மொத்தப் பக்கக்காட்சிகள்

கிரெடிட் கார்ட், பெர்சனல் கடன்களை வாங்கி குவிக்கும் இளைய தலைமுறையினர்....!


இந்திய நுகர்வோர் கடன் சந்தையின் விரிவாக்கத்துக்கு உதவும் தலைமுறை X மற்றும் மில்லினியன்கள்

புதிய டிரான்ஸ்யூனியன் சிபில் தொழில் நுண்ணறிவு அறிக்கை,  இந்திய நுகர்வோர் கடன் சந்தையின் போக்கை வெளிப்படுத்துகிறது.  

சென்னை, டிசம்பர் 19, 2018.  இந்திய நுகர்வோர் கடன் சந்தை (Indian consumer credit market) நடப்பு 2018 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிலும் விரிவாக்கத்தில் இருக்கிறது. சில்லறை கடன் நிலுவை தொகை (Retail outstanding balances) கடந்த ஆண்டு முதல் 21% அதிகரித்துள்ளது மற்றும் இதேகால கட்டத்தில் இந்த கணக்குகளின் எண்ணிக்கை 28% உயர்ந்துள்ளது. இந்தப் போக்குகள், 2018 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்கான டிரான்ஸ்யூனியன் சிபில் தொழில் நுண்ணறிவு அறிக்கை (TransUnion CIBIL Industry Insights Report) யின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது நிலுவை தொகை மற்றும் கணக்குகளின் எண்ணிக்கை முறையை  22% மற்றும் 23%  அதிகரித்திருப்பது, இந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. 
  
இந்திய நுகர்வோர் கடன் சந்தை, மிகவும் வேகமான விரிவாக்கத்தில் இருக்கிறது. கடன் அட்டைகள்  மற்றும் தனிநபர் கடன்கள்  (credit cards and personal loans) உள்ளிட்ட பெரும்பாலான கடன் திட்டங்களின்  நிலுவை தொகை மற்றும் கணக்குகளின் எண்ணிகை கணிசமாக வளர்ச்சி கண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்,” என டிரான்ஸ்யூனியன் சிபில் அமைப்பின் துணைத் தலைவர் (ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை) யோகேந்திர சிங் (Yogendra Singh, Vice President of Research and Consulting for TransUnion CIBIL) தெரிவித்தார்.

 கடந்த காலத்தில் இந்த நுகர்வோர் கடன் வளர்ச்சி இந்தியாவின் முக்கிய நகரங்களை சேர்ந்தவர்கள் மூலம் ஏற்பட்டது. மூன்றாம் காலாண்டில் இந்த வளர்ச்சிக்கு காரணமாக மில்லினியன்கள் மற்றும் தலைமுறை X (Millennals and Generation X) நுகர்வோர்கள் இருக்கிறார்கள். இவர்களின் பங்களிப்பு கணக்குகள் மற்றும் நிலுவை தொகை பாதிக்கு மேல் இருக்கிறது.

டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் சமீபத்திய அறிக்கையில், 30 முதல் 49 வயது கொண்ட நுகர்வோர்கள் சில்லறை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருவது தெரிய வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில், கடன் சார்ந்த நடவடிக்கையில் இந்த வயதினர் அதிக கணக்கினை (56%) கொண்டிருக்கிறார்கள். மற்றும் மொத்த நிலுவை தொகையில் இவர்களின் பங்களிப்பும் அதிகமாக (60%) உள்ளது.  

ஒட்டு மொத்த சில்லறை கடன் சந்தையில் இந்த வயதினரின் பங்களிப்பு பிரதானமாக இருப்பது ஒன்றும் ஆச்சர்யம் அளிப்பதாக இல்லை. காரணம், அவர்களின் வாழ்க்கை முறை அப்படி இருக்கிறது.

பல நுகர்வோர்கள் 30 வயதில் தங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள். குடும்பம் வளரும் போது, வாகனங்கள், வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க, கடன் தேவைப்படுகிறது. மேலும், இந்த நுகர்வோர்களின் வேலை நிலை மேம்பட்டு, அவர்களின் வருமான அளவு அதிகரிக்கும் போது நுகர்வோர் கடன் வாங்குவதும் உயர்கிறது. தலைமுறை X மற்றும் வயதான மில்லினியன் நுகர்வோர்கள், தங்களின் தேவைக்கு புதிதாக கடன் வாங்குவார்கள் என்கிற சந்தோஷமான கண்டுபிடிப்பு இந்த அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த அறிக்கை மூலம், இளைய கடனானிகள் (youngest borrowers) படிப்படியாக நுகர்வோர் கடன் சந்தைக்கு வருவது தெரிய வருகிறது. 20 முதல் 29 வயதுள்ள (இதில் தலைமுறை Z  மற்றும் இளைய மில்லினியன் நுகர்வோர்கள் அடங்குவர்) நுகர்வோர் கடன் வாடிக்கைகளின் எண்ணிக்கை, 2015 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 17.5% ஆக இருந்தது. இது 2018 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 19.7% ஆக அதிகரித்துள்ளது.

இந்த கால கட்டத்தில் இந்த வயது பிரிவினரின் பங்களிப்பு ஒட்டு மொத்த கடன் நிலையில் சற்று அதிகரித்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் இளைய நுகர்வோர்கள் பங்களிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதை குறிப்பிடுகிறது.  என்றும் சிங் தெரிவித்தார்.

கடன் அட்டைகள்  மற்றும் தனிநபர் கடன்களுக்கு தொடர்ந்து அதிக தேவை (Demand for credit cards and personal loans remains high)

அனைத்து பிரதான கடன் திட்டங்களில் குறிப்பாக கடன் அட்டைகள்  மற்றும் தனிநபர் கடன்களின் கணக்குகள் தற்போது அதிக எண்ணிக்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் நுகர்வோர் கடன்கள் வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கிறது.

2018 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் கடன் அட்டை கணக்குகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, சுமார் 32% அதிகரித்து 36.90 மில்லியனாக உள்ளது.

2018 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் தனிநபர் கடன், கணக்குகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, 26% உயர்ந்து 15 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில், சொத்து அடமானக் கடன் (Loans against property - LAP) 33% அதிகரித்து 1.6 மில்லியன் கணக்குகளாக இருக்கிறது. அதேநேரத்தில், கடன் சந்தையில் இந்த கடன்களின் எண்ணிக்கை கடன் அட்டைகள் மற்றும் தனிநபர் கடன்களைவிட மிகக் குறைவாக இருக்கிறது. இருந்தபோதிலும், சில்லறை கடன் பிரிவில் இந்தக் கடன் பிரிவின் சராசரி கடன் நிலுவை தொகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது.

2018 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில், இந்தியாவில் சொத்து அடமானக் கடன் வாங்கியவர்களின் சராசரி நிலுவை தொகை ரூ. 34,93,000 ஆக உள்ளது.   இதே கால கட்டத்தில் தனிநபர் கடன் வாங்கியவர்களின் சராசரி நிலுவை தொகை ரூ. 2,52,000 ஆகவும் கிரெடிட் கார்ட் மூலம் கடன் வாங்கியவர்களின் சராசரி நிலுவை தொகை  ரூ. 46,000 ஆகவும் உள்ளது.

இந்திய நுகர்வோர் கடன் சந்தை வளர்ச்சியின் போக்கு 

(Indian Consumer Credit Market in Growth Mode)

கடன் திட்டத்தின் பெயர்
மொத்த கடன்களின் எண்ணிக்கை ( மில்லியனில்)
ஆண்டு கணக்கில் மாற்றம் (%)
ஒரு கடனாளியின் சராசரி நிலுவை தொகை (.ரூ. 000 -ல்)
ஆண்டு கணக்கில் மாற்றம் (%)
கடன் தவணை தவறிய விகிதம் * – நிலுவை நிலை
ஆண்டு கணக்கில் மாற்றம் (அடிப்படை புள்ளிகள்)
வாகன கடன்
10.0
14.1%
400
3.6%
2.75%
(45)
வீட்டுக் கடன்
12.7
11.0%
1,703
4.1%
1.73%
22
சொத்து அடமான கடன்
1.6
33.0%
3,493
-7.9%
3.03%
73
தனிநபர் கடன்
15.0
26.3%
252
7.7%
0.52%
(1)
கடன் அட்டை
36.9
31.7%
46
8.1%
1.78%
28
* கடன் தவணை தவறிய விகிதம் (Serious delinquency rate), 90 நாள்கள் நிலுவை தொகை அல்லது தவணை கடந்த நாள்களுக்கான விகிதமாகும்.


கடன் தவணை தவறிய விகிதம், ஆண்டு கணக்கில் வீட்டுக் கடன்கள் மற்றும் கடன் அட்டைகளில் முறையே 22 மற்றும் 28 அடிப்படை புள்ளிகள் (basis points) அதிகரித்து 1.73% மற்றும் 1.78% ஆக உள்ளது. 2018 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில், அடமானக் கடன்களின் கடன் தவணை தவறிய விகிதம், ஆண்டு கணக்கில் 73 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 3.03% ஆக உள்ளது.  சொத்து அடமான கடனில் தவணை தவறிய நிலுவை நிலை அதிகமாக இருக்க காரணம், இந்தக் கடனில் சராசரி நிலுவை தொகை அதிகமாக இருப்பதாகும். கடன் கொடுத்த நிறுவனங்கள் இந்தப் பிரிவை கூர்ந்து கவனித்து வருகின்றன.

இந்தியாவில் இந்தக் கடன் வளர்ச்சியில் இருக்கும்போது, கடன் கொடுப்பவர்கள் தங்கள் இடர் மேலாண்மை நடவடிக்கைகளை அவசியம்  கண்காணிக்க வேண்டும்.  உதாரணமாக,  சொத்து அடமான கடன்களின் எண்ணிக்கை வேகமாக  உயர்ந்து வருகிறது. அதேநேரத்தில், கடன் தவணை தவறியவர்களின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாக தற்போது 3%-ஐ தாண்டி இருக்கிறது. இந்த வகை கடன்களுக்கு தற்போது மிகவும் தேவை அதிகரித்துள்ளது, மேலும் இவை நல்ல வருமானத்தை, கடன் அளிப்பவர்களுக்கு ஈட்டி தரும் நிலையில், சமீபத்தில் தவணை தவறுவது அதிகரித்து வருவதை ஆராய்வது மிக அவசியமாகும்,”  என்றார் சிங்.
நுகர்வோர் பார்வையிலிருந்து பார்த்தால், சரியான நேரத்தில் தவணை தொகையை தொடர்ந்து கட்டுவது மிக முக்கியமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.  இதை குறிப்பாக, இளைய நுகர்வோர்கள் கவனிக்க வேண்டும். அவர்களுக்கு கடனை மேலாண்மை செய்வதில் (managing debt) குறைவான  அனுபவமே இருக்கும். மேலும், அவர்கள் இப்போதுதான் தங்கள் கடன் வாங்கும் பழக்கங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த வளர்ந்து வரும் நுகர்வோர்கள், இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய  பங்காற்ற தொடங்கி இருக்கிறார்கள். இவர்கள் எதிர்கால பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் ஆரோக்கியத்துக்கு அவர்களின் கடன் மேலாண்மையை சிறப்பாக கையாள திறமையை பெற வேண்டும்.

டிரான்ஸ்யூனியன் சிபில் தொழில் நுண்ணறிவு அறிக்கை பற்றிய கூடுதல் விவரங்கள் தெரிந்துகொள்ள  https://www.transunioncibil.com/insights-events பார்வையிடவும்

டிரான்ஸ்யூனியன் சிபில் தொழில் நுண்ணறிவு அறிக்கை பற்றி..!

டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் தொழில் நுண்ணறிவு அறிக்கை(TransUnion CIBIL’s Industry Insights Report) என்பது மிகவும் ஆழமானது. முழுமையான மக்கள்தொகை தீர்வாக ஒவ்வொரு காலாண்டும் டிரான்ஸ்யூனியன் சிபில்-ன் கடன் பெற்ற நுகர்வோர் விவரங்களின் அடிப்படையில் புள்ளி விவர தகவலாக அளிக்கப்படுகிறது.  

ஒவ்வொரு கோப்பிலும்  நூற்றுக்கணக்கான கடன் விவரங்களை கொண்டிருப்பததோடு, நுகர்வோர் கடன் பயன்பாட்டு மற்றும் செயல்பாடு பற்றி விளக்கி சொல்லி இருக்கும். இந்த நுண்ணறிவு தொழில் அறிக்கையை நிதி உதவி அளிக்கும் பல்துறைகளை சேர்ந்த நிறுவனங்கள், கடன் சந்தை பற்றியும் வணிக சுழற்சி பற்றியும் நுகர்வோர் மனநிலை பற்றியும் காலத்துக்கு காலம் இந்தியா முழுக்க அறிந்து கொள்ள முடியும்.

வணிகங்கள் மற்றும் கூடுதல் விவரங்கள் பெற தொழில் நுண்ணறிவு அறிக்கையை பெற https://www.transunioncibil.com/insights-events  பார்வையிடவும்.

டிரான்ஸ்யூனியன் சிபில் பற்றி

இந்தியாவின் முன்னணி கடன் தகவல் நிறுவனமாகவும் ( credit information company) உலக அளவிலான கடன் தகவல்களை மிகப் பெரிய களஞ்சியமாகக் கொண்டுள்ளதாகவும் டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) உள்ளது. 

இதில், அனைத்து முன்னணி வங்கிகள்நிதி நிறுவனங்கள்வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் உட்பட 3,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள்  இணைந்துள்ளனர்.  தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் 1,000 மில்லியனுக்கும்  மேற்பட்ட கடன் பதிவுகளை பராமரித்து வருகிறது. இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் - வணிகம் விரைவாக நடக்கவும்குறைந்தக் கட்டணத்தில் கடன் தகவல்களை அளித்து தகவல் தீர்வுகளை கொடுப்பதாக உள்ளது.
                      
உறுப்பினர்களுக்கு கடன் சார்ந்த இடர்பாட்டை (risk) நிர்வகிக்க உதவுவதன் மூலம்செலவுகளைக் குறைக்கவும்லாபத்தை அதிகரிக்கவும் பொருத்தமான வணிக உத்திகளை திரட்ட உதவுகிறது.  நுகர்வோர் மற்றும் வணிக கடன் வழங்குபவர்களுக்கு விரிவான, நம்பகமான தகவல்களை அளித்து, தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களும் கடன்  வழங்குவதற்கான முடிவை சுலபமாக எடுக்க உதவுகிறது.

தகவல்களின் சக்தி (power of information)டிரான்ஸ்யூனியன் சிபில், அதன் உறுப்பினர்களுக்கு கடன் குறித்த தகவல்களை அளிப்பதோடு, அனைவருக்கும் நிதிச் சேவை மூலம்  வலுவான பொருளாதாரத்தைஉருவாக்க உதவுகிறது. இந்தத் தகவலை நல்லது (Information for Good) என்று இந்த அமைப்பினர் அழைக்கிறார்கள்.  

கூடுதல் தகவல்களுக்கு பார்வையிடவும்www.transunioncibil.com


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...