இலவசம் போலத் தோன்றும் ஃபின்டெக் முதலீட்டு செயலிகளின் மறைமுகச் செலவுகள்
என்னென்ன தெரியுமா?
அஜ்மல், நிர்வாக இயக்குநர், www.finwallet.co.in
“இலவசம்” என்ற பெயரில் உங்கள் பணம் எப்படி பறிக்கப்படுகிறது?
இன்றைய டிஜிட்டல் காலத்தில் வங்கி வேலைகள், முதலீடு, பண பரிமாற்றம்,
கடன், இன்ஷூரன்ஸ் என அனைத்தும் மொபைல் செயலிகளுக்குள் வந்துவிட்டன. வங்கிக் கிளைக்கு
செல்வதைவிட, ஒரு செயலியைத் திறந்து சில நொடிகளில் எல்லாவற்றையும் முடிக்க முடிகிறது.
இதனால் பலரும் நினைப்பது:
“இந்த
செயலிகள் எல்லாம் இலவசம், எந்தக் கட்டணமும் இல்லை” ஆனால் உண்மை என்ன தெரியுமா?
இலவசம் போலத் தெரியும் பல சேவைகளுக்குப் பின்னால் மறைமுகச் செலவுகள்
நிறைய இருக்கின்றன.
பழைய காலத்தின் நேர்மையான முறை – இன்று இல்லை..!
முன்பு தொழில்நுட்ப உலகில் ஒரு கருத்து இருந்தது: “நீங்கள் பார்ப்பதே
உங்களுக்கு கிடைப்பது” அதாவது, மறைமுக கட்டணங்கள், குழப்பங்கள் இல்லாத நேர்மையான நடைமுறை
ஆகும்.
ஆனால் இன்றைய ஃபின்டெக் செயலிகளின் உலகில் நிலைமை முற்றிலும்
மாறிவிட்டது. நீங்கள் பார்ப்பது ஒன்றாக இருக்கும் – நீங்கள் உண்மையில் செலுத்துவது
வேறாக இருக்கும்.
ஃபின்டெக் செயலிகள் எப்படி பணம் சம்பாதிக்கின்றன?
பெரும்பாலான செயலிகள் விளம்பரம் செய்வது:
- இலவச
சேவை
- கட்டணம்
இல்லை
- கமிஷன்
இல்லை
- இலவச
முதலீடு
ஆனால் இவை முழு உண்மை அல்ல. அவர்கள் வருமானம் ஈட்டும் வழிகள்
பெரும்பாலும் பயனர்களுக்குத் தெரியாமலேயே நடக்கின்றன.
1. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் மறைமுகக் கட்டணம்:
பல முதலீட்டு செயலிகள் சொல்வது:
“எங்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு முற்றிலும் இலவசம்” ஆனால்
உண்மையில் நடப்பது என்ன?
பல செயலிகள் உங்களை, அதிக கட்டணமுள்ள திட்டங்களில் முதலீடு செய்ய
தூண்டும், “டைரக்ட் திட்டம்” பதிலாக “ரெகுலர் திட்டம்” தேர்வு செய்ய வைக்கும்.
இதன் மூலம், உங்கள் செலுத்தும் கட்டணம் அதிகரிக்கும். உங்கள்
லாபம் குறையும். நீண்ட காலத்தில் பெரும் இழப்பு ஏற்படும்.
ஆனால், இதை செயலி நேரடியாக “கட்டணம்” என்று காட்டாது. இது மிகப்பெரிய
மறைமுகச் செலவு ஆகும். ஆனால், அதற்கு ஏற்ப சேவை கிடைக்காது.
பொதுவாக இது போன்ற முதலீட்டுக் கணக்கைப் பராமரிப்பதற்குச் கூடுதல்
தொகை வசூலிக்கப்படும். உதாரணத்திற்கு, ஒருவர் ரூ. 1 லட்சம் பரிவர்த்தனை மேற்கொண்டால்
சுமார் ரூ. 1,000 கட்டணங்கள் செலுத்த வேண்டி வரும்
2. இலவச டீமேட் கணக்கு என்ற மாயை
பங்கு சந்தை செயலிகள் பல கூறும் விளம்பரம்:
“இலவச கணக்கு – கட்டணம் இல்லை”
ஆனால் நடைமுறையில், பராமரிப்பு கட்டணம், பரிவர்த்தனை கட்டணம்,
கணக்கு பராமரிப்பு கட்டணம், கூடுதல் சேவை கட்டணம் எனப் பலவிதமான கட்டணங்கள் பின்னால்
சேர்க்கப்படும்.
பயனர்கள் இதை கவனிக்காமல் விட்டால், ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில்
பணம் வீணாகும்.
3. கடன் செயலிகளில் மறைந்திருக்கும் செலவுகள்
இப்போது பல செயலிகள் கூறுவது, “5 நிமிடத்தில் உடனடி கடன்”, ஆனால்
அந்த கடனுக்குப் பின்னால், செயலாக்கக் கட்டணம், ஆவணக் கட்டணம், சேவை கட்டணம், அதிக
வட்டி விகிதம் எனப் பல செலவுகள் சேர்க்கப்படுகின்றன.
இதனால், நீங்கள் நினைத்ததைவிட பல மடங்கு அதிகமாக திருப்பிச்
செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.
4. இன்ஷூரன்ஸ் விற்பனையில் நடக்கும் விளையாட்டு:
பல செயலிகள் இன்ஷூரன்ஸ் திட்டங்களை பரிந்துரைக்கும். ஆனால் பெரும்பாலும்,
உண்மையில் நல்ல திட்டங்களை விட அதிக கமிஷன் தரும் திட்டங்களையே அதிகம் காட்டுவார்கள்
இதனால் பயனர்களுக்கு தேவையற்ற அல்லது அதிக செலவுள்ள திட்டங்கள்
திணிக்கப்படுகின்றன.
5. உங்கள் தகவலே – அவர்களின் பெரிய வருமானம்:
நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்தவில்லை என்றால், நீங்கள்தான்
அந்த நிறுவனத்தின் உண்மையான தயாரிப்பு!
செயலிகள் உங்களிடம் இருந்து சேகரிப்பது, உங்கள் வருமான விவரம்,
செலவு பழக்கம், முதலீட்டு விவரங்கள், கடன் வாங்கும் நடைமுறை இந்தத் தகவல்களை வைத்து,
புதிய கடன் விளம்பரம், இன்ஷூரன்ஸ் விற்பனை, தேவையற்ற முதலீட்டு பரிந்துரை எனப் பல வழிகளில்
அவர்கள் வருமானம் ஈட்டுகிறார்கள். இதுவும் ஒரு வகை மறைமுக விலையே.
பயனர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்:
ஃபின்டெக் செயலிகளை பயன்படுத்தும்போது அவசியம் பின்பற்ற வேண்டியவை:
1 “இலவசம்” என்ற வார்த்தையை அப்படியே நம்பாதீர்கள். எல்லா இலவச
சேவைக்கும் பின்னால் ஒரு வணிக நோக்கம் இருக்கும்.
2 மியூச்சுவல் ஃபண்டில் எப்போதும் திட்டங்களைத் தேர்வு செய்யும்
போது உஷாராக இருங்கள்.
3 கட்டண விவரங்களை தெளிவாகப் படியுங்கள்.
4 விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக வாசியுங்கள்.
5. செயலி காட்டும் பரிந்துரைகளை கண்மூடி நம்ப வேண்டாம்.
எப்போதும் விழிப்புணர்வு தேவை..!
ஃபின்டெக் செயலிகள் முதலீட்டுப் பயணத்தை எளிதாக்கியுள்ளன – அதில்
சந்தேகம் இல்லை. ஆனால், வசதி என்பதே இலவசம் என்று அர்த்தமல்ல. இலவசம் என்பதே உண்மையில்
இலவசம் அல்ல.
உங்கள் பணம் எங்கு செல்கிறது, எப்படி செலவாகிறது என்பதைப் புரிந்து
செயல்பட்டால் மட்டுமே, உண்மையான லாபம் கிடைக்கும். தேவையற்ற இழப்புகளைத் தவிர்க்க முடியும்.
நிதி பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இன்றைய ஃபின்டெக் உலகில் –
நீங்கள் பார்ப்பது ஒன்று, நீங்கள் செலுத்துவது வேறு! அதனால் எப்போதும் விழிப்புணர்வுடன்
செயல்படுங்கள்..
கூடுதல் விவரங்களுக்கு
அஜ்மல், நிர்வாக இயக்குநர், www.finwallet.co.in
நாணயம் விகடன் இதழில்
வெளியான அஜ்மல் கட்டுரைகளை படிக்க https://bit.ly/40gwtqn
அஜ்மல். எம்.பி.ஏ (நிதி) பட்டதாரி,
நிதி துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இவர் மதுரையை தலைமையிடமாக கொண்டு ஃபின்வாலட்
(www.finwallet.co.in) என்கிற
நிதிச் சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். சுமார் 9,000 மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு
நிதி சார்ந்த பயிற்சி அளித்துள்ளார். சுமார் ரூ. 600 கோடி சொத்தை நிர்வகித்து வருகிறார்.
10,200-க்கும் மேற்பட்டவர்களுக்கு சேவை அளித்துள்ளார்.
தொலைபேசி
எண்: 91 95855
38454
மின்னஞ்சல்: info@finwallet.co.in
இணையதளம்: www.finwallet.co.in
Capshell
IMF Pvt. Ltd. (ARN: 340786)
FINWALLET
4/6, Flat
No: 8F, இரண்டாம் மாடி,
Parsn Samrudhi Mahal, Parsn Nagar,
Fatima College-க்கு எதிரில்,
Old Dindugal Road,
மதுரை – 625018
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.