தனியார் ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் அதிக வளர்ச்சிமுன்னணி தனியார் ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் அதிக வளர்ச்சி

நிறுவனத்தின் தனிநபர் புதிய வணிகம் 38% வளர்ச்சி

இந்தியாவின் முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று, பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி (Bajaj Allianz Life Insurance Company). 2017-18 ஆம் நிதி ஆண்டில் தனிநபர் புதிய வணிகம் 38% வளர்ச்சி கண்டுள்ளது. இது இந்தத் துறையின் ஒட்டு மொத்த வளர்ச்சியான 19% உடன் ஒப்பிடும் போது, இரு மடங்கு வளர்ச்சியாகும்.  பத்து முன்னணி தனியார் ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் வளர்ச்சியில், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனியின் வளர்ச்சி அதிகமாக உள்ளது

இந்த நிறுவனத்தின் சந்தைப் பங்களிப்பு 2016-17 ஆம் நிதி ஆண்டில் 1.9% ஆக இருந்தது. இது 2017-18 ஆம் ஆண்டில்  2.2%  ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டு மொத்த புதிய வணிக பிரீமிய வளர்ச்சியிலும் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ்  வேகமான வளர்ச்சியில் 2017-18 ஆம் ஆண்டில் 29% ஆக உள்ளது. இந்தக் கால கட்டத்தில் இந்தத் துறையின் வளர்ச்சி 11% ஆக உள்ளது. பிரீமியம் புதுப்பிப்பது 2016-18ஆம் ஆண்டில் 4 சதவிகிதம் குறைந்திருந்தது. இது 2017-18 ஆம் ஆண்டில் 16% வளர்ச்சிக் கண்டுள்ளது.

இந்த வளர்ச்சிக் குறித்து, பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி  தருண் சவுக்   (Tarun Chugh MD & CEO, Bajaj Allianz Life Insurance)  பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ், பாலிசிதாரர்களுக்கு புதிய வழி காட்டி வருகிறது. அவர்களின் வாழ்க்கை இலக்கு சார்ந்த தேவைகளுக்கு தீர்வு அளிக்கப்படுகிறது. முதலீட்டு திட்டங்கள், விநியோக மாடல்கள், வணிகம் மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகளில் புதுமைகளை தீட்டி உள்ளோம். பாலிசிதாரர்களின் இலக்குகளை நிறைவேற்ற தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்.  வரும் ஆண்டுகளில் எங்களின் பாலிசிதாரர்களின் எண்ணிக்கைமேலும் அதிகரிக்கும் என நம்புகிறோம். ” 

ஆயுள் காப்பீடு நிறுவனங்கள்              YTD                        
                Ind. Rated NB                       
                மார்ச் -18            மார்ச்r-17                          
                பிரீமியம்          பிரீமியம்                         
ஐசிஐசிஐ ப்ரூ.                7,461      6,408                     
எஸ்பிஐ லைஃப்           7,787      5,938                     
ஹெச்டிஎஃப்சி ஸ்டாண்டர்ட்                4,754      3,636                     
மேக்ஸ் லைஃப்             3,214      2,639                     
பஜாஜ்அலையன்ஸ் லைஃப்                 1,397      1,010                     
கோட்டக் மஹிந்திரா Old Mual               1,575      1,202                     
பிர்லா சன் லைஃப்       1,059      922                        
ரிலையன்ஸ் லைஃப்                 727         690                        
தனியார் நிறுவனங்கல் மொத்தம்     35,668   28,699                  
எல்ஐசி               27,802   24,519                  
மொத்தம்          63,470   53,218                  
ஆதாரம் :  ஐஆர்டிஏஐ

About Bajaj Allianz Life Insurance Company Limited

இந்தியாவின் முன்னணி தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்று, பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி. இது பஜாஜ் குழுமத்தின் பங்கு முதலீட்டு நிறுவனமான, பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்   மற்றும் நிதிச் சேவை நிறுவனம் மற்றும் உலகின் முன்னணி இன்ஷூரன்ஸ் குழுமம் அலையன்ஸ் எஸ் (Allianz SE) இணைந்த கூட்டு நிறுவனம் ஆகும். 

பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் கம்பெனி, கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் செய்லப்ட்டு வருகிறது. 2018 மார்ச் 31 நிலவரப்படி 631 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஆயுள் காப்பீடு தீர்வுகளை இன்ஷூரன்ஸ் திட்டங்கள், குறிப்பாக பாரம்பரிய பாலிசிகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த பாலிசிகள் (traditional insurance products and ULIPs ) மூலம் அளித்து வருகிறது. இவற்றின் மூலம் பாலிசிதாரர்களின் வாழ்க்கை இலக்குகள் நிறைவேற உதவி வருகிறது. மேலும் குரூப் ஆயுள் காப்பீடு மற்றும் ஆரோக்கிய காப்பீடுகளை ( group insurance and health insurance plans) அளித்து வருகிறது.

For further details, please contact:
Bajaj Allianz Life Insurance Co. Ltd.                                                  Adfactors PR
Anuja Sharma: +91 9833866842                                                                      Brijesh Kutty: +91 9920460901
Siksha Kapoor: +91 9748896818                                                                     Sakina Gandhi: +91 9820270423                                                                                            
                                                                  
Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.