நிதி இலக்கு
அடிப்படையிலான முதலீட்டை எளிதாக்கும் புதிய திட்டம் – லைஃப் சைக்கிள் மியூச்சுவல்
ஃபண்டுகள்..! Life Cycle Funds
ஏ.ஜி.வி ஸ்ரீநாத்
விஜய், இணை நிறுவனர், https://gbvmfservices.in/
மியூச்சுவல்
ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு இலக்கை அடிப்படையாகக் கொண்டு முதலீடு செய்வதை
எளிதாக்கும் வகையில் இந்தியாவில் ஒரு புதிய வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை
அறிமுகப்படுத்தியுள்ளது செபி (Securities and Exchange Board of India -SEBI)..
இந்தப் புதிய திட்ட வகை லைஃப்
சைக்கிள் ஃபண்டுகள் (Life Cycle Funds) என்று அழைக்கப்படுகிறது.
முதலீட்டு
சொத்து பகிர்வு:
இந்த
திட்டத்தின் முக்கிய நோக்கம், முதலீட்டாளர்கள் நீண்ட கால இலக்குகளை அடையும்போது
பங்குச் சந்தை ரிஸ்க்கை தானாகவே கட்டுப்படுத்தும் வகையில் முதலீட்டு சொத்து பகிர்வை (Asset
Allocation) காலத்தின்படி மாற்றுவது ஆகும்.
பொதுவாக, பல
முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் அதிக ரிஸ்க் எடுத்துக் கொள்வார்கள் அல்லது ஓய்வு
காலத்திற்கு நெருங்கும்போது திடீரென மிகவும் பாதுகாப்பான முதலீட்டுகளுக்கு
மாறிவிடுவார்கள். இந்தத் தவறுகளை தவிர்க்கும் வகையில் லைஃப் சைக்கிள் ஃபண்டுகள் தானாகவே
முதலீட்டு கலவையை மாற்றும் “Glide Path Strategy” என்ற முறையை
பயன்படுத்துகின்றன.
லைஃப் சைக்கிள் ஃபண்ட் என்றால் என்ன?
லைஃப்
சைக்கிள் ஃபண்டுகள் என்பது ஒரு நிர்ணயிக்கப்பட்ட
கால அவகாசம் (Target Maturity) கொண்ட ஓப்பன்-எண்டட் மியூச்சுவல்
ஃபண்ட் திட்டமாகும்.
இந்தத்
திட்டங்களில் முதலீடு செய்யும் போது, முதலீட்டாளர் எதையும் தனியாக மாற்ற
தேவையில்லை. திட்ட மேலாளர் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒரு கால அட்டவணை (Glide Path)
அடிப்படையில் முதலீட்டை மாற்றுவார்.
· முதலீட்டு ஆரம்ப
ஆண்டுகளில் பங்கு முதலீடு
அதிகமாக இருக்கும்
· காலம் செல்ல செல்ல
கடன் சந்தை சார்ந்த (Debt)
முதலீடு அதிகரிக்கும்
· இலக்கை நெருங்கும்
ஆண்டுகளில் பாதுகாப்பான
முதலீடு அதிகமாக இருக்கும்
இதனால்,
முதலீட்டாளர்கள் இலக்கை அடையும் நேரத்தில் சந்தை வீழ்ச்சியால் ஏற்படும் அபாயம்
குறைக்கப்படுகிறது.
முதலீடு
செய்யப்படும் சொத்து வகைகள்
லைஃப்
சைக்கிள் ஃபண்டுகள் பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்ய முடியும்.
· ஈக்விட்டி (Equity)
· கடன் திட்டங்கள் (Debt – AA
rating மற்றும் அதற்கு மேல்)
· தங்கம் மற்றும் வெள்ளி
ETF
· Infrastructure
Investment Trusts (InvITs)
· Commodity derivatives
இந்தப்
பல்வேறு சொத்து வகைகள் முதலீட்டில் Diversification
எனப்படும் பரவலான பாதுகாப்பை வழங்குகின்றன.
Glide Path
Strategy எப்படி வேலை செய்கிறது?
லைஃப்
சைக்கிள் ஃபண்டுகள்- இன் முக்கிய அம்சம் Glide Path Strategy ஆகும். இது
முதலீட்டின் கால அவகாசத்தைப் பொறுத்து பங்குகள் மற்றும் கடன் பத்திர முதலீட்டு
அளவை மாற்றும்.
30 ஆண்டு காலம் கொண்ட லைஃப் சைக்கிள் ஃபண்டுகள் எடுத்துக்காட்டு
|
இலக்கு
அடைய இருக்கும் காலம் |
பங்குகள்
முதலீடு |
கடன்
பத்திர முதலீடு |
தங்கம்
/ InvIT |
|
15–30 ஆண்டுகள் |
65% – 95% |
5% – 25% |
0 – 10% |
|
10–15 ஆண்டுகள் |
65% – 80% |
5% – 25% |
0 – 10% |
|
5–10 ஆண்டுகள் |
50% – 65% |
5% – 25% |
0 – 10% |
|
3–5 ஆண்டுகள் |
35% – 50% |
25% – 50% |
0 – 10% |
|
1–3 ஆண்டுகள் |
20% – 35% |
25% – 65% |
0 – 10% |
|
1 ஆண்டுக்கு குறைவாக |
5% – 20% |
25% – 65% |
0 – 10% |
இந்த அட்டவணை
காட்டுவது என்னவென்றால், முதலீட்டுக் காலம்
அதிகமாக இருக்கும்போது பங்கு முதலீடு அதிகமாகவும், இலக்கு நெருங்கும் போது கடன்
சந்தை முதலீடு அதிகமாகவும் இருக்கும்.
முதலீட்டு
கால வரம்பு:
லைஃப்
சைக்கிள் ஃபண்டுகள் பொதுவாக கீழ்க்கண்ட கால வரம்பில் வெளியிடப்படுகின்றன.
|
திட்ட
காலம் |
விளக்கம் |
|
5 ஆண்டுகள் |
குறுகிய கால இலக்குகளுக்கு |
|
10 ஆண்டுகள் |
நடுத்தர இலக்குகளுக்கு |
|
15–30 ஆண்டுகள் |
ஓய்வு திட்டம் அல்லது குழந்தை கல்வி போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு |
ஒரு
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அதிகபட்சம் 6
லைஃப் சைக்கிள் ஃபண்டுகள் திட்டங்கள் மட்டும் வெளியிட அனுமதி
உள்ளது.
முன்கூட்டியே
பணம் எடுப்பதற்கான கட்டணம்:
லைஃப்
சைக்கிள் ஃபண்டுகள் நீண்ட கால முதலீட்டை ஊக்குவிக்க வெளியேறும் கட்டணம் (Exit
Load) வசூலிக்கின்றன.
|
முதலீட்டு
காலம் |
வெளியேறும்
கட்டணம் |
|
முதல் ஆண்டு |
3% |
|
இரண்டாம் ஆண்டு |
2% |
|
மூன்றாம் ஆண்டு |
1% |
|
3 ஆண்டுகளுக்குப் பிறகு |
வெளியேறும் கட்டணம் இல்லை |
இதன் நோக்கம்
முதலீட்டாளர்கள் திட்டத்தை நீண்ட காலம் தொடர்வதை உறுதி செய்வதாகும்.
]யாருக்கு
இந்தத் திட்டம் பொருத்தமானது?
லைஃப்
சைக்கிள் ஃபண்டுகள் கீழ்க்கண்ட முதலீட்டாளர்களுக்கு மிகவும் பொருத்தமானவை.
1.
நீண்ட கால இலக்கு கொண்டவர்கள்
ஓய்வு வாழ்க்கை அல்லது குழந்தைகளின் உயர் கல்வி போன்ற இலக்குகளுக்காக முதலீடு
செய்பவர்கள்.
2.
பங்குச் சந்தையை தொடர்ந்து கண்காணிக்க முடியாதவர்கள்
போர்ட்ஃபோலியோவை அடிக்கடி மாற்ற முடியாத முதலீட்டாளர்களுக்கு இது உதவும்.
3.
சொத்து ஒதுக்கீடு (Asset Allocation) பற்றி தெரியாதவர்கள்
பங்குச் சந்தை, கடன் சந்தை, தங்கம் / வெள்ளி ஆகியவற்றில் எவ்வளவு முதலீடு செய்ய
வேண்டும் என்பது பற்றி குழப்பம் உள்ளவர்களுக்கு இது ஓர் எளிய தீர்வாக இருக்கும்.
லைஃப் சைக்கிள் ஃபண்டுகள் இன் முக்கிய நன்மைகள்
· தானாகவே சொத்து ஒதுக்கீடு மாற்றம்
· இலக்கு சார்ந்த
முதலீட்டுக்கு (Goal-based investing) ஏற்றது
· பல சொத்து வகைகளில்
பிரித்து முதலீடு (Diversification)
· முதலீட்டாளர்களுக்கு
முதலீட்டு ஒழுங்கு
உருவாக்குகிறது
· ஓய்வு திட்டங்களுக்கு
மிகவும் பொருத்தமானது
குறைகள்
என்ன?
லைஃப்
சைக்கிள் ஃபண்டுகள் சில குறைகளும் கொண்டுள்ளன.
· நிதி மேலாளருக்கு
சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு
எடுக்க சுதந்திரம் குறைவு
· திட்டம் முடியும்
நேரத்தில் பங்குச் சந்தை சூழல் மோசமாக இருந்தால் மறுமுதலீடு சிக்கல்
· புதிய வகை திட்டம்
என்பதால் வருமான வரலாறு
குறைவு
· வருமான வரி விதிப்பு குறித்து
முழுமையான தெளிவு இன்னும் இல்லை
லைஃப்
சைக்கிள் ஃபண்டுகள் என்பது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ஒரு முக்கியமான
புதிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்களின் வாழ்க்கை
இலக்குகளுக்கு ஏற்ப முதலீடு செய்ய உதவும் வகையில் இந்தத் திட்டங்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன.
பங்கு
முதலீட்டின் வளர்ச்சி வாய்ப்பையும், கடன் சார்ந்த முதலீட்டின் பாதுகாப்பையும்
இணைக்கும் இந்தத் திட்டங்கள் “Set
and Forget” முதலீட்டு முறையை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக
இருக்கலாம்.
எனினும்,
முதலீடு செய்வதற்கு முன் தனிப்பட்ட இலக்கு, ரிஸ்க் சகிப்புத்தன்மை மற்றும் கால
அவகாசம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்வது அவசியம்.
கூடுதல் விவரம்
மற்றும் முதலீட்டுக்கு
ஏ.ஜி.வி ஸ்ரீநாத்
விஜய், இணை நிறுவனர், https://gbvmfservices.in/
குவாலிஃபைடு பர்சனல்
ஃபைனான்ஸ் புரபஷனல் (QPFP) ஆவார். இவரின் தந்தையும் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்
ஆவார். பொள்ளாச்சியை சேர்ந்த இவர் சுமார் 2,000 தனிநபர்களுக்கு நிதிச் சேவை அளித்து
வருகிறார்.
நாணயம் விகடன் இதழில் வெளியான ஏ.ஜி.வி
ஸ்ரீநாத் விஜய் கட்டுரைகளை படிக்க https://bit.ly/4uj1I1Y
தொலைபேசி: +91 98431 86896
வாட்ஸ்அப்: +91 98431 86896
மின்னஞ்சல்: gbvmfservices@gmail.com
அலுவலக முகவரி:
எண் 33, எஸ்.வி. டவர்ஸ்,
நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 001,
தமிழ்நாடு.
அலுவலக நேரம்:
திங்கட்கிழமை – சனிக்கிழமை
காலை 10:00 மணி – மாலை 06:30 மணி.
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.



