மொத்தப் பக்கக்காட்சிகள்

1,21,135 ஏஜென்ட்களுடன் எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ்


எஸ்.பி. லைஃப் இன்சூரன்ஸ் 

  1,21,135  ஏஜென்ட்களுடன்  எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ் 

எஸ்.பி. லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (SBI Life Insurance Company Limited), கடந்த 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)  மற்றும் பிஎன்பி பரிபா கார்டிஃப் எஸ். ஏ (BNP Paribas Cardif S.A.) இணைந்து கூட்டு நிறுவனமாக (joint venture) ஆரம்பிக்கப்பட்டது.


இது இந்தியாவின் முன்னனி ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. எஸ்.பி. லைஃப்-ன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ. 20.0 பில்லியனாகவும் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.  10.0 பில்லியனாகவும் ஆகவும் இருக்கிறது. 
எஸ்.பி. லைஃப் ஒருங்கிணைந்த ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களை மலிவான பிரீமியத்தில் அளித்து வருகிறது. உயர்தர வாடிக்கையாளர் சேவை, உலக தர செயல்பாட்டை கொண்டுள்ளது. இந்த நிறுவனம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களை தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு அளித்து வருகிறது. எஸ்.பி. லைஃப் பல்வேறு விநியோக நெட் ஒர்க்களை கொண்டுள்ளது. நாடு முழுக்க உள்ள 22,000-க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ வங்கி கிளைகள் மூலம் பாலிசிகளை விநியோகித்து வருகிறது. 
இந்த நிறுவனம், 2019 ஜூன் 30 நிலவரப்படி 1,21,137 செயல்படும் ஏஜென்ட்களை கொண்டுள்ளது. மேலும், நேரடி விற்பனை, கார்ப்பரேட் முகவர்கள்,புரோக்கர்கள்,இன்ஷூரன்ஸ்சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், இடைத்தரகர்கள் மூலமும் பாலிசிகளை விநியோகித்து வருகிறது. 2019 ஜூன் 30 நிலவரப்படி, இந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களின் தேவையை சிறப்பாக மேற்கொள்ள 922 அலுவலகங்கள் உள்ளன. 2019 ஜூன் 30 நிலவரப்படி ரூ. 1,469.5  பில்லியன் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் பங்குகள், தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பாம்பே பங்குச் சந்தையில்  (BSE) பட்டியலிடப்பட்டுள்ளன.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...