மொத்தப் பக்கக்காட்சிகள்

சார்பு அலுவலங்களில் நிலுவையிலுள்ள சொத்து பத்திரங்களுக்கு சமாதான திட்டம் அறிமுகம்!

சார்பு அலுவலங்களில் நிலுவையிலுள்ள  சொத்து பத்திரங்களுக்கு சமாதான திட்டம் அறிமுகம்!

தமிழகத்திலுள்ள சார்பு பதிவாளர் அலுவலகங்களில் மதிப்பு நிர்ணயத்துக்காக நிலுவையிலுள்ள சொத்துப் பத்திரங்களுக்கு தீர்வு காண சமாதான திட்டம்  2018 ஜனவரி 11 (11.01.18) முதல் நடைமுறைக்கு வருகிறது.

சொத்துகளை விற்பனை செய்யும்போது அதில் குறிப்பிடப்படும் சொத்து மதிப்பு அதிகம் என அதனை பதிவு செய்பவர் கருதி,  அரசு வழிகாட்டி மதிப்பை விட குறைவாக செலுத்தும் நடைமுறை உள்ளது. இந்தப் பத்திரங்கள் சரி பார்ப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் / கலெக்டருக்கு அனுப்பப்படும்.

இப்படி அனுப்பப்படும் கிரையப் பத்திரங்களுக்கு பதில் அனுப்படாமல்  நீண்ட காலமாக நிலுவையில் இருக்கின்றன.  


இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண சமாதான திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி பத்திரப் பதிவு குறித்து மேற்கொண்டு எவ்வித விசாரணையும் இல்லாமல் ஆவணங்கள் உடனடியாக திரும்ப வழங்கப்படும்.

அனைத்து சார்பு பதிவாளர் அலுவலகங்களிலும் இதற்கென சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

கிரையப் பத்திரத்தைப் பெற விரும்புகிறவர்கள், சார்பு பதிவாளரால் வழிகாட்டி மதிப்புகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட முத்திரைத் தீர்வை / பதிவுக் கட்டணம் மற்றும் ஏற்கனவே செலுத்தப்பட்ட முத்திரைத் தீர்வை / பதிவுக் கட்டணம் இவற்றின் வித்தியாசத்தில் மூன்றில் இரண்டு பங்கு மட்டும் கட்டினால் போதும்.

இந்தத் சமாதான திட்டம், ஏப்ரல் 2 ம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக பத்திரப் பதிவுத் துறை அறிவித்துள்ளது.


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மூத்த குடிமக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். Senior

ஒரு 83 வயது பாட்டி, படுக்கையில் படுத்துக்கொண்டு, தனது 87 வயதான கணவரிடம் கூறினார்: "இங்க பாருங்க, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன், கேர...