மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆக்சிஸ் வங்கி குயிக்பே ஹோம் லோன்


ஆக்சிஸ் வங்கி,  வீடு வாங்குபவர்களுக்கு அதிக சேமிப்பை அளிக்கும், துறையில் முதன் முதலாக  குறையும் மாத தவணைகள் திட்டம் – ‘குயிக்பே ஹோம் லோன்’ அறிமுகம்

·         கட்டமைக்கப்பட்ட முறையில்  மாதம் தோறும் அதிக அசலை திருப்பி செலுத்துவது மூலம் வாடிக்கையாளர்கள் வட்டியில் சேமிக்க முடியும்.
·         குயிக்பே ஹோம் லோன் திட்டம் மூலம் ரூ. 50 லட்சம் கடனை 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டும் போது வாடிக்கையாளர் ரூ. 11.7 லட்சம் சேமிக்க முடியும்.
·         இ.எம்.ஐ.-களுக்கு (சம மாத தவணைகள்) பதில், குறையும் மாதத் தவணைகள் மூலம் வாடிக்கையாளர்கள் கடனை கட்டலாம்.

மும்பை, டிசம்பர் 12, 2018:  நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி (Axis Bank) இன்றுகுயிக்பே ஹோம் லோன்’ (‘QuikPay Home Loan’) திட்டத்தை இந்தத் துறையிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் வீடு வாங்குபவர்கள் கட்டும் வட்டியில் பெரிய சேமிப்பை பெற முடியும். அடிப்படையில், தொழில் விதிமுறைக்கு எதிராக, ‘குயிக்பே ஹோம் லோன்’ கடனை திரும்பக் கட்டுவதில் ஒரு மாற்று திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்தத் திட்டத்தின்படி, நிலுவையில் உள்ள கடன் தொகைக்கான வட்டி (interest) மற்றும் அசல் தொகைக்கு (principal) இணையான தொகையை கடன் வாங்கியவர் கட்டி வருவார். அசல் சம தவணை உடன், குறையும் வட்டியை கட்டிவருவது மூலம் மாதத் தவணைகள் குறைந்து வரும். தொடர்ந்து இப்படி கடனை கட்டி வரும் போது, நீண்ட காலத்தில் கடனுக்கான மொத்த வட்டி குறையும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வட்டியில் லாபம் கிடைக்கும். இ.எம்.ஐ.-களுக்கு (EMIs - equated monthly instalments - சம மாத தவணைகள்) பதில், குறையும் மாதத் தவணைகள் மூலம் வாடிக்கையாளர்கள் கடனை கட்டலாம். ஆரம்பத்தில் தவணைத் தொகைகள் (இதே காலத்துக்கு, இதே கடன் தொகைக்கான இ.எம்.ஐ விட) அதிகமாக இருக்கும். ஆனால், இந்தத் தொகை கடன் காலம் முழுக்க குறைந்து வரும்.

இந்தப் புதியத் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து, ஆக்சிஸ் வங்கியின் செயல் இயக்குனர் (சில்லறை வங்கி) ராஜீவ் ஆனந்த் (Rajiv Anand, Executive Director (Retail Banking), Axis Bank), பேசும் போது, எங்கள் வாடிக்கையாளர்களின் நன்மைக்காக, குயிக்பே ஹோம் லோன் திட்டத்தை தொடங்கி உள்ளோம். புதுமையான திட்டமான இதன் மூலம் கடன் வாங்குபவரின் ஒட்டு மொத்தக் கடன் சுமை குறைகிறது. இந்தக் குறையும் மாதத் தவணைகள் என்கிற பிரத்யேக திட்டம் மூலம் வட்டியில் அதிக சேமிப்பு இருப்பதால், இது வீடு வாங்குபவர்களை கவரும் என நம்புகிறோம்.”

இந்தச் சலுகை எப்படி செயல்படுகிறது என்பதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். வழக்கமான வீட்டுக் கடன் முறையில், ரூ. 50 லட்சம் கடனை ஆண்டுக்கு 9% வட்டியில் 20 ஆண்டுகளாக திரும்பக் கட்டி வருவதாக வைத்துக்கொள்வோம். இந்த முறையில் 20 ஆண்டுகளில் வாடிக்கையாளர் வட்டியாக மட்டும் ரூ. 57.96 லட்சம் கட்டி இருப்பார். அதேநேரத்தில், ஆக்சிஸ் வங்கியின் குயிக்பே ஹோம் லோன் மூலம் ரூ. 50 லட்சத்தை 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுவதாக இருந்தால் வட்டி சற்று அதிகமாக ஆண்டுக்கு 9.20% ஆக இருக்கும். இந்த குயிக்பே ஹோம் லோன் முறையில் மொத்தம் வட்டிக்கு செல்வது ரூ. 46.19  லட்சம் மட்டுமே. அதாவது, வாடிக்கையாளருக்கு மொத்த சேமிப்பு ரூ.11.77 லட்சம் ஆகும்.

கடனை திரும்பக் கட்டும் விரிவான ஒப்பிட்டு விவரத்தை இணைப்பில் உள்ள அட்டவணைகளில் பார்க்கவும்.


ஆக்சிஸ் வங்கி பற்றி:

ஆக்சிஸ் வங்கி (Axis Bank) இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய தனியார் வங்கி ஆகும். ஆக்சிஸ் வங்கி, பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், எஸ்.எம்.இ., வேளாண் மற்றும் சில்லறை வர்த்தக வணிகங்கள் உள்ளடக்கிய வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு முழு அளவிலான சேவைகளை வழங்குகிறது. 2018 செப்டம்பர்  30 ஆம் தேதி நிலவரப்படி, இந்த வங்கி,

இந்தியாவில் 3,882 கிளைகள் (விரிவாக்க மையங்களையும் சேர்த்து) மற்றும் நாடு முழுக்க 12,660 ஏ.டி.எம் மையங்களை கொண்டிருக்கிறது.  ஆக்சிஸ் வங்கி, 2,269 நகரங்களில் இயங்கி வருகிறது. 

இந்த வங்கி, சிங்கப்பூர், ஹாங்காங், துபாய் (டி.ஐ .எஃப்.சி-ல்), ஷாங்காய் மற்றும் கொழும்பு உள்ளிட்ட 10 வெளிநாட்டு அலுவலகங்களை (overseas offices) கொண்டிருக்கிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் டாக்காவில் பிரதிநிதி அலுவலகங்களையும் ( representative offices), இங்கிலாந்தின் லண்டன் நகரில் வெளிநாட்டு துணை நிறுவனம்   ஒன்றையும் கொண்டுள்ளது.

Axis Bank
Adfactors PR
Mittal Solanki I + 91 9004909465

Shubham Sinha I +91 9930160666
Deeptha Rajkumar | + 91 9819803395

Brijesh Kutty | +91 99204 60901 Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...