ இணைந்து நடத்துகிறது

சென்னை, செப்டம்பர் 30, 2019:சென்னையில்`டைகான் சென்னை 2019' என்னும் பிரகாசமான எதிர்கால வணிக சூழல் தொடர்பான மாநாட்டை அக்டோபர் 11, 12-ந்தேதிகளில் டை சென்னை - ஜென் இ ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இந்தியாவின் துவக்க சூழலியல் அமைப்பும், வணிக நடைமுறைகளின் எதிர்கால இயக்கவியலும் மிகப்பெரிய மாற்றத்திற்கு உட்பட்டதாகும். `தலைமுறை என்ன கிளிக் செய்கிறது' என்ற சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக 12வது பதிப்பான`டைகான் சென்னை 2019'மாநாடு சென்னையில் அக்டோபர் 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழில்முனைவோர்கள் பங்கேற்கிறார்கள். இந்த 2 நாள் மாநாட்டில் அனுபவமுள்ள தொழில்முனைவோர், சிந்தனைத் தலைவர்கள், கருத்தியலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பேர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில் `ஜென் இ ˜ எதிர்காலம் தயாரா?' என்னும் கருப்பொருள் அடிப்படையில் இந்த தலைமுறை தொழில்முனைவோரை புரிந்துகொள்ளும் விதமான அமர்வு நடைபெறும். இந்த மாநாடு வெற்றிகரமான தொழில்முனைவோர், அனுபவமுள்ள தொழில் வல்லுனர்கள், தொலைநோக்குத் தலைவர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோரின் சூழலியல் அமைப்பை ஒன்றிணைத்து, உற்சாகமான, வேகமாக நகரும் எதிர்காலத்தில் வணிகம் செய்வதற்கான அனைத்து அம்சங்களையும் விவாதிக்க உதவி செய்யும்.


இந்த மாநாட்டின் 2வது நாளான அக்டோபர் 12-ந்தேதி 1200 பிரதிநிதிகள் பங்கேற்கும் அமர்வு ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில்  நடைபெறுகிறது. இதில் பல்வேறு தொழில்முனைவோர்களின் ஆய்வுகள் வெளியிடப்பட உள்ளது. கேம், பூரணதா ஆகியவையுடன் இணைந்து டைசென்னை நடத்தும் டை சந்தை கண்காட்சி அன்றைய தினம் 2 மணி முதல்  நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். இதுதவிர 11-ந்தேதி மாநாட்டில் பயிற்சி பட்டறைகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் ஆகியவை நடைபெறும்.

இது குறித்து டை சென்னை தலைவரும், கவின்கேர் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சி.கே. ரங்கநாதன் கூறுகையில், டைகான் மாநாடு, பல்வேறு தொழில் வல்லுனர்களிடம் இருந்தும் சிந்தனைத் தலைவர்களிடம் இருந்தும் வணிகங்களின் மறைக்கப்பட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ள உதவிடும் மாநாடு ஆகும். வழிகாட்டுதல், நெட்வொர்க்கிங் மற்றும் கல்வி ஆகியவற்றின் மூலம் வியத்தகு நுண்ணறிவுகளுடன், தொழில் முனைவோர் தங்கள் வணிகத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளும் ஒரே இடமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. இந்த ஆண்டிற்கான மாநாடு அனைத்து தொழில்முனைவோரின் நுணுக்கங்களையும் அணுகுமுறையையும் புரிந்துகொள்ள உதவி செய்வதோடு, தொழில்முனைவோர் எதிர்காலத்தில் தயாராக இருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கும். இது தொலைநோக்கு விவாதங்களுடன் ஒரு ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த மாநாடாக இருக்கும் என்று தெரிவித்தார்.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...