மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐசிஐசிஐ பேங்க் டிஜிட்டல் சேவை 20 ஆண்டுகள் நிறைவு - ஐமொபைல் அறிமுகம்


ஐசிஐசிஐ பேங்க், இந்தியாவில் டிஜிட்டல் சேவையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து, அதன் மேம்படுத்தப்பட்ட ஐமொபைல்-ஐ அறிமுகம் செய்கிறது.


· வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவின் முதல் தானியங்கி மற்றும் ரோபோ அடிப்படையிலான முத‌லீட்டு ஆலோசனையை அறிமுகப்படுத்துகிறது.

· காகிதமில்லா கே.ஒய்.சி -ஐ இந்தியாவின் முதன் வங்கியாக அறிமுகம் மற்றும் ஒற்றை க்ளிக் மூலம்  மியூச்சுவல் ஃபண்ட் ஆன்லைன் பதிவு நடைமுறைகள்

· இந்திய வங்கிகளில் முதல் முறையாக மொபைல் போன் மூலம் கிரெடிட் கார்ட் பாதுகாப்பு அம்சங்கள் நிர்வாகம்

· குரல் கட்டளை மூலம் நாட்டின் முதல் நிதி பரிமாற்ற சேவை. 

ரூ. 20,000 வரை உடனடி டிஜிட்டல் கடனை செயல்படுத்தும் முதல் வங்கி

மும்பை: ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank), இந்தியாவில் இன்டர்நெட் பேங்கிங் மூலம் முன்னோடி டிஜிட்டல் சேவையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. இந்தச் சேவை  இந்தியாவில் கடந்த 1998 ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்த வங்கி, அதன் மொபைல் வங்கிச் சேவையை அதன் ஐமொபைல் ( iMobile) மூலம் 2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல் வங்கியாக தொடங்கியது. அதனுடன் 2015 ஆம் ஆண்டில் முதல் வங்கியாக டிஜிட்டல் வாலட் (digital wallet) –ஐ அறிமுகம் செய்து, டிஜிட்டல் புதுமையில் பலவற்றில் முன்னோடியாக இருந்தது. இன்று, வங்கியின் இணையச் சேவை மற்றும் மொபைல் வங்கி தளங்கள் முறையே 350 மற்றும் 250 க்கும் அதிகமான ஒருங்கிணைந்த‌ சேவைகளை கொண்டுள்ளன.

இந்தத் தனிச் சிறப்புமிக்க அம்சத்தை கொண்டாடுவதற்காக, ஐசிஐசிஐ பேங்க்,  வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த ஐமொபைல் (iMobile) சேவையை இந்தத் துறையில் முதல் முதலாக அறிமுகப்படுத்தி இருக்கிறது.

மொபைல் மூலம் சாஃப்ட்வேர் சார்ந்த ரோபா அல்காரித முறையில் முதலீட்டு ஆலோசனை அளிக்கும் மணி கோச் (Money Coach) -ஐ இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு வாடிக்கையாளரின் முழு முதலீட்டு பயணத்தை நிர்வகிப்பதாக இருக்கிறது. தொகுப்பு நிதியை உருவாக்குவது, முதலீட்டு கலவையை பரிந்துரை செய்வது போன்றவற்றை மேற்கொள்ளும். மற்றும்  முதலீட்டை  24x7  கண்காணித்து நிர்வகிக்கிறது.

இந்திய வங்கிகளிலே முதலாவதாக காகிதமற்ற கே.ஒய்.சி (KYC) ஆன்லைன் பதிவு செயல்முறை மூலம் ஒரே ஒரு கிளிக்கில்  மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் வசதியை கொண்டு வந்திருக்கிறது. இந்த வசதி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய, கே.ஒய்.சி  பதிவு செய்வதற்கான நீண்ட‌ மற்றும் காகித செயல்முறையை மாற்றி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி மற்றும் அனுபவத்தை வழங்குகிறது

குரல் கட்டளைகள் மூலம் வங்கியில் பதிவுசெய்த வாடிக்கையாளர்களுக்கு பணப் பரிமாற்றத்தைச் செயல்படுத்த, ஆப்பிளின் மெய்நிகர் குரல் உதவியாளரான சிரி (Siri) -ஐ  ஐசிஐசிஐ பேங்க் பயன்படுத்துகிறது. உதாரணமாக, வாடிக்கையாளர், நிதி பரிமாற்றத்துக்கானவற்றை செய்துவிட்டு "5000 ரூபாய் அம்மாவுக்கு மாற்றவும்" (“Transfer Rs 5000 to mother”) என குரல் வழியாக சொன்னால் பணம் பரிமாறிவிடும்.  இந்தச் சேவை தினசரி 24x7 மற்றும் அனைத்து நாட்களில் கிடைக்கும்., இந்த சேவையை  வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஐபோன் அல்லது ஐபேட்  iOS பதிப்பு 10 மற்றும் அதற்கு மேற்பட்ட போன்களில்  பயன்படுத்த முடியும்.

வாடிக்கையாளர்கள் இப்போது தனிப்பட்ட செலவுகளை கண்காணிக்க முடியும்,  டெபிட் / கிரெடிட் கார்ட்வரம்புகளை நிர்ணயிக்கவும், வங்கி கணக்கு விவரங்களை பார்க்க,  உடனடி டிஜிட்டல் கடன்  ரூ 20,000 வரை பெறவும் இந்தச் சேவை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும்,  அடிக்கடி செய்யப்படும் பரிவர்த்தனைகளை 'பிடித்தது' (favourite) என்று சேமித்து வைக்கவும் முடியும்.


இந்தச் சாதனை பற்றி பேசுகையில் ஐசிஐசிஐ வங்கியின் குழு நிர்வாகி மற்றும் தலைமை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அதிகாரி  திரு. பி.மதிவாணன் (Mr. B. Madhivanan, Group Executive and Chief Technology & Digital Officer, ICICI Bank) கூறும் போது, “ டிஜிட்டல் வங்கிச் சேவையில் சாதனை மற்றும் முன்னோடியாக 20 ஆண்டுகளை  ஐசிஐசிஐ வங்கி நிறைவு செய்ததை உங்களுடன் பெருமையாக பகிர்ந்து கொள்கிறோம். இது இந்திய வங்கித் துறையில் முதல் சாதனையாகும். கடந்த இரு பத்தாண்டுகளாக டிஜிட்டல் தொழில்நுட்பம், மொபைல் தொடர்பு, சமூக வலைதளம் போன்றவற்றில்  புதிய போக்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். மொபைல் தொழில்நுட்பம் இந்தியாவில் புதிய மாற்றத்தை குறிப்பாக வங்கிச் சேவையில் கொண்டு வரும் என முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. இதனை முன் கூட்டியே நாங்கள் கணித்து வாடிக்கையாளர்களின் தேவைக்கு முன்னுரிமை அளித்தோம்.

இந்தத் தொலைநோக்கு பார்வை மற்றும் நம்பிக்கையானது, 1998 ஆம் ஆண்டில்  நாட்டின் முதல் இணைய வங்கிச் சேவை, 2008 ஆம் ஆண்டில் மொபைல் வங்கி பயன்பாடு 'ஐமொபைல்' (iMobile) மற்றும் பல புதுமைகளை தொடங்க வழிவகுத்தது.

இந்தச் சாதனைகளை கொண்ட, குரல் சார்ந்த சேவைகள், 
பயோமெட்ரிக் அங்கீகார மூலம் லாகின், மியூச்சுவல் ஃபண்ட் 
முதலீடுகளுக்கான கே.ஒய்.சி ஒற்றை கிளிக் பதிவு, 
வாடிக்கையாளரின் முதலீட்டுக் கலவை, செலவு மாதிரிகள் ஆகியவற்றில் டிஜிட்டல் சேனல்களின் எதிர்காலம் சார்ந்த அம்சங்களை  தொடர்ந்து அளித்து வருகிறோம்.

இணைய வங்கி எதிர்காலம் என்பது டிஜிட்டல் கடன்கள் மற்றும் விரைவான முதலீடுகள் போன்றவையாக இருக்கும் என்று நம்புகிறேன். எதிர்காலத்தில் மொபைல் வங்கி சேவையில் குரல் அடிப்படையிலான சேவைகள் மற்றும் தொழில்நுட்பம், ஏஐ (AI- artificial intelligence) என்கிற செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் தனிப்பட்ட நிதித் திட்ட பரிந்துரைகள் மற்றும் சேவைகளை வழிநடத்திச் செல்வது மற்றும் சிறிய அளவிலான கடன்கள் மற்றும் காப்பீடு வழங்குவதாக இருக்கும்."


இதற்கு ஆதாரமாக, வங்கியின் ஐபொபைல் பரிவர்த்தனைகள் மதிப்பு அடிப்படையில் முன்னணியில் இருக்கிறது. (ஆர்பிஐ புள்ளிவிவரம் ஏப்ரல் 2017 - மார்ச் 2018. இதில் இந்த வங்கியின் சந்தை பங்களிப்பு 2017-18 ஆம் நிதி ஆண்டில் 34% ஆகவும் மதிப்பு ரூ 4.09 டிரில்லியனாக உள்ளது. மார்க்கீ அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஃபாரெஸ்டர்-ன் The Forrester Banking Wave™: Indian Mobile Apps, Q2 2018' –ன் அறிக்கையில் ஐசிஐசிஐ வங்கி  முதன்மையான இடத்தை பிடித்தது. இந்த அறிக்கையில் ஐசிஐசிஐ வங்கியின் விரிவான செயல்பாடு, வாடிக்கையாளர்கள் அனுபவம், பயனுள்ள சேவை அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கை ஐமொபைல் -ஐ உலகின் சிறந்ததாக குறிப்பிடுகிறது. 


வங்கித் துறையின் புதிய மற்றும் முதல் ஐமொபைல் சேவையின் சிறப்பு அம்சங்கள்:

·மணி கோச் (Money Coach): சாஃப்ட்வேர் சார்ந்த ரோபோ அடிப்படையிலான தானியங்கி தனிநபர் நிதி மற்றும் முதலீட்டு தளமாகும். இது,வங்கியின் வாடிக்கையாளர்கள் தடையில்லாமல் அவர்களின் எதிர்கால முதலீட்டை திட்டமிட உதவுகிறது. இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் இலக்கு அடிப்படையிலான முதலீட்டு ஆலோசனையை செயல்படுத்துகிறது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டபின், வாடிக்கையாளர்கள் ஐமொபைல் மூலம் முதலீடு செய்வது பல மடங்கு அதிகரித்துள்ளது.

·'டிஸ்கவர்' டாஷ்போர்டில் செலவு முறைகள்(‘Discover’, one view dashboard with spend patterns): மற்றொரு முதன்மையாக, வங்கியின் அனைத்து சேமிப்பு கணக்குகள், கிரெடிட் கார்ட்கள் மற்றும் பாக்கெட் வாலட் பரிமாற்ற விவரங்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. ஆண்டு முழுக்க  மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் அறிக்கை, செலவினங்களின் வரைகலை படம், கடந்த கால பரிவர்த்தனை பதிவுகளின் அடிப்படையில் எதிர்கால பரிவர்த்தனைகளுக்கான பரிந்துரைகள், வழங்கல் மற்றும் சேவை கோரிக்கைகள் போன்ற சேவைகளை வழங்கி வருகிறது.

· குரல் சார்ந்த பணம் வழங்கல்கள்( Voice based payments): குரல் அடிப்படையிலான கட்டளைகளால் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளுக்கு நிதிகளை மாற்ற, குரல் உதவியாளர் சேவை (voice assistant service)பயன்படுத்தப்படுகிறது. 

· 3டி தொடுதல் (3D Touch): இந்த அம்சம் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள்  ஐமொபைல் சின்னத்தை (iMobile icon) சிறிது நேரம் அழுத்தி கியூஆர் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்தல் மூலம் பணம் செலுத்துதல், நிதி பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகளை தொடங்க அனுமதிக்கிறது.

· பயன்பாட்டு வியாபார முறைகள்(In app merchant payments):  இந்த அம்சம் மூலம்  வாடிக்கையாளர்கள் நேரடியாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து ஐமொபைல் மூலம் உணவு ஆர்டர், ஹோட்டல் முன்பதிவுகள், பயணம் முதலியவற்றுக்கான கட்டணத்தை உடனடியாக பணம் செலுத்துவார்கள்.

·உடனடி டிஜிட்டல் கடன் (Instant digital credit): இந்த வசதி மூலம் வாடிக்கையாளர்கள் சிறிய அளவிலான கடன்களை காகித வேலை எழுதும் இல்லாமல் உடனடியாக முழுக்க முழுக்க டிஜிட்டல் வழியில் பெறுவார்கள். இந்த வசதிகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பொருள்களை வாங்கவும், கட்டணம் செலுத்துதவும் முடியும். மேலும் கடைகளில் எந்தவொரு வணிக UPI ஐடி -க்கு உடனடியாக பணம் செலுத்த முடியும். 


· கடன் மற்றும் பற்று அட்டை பரிவர்த்தனைகளைப் பாதுகாத்தல் (Securing card transactions):  ஐசிஐசிஐ வங்கி, கடன் மற்றும் பற்று அட்டைகள் (credit and debit cards) மீது முன்னரே வரம்புகளை செயல்படுத்தும் நாட்டின் முதல் வங்கியாகும். இந்தச் சேவை உள்நாட்டு மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும். கூடுதலாக, வங்கி சமீபத்தில் ஐமொபைல் சேவையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதாவது, வாடிக்கையாளர்களை தங்கள் சொந்த தொலைபேசிகளின் மூலம் கார்டுகளை பாதுகாப்பாக கையாள முடியும். இந்தச் சேவை 24x7 நேரமும் கிடைக்கிறது. 

· தேய்த்தல் மூலம் பண இருப்பு விவரம் அறிதல் (Swipe to check balance):  வாடிக்கையாளர்கள் இப்போது ஆப் பயன்பாட்டிற்குள் நுழையாமல் தங்கள் கணக்கு பண இருப்புகளை பார்க்கலாம். வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு நிலுவை மற்றும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைப் பார்வையிட, உள்நுழைந்த பக்கத்தில் தேய்த்தால் போதும். 


·அடிக்கடி மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் (Favorite Transactions): இந்தக் குறிப்பிட்ட அம்சம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான அடிக்கடி மேற்கொள்ளும் பரிமாற்றங்களை 'விருப்பமான' என்று குறியிட அனுமதிக்கும், இது எதிர்காலத்தில் தடையற்ற விரைவாக பணம் செலுத்த உதவும். 


கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள பார்வையிடவும்  www.icicibank.com/imobile



மேம்படுத்தப்பட்ட இந்த ஆப் -ஐ Google Play Store மற்றும் Apple App Store இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  ஐசிஐசிஐ வங்கியின் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர், வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் ஐமொபைல்  ஆப் –ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பண பரிமாற்றம், யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்துதல் போன்றவற்றை இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் மூலம் மேற்கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் இந்த வங்கி மொபைல் பேங்கிங் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது. உடனடி கடன் அட்டை மற்றும் தனிநபர் கடன், முன் கூட்டிய வருமான வரி, ஹெல்த் அண்ட் டிராவல் இன்ஷூரன்ஸ் போன்றவற்றை ஐமொபைல் மூலம் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பெற்று வருகிறார்கள். 


ஐசிஐசிஐ பேங்க், 2017 ம் ஆண்டின் ஆரம்பத்தில் chatbot சேவையை அதன் இணைய தளம் மற்றும் ஐ மொபைல் மற்றும் அதன் டிஜிட்டல் வாலட், பாக்கெட்கள் போன்றவற்றில் அறிமுகம் செய்தது. கூடுதலாக விசாரிப்புகளுக்கு உடனடியாக பதில் அளிக்கும் iPal engine சேவையை ஐமொபைல் –ல் கொண்டு வந்தது.  இந்தத் துறையின் முதல் சேவை இது வாகும். ஒட்டு மொத்தமாக iPal தற்போது வரைக்கும் 1.4 மில்லியன் விசாரிப்புகளை மாதம் ஒன்றுக்கு மேற்கொண்டு வருகிறது. இதில், 90 சதவிகிதம் விசாரிப்புகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.



For news and updates, visit www.icicibank.com and follow us on Twitter at www.twitter.com/ICICIBank.



For media queries, write to: corporate.communications@icicibank.com



Except for the historical information contained herein, statements in this release, which contain words or phrases such as 'will', 'would', etc., and similar expressions or variations of such expressions may constitute 'forward looking statements'. These forward-looking statements involve a number of risks, uncertainties and other factors that could cause actual results to differ materially from those suggested by the forward-looking statements. These risks and uncertainties include, but are not limited to our ability to obtain statutory and regulatory approvals and to successfully implement our strategy, future levels of non-performing loans, our growth and expansion in business, the adequacy of our allowance for credit losses, technological implementation and changes, the actual growth in demand for banking products and services, investment income, cash flow projections, our exposure to market risks as well as other risks detailed in the reports filed by us with the United States Securities and Exchange Commission. ICICI Bank undertakes no obligation to update forward-looking statements to reflect events or circumstances after the date thereof. All reference to interest rates, penalties and other terms and conditions for any products and services described herein are correct as of the date of the release of this document and are subject to change without notice. The information in this document reflects prevailing conditions and our views as of this date, all of which is expressed without any responsibility on our part and is subject to change. In preparing this document, we have relied upon and assumed, without independent verification, the accuracy and completeness of all information available from public sources. ICICI Bank and the "I man" logo are the trademarks and property of ICICI Bank. Any reference to the time of delivery or other service levels is only indicative and should not be construed to refer to any commitment by us. The information contained in this document is directed to and for the use of the addressee only and is for the purpose of general circulation only





Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...