மொத்தப் பக்கக்காட்சிகள்

ஹலோ செயலி மூலம் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவை கண்டு களிக்கலாம்..!



ஹலோ, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது (SIIMA) விழாவுக்கான அதிகாரப்பூர்வ சமூக ஊடக பங்குதாரர் ஆக பொழுதுபோக்கு துறையுடன் அதன் உறவுகளை வலுப்படுத்துகிறது

ஹலோ செயலி (Helo)  தென்னிந்திய பொழுதுபோக்கு துறை உடனான தனது உறவுகளை மேலும் வலுப்படுத்தி உள்ளது. 

பொழுதுபோக்குத் துறை சமூக ஊடகங்களை வலுப்படுத்தி வருகிறது என்று கூறலாம். பொழுதுபோக்கிற்கான ரசிகர்கள் அதிகம் உள்ள இடம் சமூக ஊடகங்கள். 

இந்த சமூக ஊடகங்கள் மூலம் பொழுதுபோக்கு அம்சங்கள் ரசிகர்களை அதிகம் சென்றடைகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடுகையில் தற்போது சமூக ஊடகங்களின் பயன்பாடு பலமடங்கு உயர்ந்துள்ளது. நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது, மீம்சை பகிர்ந்து கொள்வது, ஸ்டேட்டஸ் எனப்படும் நிலையை தெரிவிப்பது, தகவல்களை பகிர்ந்து கொள்வது, விருப்பம் அல்லது விருப்பமின்மை எனப்படும் லைக் அல்லது டிஸ்லைக் பதிவிடுவது போன்றவற்றுடன் சமூக ஊடகங்களின் பயன்பாடு நின்று விடுவது இல்லை. 

தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், பல்வேறு தலைப்புகளில் விரிவாக விவாதிக்கவும் சமூக ஊடகங்கள் விரிவான மற்றும் வலுவான தளம் அமைத்துக் கொடுத்துள்ளன.
      தோஹாவின் கத்தார் நகரில் நடைபெறவுள்ள 8 வது சர்வதேச திரைப்பட விருது விழாவுக்காக ஹலோ (Helo) கூட்டு சேர்ந்துள்ளது.
      ஹலோ, செயலி (app) மூலம் அதனை பயன்படுத்துபவர்கள் நேரடியாக (live-streaming) விருது வழங்கும் விழாவை காண வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இந்தியா, ஆகஸ்ட்  7, 2019: ஹலோ (Helo), இந்தியாவின் முன்னணி சமூக ஊடகத் தளமாக (social media platform) உள்ளது. இது,  சமீபத்தில் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) விழாவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பங்குதாரர் ஆகியிருப்பதை அறிவித்துள்ளது. இதன்படி,  ஹலோ, அதன் செயலி (app) மூலம் அதனை பயன்படுத்துபவர்கள் நேரடியாக (live-streaming) விருது வழங்கும் விழாவை காண வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறது.  இந்த விழா தோஹாவின் கத்தார் நகரில் ஆகஸ்ட் 15 மற்றும் 16 ம் தேதிகளில் நடக்கிறது.
(தென்னிந்திய திரையுலகின் பிரபலங்களான மன்ஜிமா மோகன், இவானா, அமிர்தா அய்யர், ரைசா வில்சன் )
(முன்னணி நடிகை மன்ஜிமா மோகன்)
ஹலோ, பிராந்தியத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அமைப்புடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன்படி, விருது விழாவின் சிறப்பம்சங்கள், உற்சாகமான நேரடி தருணங்கள் ஆகியவற்றை 14 இந்திய மொழிகளில் பகிர்வதன் மூலம் ஹலோ செயலியை பயன்படுத்துபவர்கள் தங்களுக்குப் பிடித்த திரை நட்சத்திரங்களுடன் நெருங்கி வர முடியும்..
இந்தக் கூட்டின் ஒரு பகுதியாக, SIIMA ஒரு சிறப்பு வகை விருதை அறிமுகப்படுத்தியுள்ளது.ஹலோ மோஸ்ட் பாப்புலர் செலிபிரிட்டி (‘Helo Most Popular Celebrity’) என்பது அந்த விருதாகும். இதற்காக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 4 மொழிகளில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களை பட்டியலிட ஹலோ செயலி-ல் பிரத்தியேகமாக வாக்களிப்பு  நடைபெறும். ஹலோ பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிகபட்ச வாக்கு பெற்றவர்கள், வெற்றி பெற்ற நட்சத்திரமாக தேர்வு செய்யப்படுவார். இந்த விருது, SIIMA விருது  வழங்கும் விழாவில் வழங்கப்படும்.
முதல் முறையாக இணையத்தை (internet)  பயன்படுத்துபவர்களுக்கு தகவல் இடைவெளியைக் குறைப்பதற்கும், முக்கிய இந்திய மொழிகளில் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளில் உள்ளடக்கத்தைக் கண்டுபிடித்து பயன்படுத்துவதற்கும் ஒரு தளத்தை வழங்குவதற்காக ஹலோ தொடங்கப்பட்டது. SIIMA உடனான எங்கள் கூட்டு மூலம் பிரபலங்கள் மிகவும் அணுகக்கூடியவர்களாக மாறி இருக்கிறார்கள். மேலும், ஹலோ பயனர்கள் நிகழ்நேரத்தில் (real-time) பிரத்யேக உள்ளடக்கத்தை அணுகுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் மற்றும் செயலி மூலம் தங்களுக்குப் பிடித்த திரை நட்சத்திரங்களுக்கு வாக்கு அளிக்கலாம்என்று ஹலோ நிறுவனத்தின்  பொழுதுபோக்கு வணிக மேம்பாட்டு பிரிவின் தலைவர் சந்திதா நம்பியார் ( Chhandita Nambiar, Head of Entertainment Business Development for Helo) தெரிவித்தார்.
SIIMA  ஒரு மதிப்பிற்குரிய மற்றும் அதிகம் பார்க்கப்படும் தென்னிந்திய திரைப்பட விருது நிகழ்ச்சி ஆகும். உலகம் எங்கும் உள்ள திரைப்பட ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கும் ஒரு நிகழ்வாக இது இருக்கும் என உறுதியளிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு துறையில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய பிறகு, அதன் முந்தைய தென்னிந்திய சர்வதேச சினிமா விருது விழாக்களை துபாய், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஷார்ஜாவில் SIIMA நடத்தி உள்ளது. இந்த முறை அதன் 8வது விருது வழங்கும் விழாவை தோஹாவில் கத்தார் நகரில் நடத்த உள்ளது. ஹலோ தற்போது ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உட்பட 14 இந்திய பிராந்திய மொழிகளில் கிடைக்கிறது.
இந்த ஹலோ செயலி, பயன்பாட்டில் மிகவும் பிரபலமான மொழிகளில் கன்னடம் ஒன்றாகும், இது பயனானிகளை புதிய நண்பர்களை உருவாக்க, நகைச்சுவைகள், ட்வீட், மீம்ஸ்கள், வாட்ஸ்அப் நிலை புதுப்பிப்புகள், வாழ்த்துகள், மேற்கோள்கள் மற்றும் அன்றைய சமீபத்திய பிரபலமான செய்திகள் மற்றும் கருத்துகளுடன் தெரிவிக்க உதவுகிறது.
சமீபத்திய புதிய விஷயங்களை (latest updates) பெற ஹலோவில்  SIIMA  - பின்தொடரவும்!


 ஹலோவின் இயந்திர கற்றல் (machine learning) இயங்கும் காட்சி தளம் குறிப்பாக, தாய்மொழிகளில் தொடர்பு கொள்ள விரும்பும் இந்திய மொபைல் பயன்பாட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது,
பயன்படுத்த எளிதான கருவிகளைக் கொண்டு தரமான உள்ளடக்கத்தை உருவாக்க, புதிய நண்பர்களை உருவாக்க, சமீபத்திய மற்றும் சிறந்த பிரபலமான நகைச்சுவைகள், மீம்ஸ்கள், ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகள், வாழ்த்துகள், மேற்கோள்கள், மற்றும் பாலிவுட் செய்திகளைப் பகிர இது பயனர்களுக்கு உதவுகிறது. இந்தச் செயலியை தற்போது பிரபலங்கள், மற்றும் பொது பயனர்கள் உட்பட 50 மில்லியன் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்.  கூடுதல் தகவல்கள் மற்றும் ஹலோ செயலியை ஐ ஓஎஸ் அல்லது கூகுள் பிளே (iOS or Google Play) மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
ஹலோ பற்றி (About Helo)
ஹலோ (Helo) சர்வதேச நாடுகளுக்காக உருவாக்கப்பட்ட முன்னணி சமூக ஊடக தளம் ஆகும்.  ஹலோவின் நோக்கம், உங்கள் வாழ்க்கையை வண்ண மயமாக்குவது மற்றும் அனைவரையும் ஒன்றிணைப்பது, உங்கள் சொந்த மொழியில் உள்ளடக்கத்தை உருவாக்க மற்றும் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், உங்கள் பரந்த சமூகத்துடன் இணைப்பது ஆக உள்ளது. இந்தச் செயலி, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட 14  மொழிகளில் கிடைக்கிறது. 2018 ஆம் ஆண்டில் கூகிள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் ஹலோவும் உள்ளது
புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்ட ஹலோ, இந்தியா மற்றும் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள்,  ஓமன், குவைத், கத்தார், நேபாளம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் ஐ.ஓ.எஸ் (iOS) மற்றும்  மற்றும் ஆண்ட்ராய்ட் (Android) போன்களில்  கிடைக்கிறது.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு பார்வையிடவும்  www.helo-app.com


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...