மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்தியா முழுக்க வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதாக இன்ஷூரன்ஸ் போய் சேரும்: அலகாபாத் பேங்க், எஸ்.பி.ஐ லைஃப் கூட்டு


அலகாபாத் பேங்க் மற்றும் எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் பாலிசியை விநியோகிக்க கூட்டு: இந்தியா முழுக்க வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதாக இன்ஷூரன்ஸ் போய் சேரும்..!

கொல்கத்தா, டிசம்பர் 31, 2018: இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்று மற்றும் பழைமையான தேசிய மையமாக்கப்பட்ட வங்கியான அலகாபாத் பேங்க் (Allahabad bank) மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய தனியார் ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்றான எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் (SBI Life Insurance), பாலிசிகளை விநியோகிக்க காப்புறுதி சேவை  ஒப்பந்தம் (Bancassurance pact) போட்டிருக்கின்றன. இதன் மூலம்  எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அலகாபாத் பேங்க், அதன் கிளைகள் மூலம் நாடு முழுக்க விநியோகிக்கும். மேலும், அலகாபாத் பேங்க், அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒருங்கிணைந்த நிதித் தீர்வுகளை அளிக்கிறது.

நாட்டின் மிகப் பெரிய காப்புறுதி சேவை  ஒப்பந்தமாக இது இருக்கிறது. நாடு முழுக்க உள்ள அலகாபாத் வங்கியின் 3,238 கிளைகளில் எஸ்.பி.ஐ லைஃப்-ன் பாதுகாப்பு, செல்வம் உருவாக்குதல் மற்றும் சேமிப்பு திட்டங்கள் (protection, wealth creation and savings products), அதன் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும். இதன் மூலம் ஒரே குடையின் கீழ் வங்கி வாடிக்கையாளர்களின் முழுமையான் நிதித் தேவைகள் (complete financial needs) நிறைவேற்றப்படும்.

இதற்கான ஒப்பந்தம், அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி  திரு. சிஹெச். எஸ்.எஸ்.மல்லிகார்ஜூனா ராவ் (Shri CH.S.S Mallikarjuna Rao, MD & CEO, Allahabad Bank) மற்றும் எஸ்.பி.எஸ்  லைஃப் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. சஞ்ஜீவ் நவ்டியால் (Shri Sanjeev Nautiyal, MD & CEO, SBI Life) ஆகியோர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.

இந்த முக்கிய ஒப்பந்தம் குறித்து அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி  திரு. எஸ்.எஸ்.மல்லிகார்ஜூனா ராவ் கூறும் போது, ‘’ இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஒரே கூடையின் பல்வேறு விதமான ஆயுள் காப்பீடு திட்டங்களை வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடிகிறது. மேலும், வங்கியின் வட்டி சாரா வருமானம் அதிகரிக்கும்”   

இந்தக் கூட்டு குறித்து, எஸ்.பி.எஸ்  லைஃப் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு. சஞ்ஜீவ் நவ்டியால் கூறும் போது,’’ அலகாபாத் பேங்க் உடன் இப்போது ஏற்பட்டிருக்கும் கூட்டு மூலம் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு கூட்டு சேவை கிடைப்பது எளிதாக இருக்கும்..  அளிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறோம். எங்கள்வங்கியின் வாடிக்கையாளர்கள் இப்போது நேரடியாக எஸ்.பி.ஐ லைஃப்-ன் அனைத்து விதமான பாதுகாப்பு திட்டங்கள், செல்வம் உருவாக்கம் மற்றும் சேமிப்பு திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்ய முடியும். இதன் மூலம், ஒருங்கிணைந்த நிதித் தீர்வுகளை வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளிக்க முடியும்.

அவர் மேலும் கூறும் போது, அலகாபாத் வங்கியின் கூட்டு மூலம் எங்களின் விநியோக நெட் ஒர்க் மேலும் வலிமை பெறும். மேலும், இதன் மூலம் பொதுமக்களுக்கு இன்ஷூரன்ஸ் திட்டங்கள்

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் பற்றி:
எஸ்.பி. லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (SBI Life Insurance Company Limited), கடந்த 2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India)  மற்றும் பிஎன்பி பரிபா கார்டிஃப் எஸ். ஏ (BNP Paribas Cardif S.A.) இணைந்து கூட்டு நிறுவனமாக (joint venture) தொடங்கப்பட்டது. எஸ்.பி. லைஃப், இந்தியாவின் முன்னனி ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2018 செப்டம்பர் 30 நிலவரப்படி, இதன், அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ. 20 பில்லியன் ஆகவும் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 10 பில்லியன் ஆகவும் இருக்கிறது. 

எஸ்.பி. லைஃப் ஒருங்கிணைந்த ஆயுள் காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டங்களை குறைந்த பிரீமியத்தில் அளித்து வருகிறது. மேலும், உயர்தர வாடிக்கையாளர் சேவை, உலக தர செயல்பாட்டை கொண்டுள்ளது. இந்த நிறுவனம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களை தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு அளித்து வருகிறது. எஸ்.பி. லைஃப் பல்வேறு விநியோக நெட் ஒர்க்களை கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 22,000-க்கும் மேற்பட்ட எஸ்.பி.ஐ வங்கி கிளைகள் மூலம்  இன்ஷூரன்ஸ் பாலிசிகளை விநியோகித்து வருகிறது. இந்த நிறுவனம், 2018 செப்டம்பர் 30 நிலவரப்படி 1,13,045 செயல்பட்டு கொண்டிருக்கும் ஏஜென்ட்களை கொண்டுள்ளது. மேலும், நேரடி விற்பனை, கார்ப்பரேட் முகவர்கள், புரோக்கர்கள், இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், இடைத்தரகர்கள் மூலமும் பாலிசிகளை விநியோகித்து வருகிறது. 2018 செப்டம்பர் 30 நிலவரப்படி, இந்த நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களின் தேவையை சிறப்பாக மேற்கொள்ள  848 அலுவலகங்கள் உள்ளன. 2018 செப்டம்பர் 30 நிலவரப்படி ரூ.1,261.7 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் பங்குகள், தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பாம்பே பங்குச் சந்தையில்  (BSE) பட்டியலிடப்பட்டுள்ளன.
பத்திரிகை தொடர்புக்கு
SBI Life
Santosh Setty                                              
Email: santosh.setty@sbilife.co.in           
Landline: +91-22-6191 0034                                

Minakshi Mishra                                         
Landline: +91-22-6191 0140Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...