மொத்தப் பக்கக்காட்சிகள்

நரேந்திர மோடி புதிய அமைச்சரவை பட்டியல்: 55 அமைச்சர்கள் முழு விவரம்


நரேந்திர மோடி புதிய  அமைச்சரவைபட்டியல்: 55 அமைச்சர்கள் முழு விவரம்

திரு. நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமராக பதவியேற்றார்.
அவருடன் சேர்ந்து கேபினட் அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

இந்நிலையில், புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்கள் பட்டியல்

1. பிரதமர் நரேந்திர  மோடி

பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. வாரணாசி தொகுதியில் காங்கிரஸின் அஜய் ராயை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.


2. ராஜ்நாத்சிங்

உள்த்துறை அமைச்சராக கடந்த ஐந்தாண்டுகளில் பதவி வகித்தவர் ராஜ்நாத் சிங் ஆவார். உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். அங்கு இருக்கும் 80 மக்களவைத் தொகுதியில் ஒன்று தான் லக்னோ. இங்கு போட்டியிட்டு கடந்த முறை மக்களால் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டார்.
பாஜகவின் தேசிய செயலாளராக பதவி வகித்த இவர் கோரக்பூர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். இம்முறையும் லக்னோவில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் இவரை எதிர்த்து ஆச்சரியா ப்ரமோத் கிருஷ்ணம் போட்டியிட்டார். பகுஜன் சமாஜ் + சமாஜ்வாடி கூட்டணி சார்பில் இவரை எதிர்த்து பூனம் சின்ஹா போட்டியிட்டார். 6,33,206 வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார்.

3. அமித்ஷா

மாநிலங்கள் அவையின் உறுப்பினராக இருந்தவர், எல்.கே. அத்வானியின் தொகுதியான குஜராத் காந்தி நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.

4. நிதின்கட்கரி

மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக கடந்த ஆட்சியில் பணியாற்றி வந்தவர். 2014ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் இருக்கும் நாக்பூர் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு அதில் வெற்றியும் கண்டவர். இம்முறையும் அதே தொகுதியில் போட்டியிட்டு 6,60,221 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே பாஜகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்.

5. சதானந்தகவுடா

புள்ளி விபரம் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் அமைச்சராகவும், ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் துறையின் அமைச்சராகவும் அவர் பதவி வகித்து வந்தார்.

6. நிர்மலாசீதாராமன்

இந்திரா காந்திக்குப் பிறகு நாட்டின் பெண் ராணுவ அமைச்சர் என்ற பெருமையப் பெற்றவர் நிர்மலா சீதாராமன் ஆவார். கடந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், மனோகர் பரிக்கர் கோவாவின் முதல்வராக பொறுப்பேற்ற பின்பு 2017 ல் ராணுவ அமைச்சராக பதவி ஏற்றார்.

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றி வந்தவர். ஆந்திராவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் நிதி அமைச்சரவையின் கீழே வரும் ஃபினான்ஸ் மற்றும் கார்ப்பரேட் அஃபெர்ஸ் அமைச்சராக பதவி வகித்து வந்தவர். 2017ம் ஆண்டு கர்நாடகாவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

7. ராம்விலாஸ்பஸ்வான்

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவராவார். இவர் இம்முறை எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை என்றாலும், இவருடைய மகன் சிராக் பஸ்வான் ஜமுய் தொகுதியில் (பிகார்) வெற்றி பெற்று மக்களவை செல்கிறார். தந்தை மாநிலங்களவை உறுப்பினராக தொடர்வதோடு தற்போது அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார். கடந்த ஆட்சியில் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

8. நரேந்திரசிங்தோமர்

ஊரக மேம்பாடு, பஞ்சாயத்ராஜ், சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களின் அமைச்சராக பதவி வகித்து வந்தவர் நரேந்திர சிங் தோமர். கடந்த முறை குவாலியரில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை தன்னுடைய சொந்த ஊர் அமைந்திருக்கும் மொரேனா, மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

9. ரவிசங்கர்பிரசாத்

சட்டம் மற்றும் நீதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் அமைச்சராக பதவி வகித்து வந்தார். பிகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாஹிப் என்ற தொகுதியில் இவர் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால், தன்னுடைய ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அவர்.

10. ஹர்சிம்ரத்பாதல் (அகாலி தளம்)

உணவு பதனிடும் தொழிற்துறை அமைச்சராக இவர் பொறுப்பேற்றிருந்தார். சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்து தெற்கு பஞ்சாப்பில் அமைந்திருக்கும் பதிண்டா தொகுதியில் அம்ரிந்தர் சிங் ராஜா என்ற காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்தும், ஆம் ஆத்மியின் பால்ஜிந்தர் கவுர் என்ற வேட்பாளரையும் எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார்.

11. தாவர்சந்த்கெலோட்

சமூக நீதி மற்றும் மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சராக பணியாற்றி வந்தார். மத்தியப் பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.

12. ஜெய்சங்கர்

தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட எஸ். ஜெய்சங்கர் முன்னாள் வெளியுறவு பாதுகாப்புத்துறை செயலாளராக பதவி வகித்தவர். திருச்சியில் பிறந்த இவர் சென்னையில் கல்லூரி படிப்பினை முடித்தது குறிப்பிடத்தக்கது.

13. ரமேஷ் பொக்ரியால்

14. அர்ஜூன்முன்டா

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர் இவர். முன்பு பழங்குடி மக்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

15. ஸ்மிரிதிஇரானி

காங்கிரஸ் கட்சியின் குடும்பத் தொகுதியான அமேதியில் கடந்த முறை ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். ஆனால் இம்முறை மீண்டும் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் செல்கின்றார்.
16. ஹர்ஷவர்தன்

17. பிரகாஷ்ஜவடேகர்

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். மகாராஷ்ட்ரா மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மக்களவைத் தேர்தல்களை சந்திக்காமல் பதவி ஏற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

18. பியூஷ்கோயல்

இந்த ஆண்டு பாஜக அரசு வெளியிட்ட இடைக்கால பட்ஜெட்டை தாக்கலின் மூலம் மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவர் பியூஷ் கோயல். இந்தியாவின் நிலக்கரி மற்றும் ரயில்வே துறை அமைச்சராக 2017ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக பதவி வகித்த இவர் கடந்த முறை மகாராஷ்ட்ராவில் இருந்து மாநிலங்கள் அவைக்கு தேர்வு செய்யப்பட்டார்

முன்னாள் மத்திய அமைச்சர் வேத் ப்ரகாஷ் கோயலின் மகனான இவருக்கு நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஏற்கனவே ரயில்வே, நிதி, எரிசக்தி, நிலக்கரி போன்ற துறைகளின் அமைச்சராகவும் இவர் பதவி வகித்திருக்கிறார்.

19. தர்மேந்திரபிரதான்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு துறையின் அமைச்சராக கடந்த 5 ஆண்டுகள் பதவி வகித்தார். பிகாரின் மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவருக்கு புதிய பொறுப்புகள் அன்று வழங்கப்பட்டது.

20. முக்தார்அப்பாஸ் நக்வி

மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஐந்தாண்டுகள் பதவி வகித்தவர் முக்தர் அப்பாஸ் நக்வி ஆவார். ஜூலை 8, 2016ம் ஆண்டு முதல் ஜார்கண்ட்டின் ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்து வருகின்றார்.
21. பிரகலாத் ஜோஷி

22. மகேந்திரநாத்பாண்டே

23. அரவிந்த்சாவந்த்

24. கிரிராஜ்சிங்

பிகார் மாநிலத்தில் உள்ள பெகுசராய் தொகுதியில் போட்டியிட்டு 4,22,217 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாவர் இவர். இவரை எதிர்த்து இந்த தொகுதியில் போட்டியிட்டவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் ஆவார்

சி.பி. சார்பில் அவர் போட்டியிட்டார். குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் அமைச்சராக அவர் கடந்த முறை பணி புரிந்து வந்தார்.

25. கஜேந்திரசிங்ஜெகாவத்

கடந்த முறை விவசாயிகள் மற்றும் வேளாண்மை நலத்துறை அமைச்சராக பதவி பொறுப்பேற்றவர் இவர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜோத்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் இவர். இவருக்கு எதிராக இம்முறை, ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாத்தின் மகன் வைபவ் கெலாத் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
26. சந்தோஷ்குமார் கங்வால்
27.
இந்திரஜித் சிங்

28. ஸ்ரீபத்யெஸ்ஸோ நாயக்

ஆயுர் வேதம், யோகக்கலை, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறையின் அமைச்சராக பதவியேற்றிருந்தார். வடக்கு கோவாவில் போட்டியிட்ட இவர் காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் ராயா சோதன்கரை வீழ்த்தி வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ரவி எஸ் நாயக்கை தோல்வியுற செய்தவ்ர் என்பது குறிப்பிடத்தக்கது.
29. ஜிதேந்திர சிங்

30. கிரன்ரிஜிஜு

இவர் மத்திய உள்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்தார். அருணாச்சலம் மேற்கு தொகுதியின் மக்களவை உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

31. பிரகலாத் சிங் படேல்
32. ராஜ்குமார் சிங்
33. ஹர்தீப்சிங் பூரி
34. மன்சூக் மண்டோலியா
35. பஹன் சிங் குலஸ்தே

36. அஸ்வினிகுமார் சவுபே

2014 தேர்தலில் தெற்கு பிகாரில் அமைந்திருக்கும் புக்சார் தொகுதியில் வெற்றி பெற்ற இவர் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் துறையின் அமைச்சராக பதவி ஏற்றார்.

37. அர்ஜூன்ராம் மெக்வால்
38. வி.கே.சிங்
39. கிரிஷன் பால் குர்ஜார்
40. கிஷன் ரெட்டி
41. புருஷோத்தம் ரூபாலா

42. ராம்தாஸ்அத்வாலே

சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் தலைவராக பதவி வகித்தவர் இவர்.

43. சாத்வி நிரஞ்சன் சோதி
44. சஞ்சீவ் பால்யன்
45. சஞ்சய் சாம்ராவ் தோத்ரே
46. அனுராக்சிங் தாகூர்
47. அங்காடி சுரேஷ் சன்னபாசப்பா
48. நித்யானந்த் ராய்
49. ரத்தன்லால் கட்டாரியா
51. சோம் பர்காஷ்
52. ராமேஷ்வர் டெலி
53. பிரதாப் சந்திர சாங்கி
54. கைலாஷ் சவுத்ரி
55. தீபஸ்ரீ சவுத்ரி


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடுகோரமண்டல் இன்டர்நேஷனல் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் செயல் தலைவர் அருண் அழகப்பன் வரவேற்பு மத...