மியூச்சுவல் ஃபண்ட். அதிக லாபம் தருகிற முதலீடு2003, மார்ச் 31 -ம் தேதி 10 கிராம் (24 கேரட்) தங்கத்தோட விலை 5,310 ரூபாய். அப்போ ஒரு லட்சம் ரூபாயை தங்கத்துல முதலீடு செஞ்சிருந்தா அவருக்கு சுமார் 188 கிராம் சுத்தத் தங்கம் கிடைச்சிருக்கும்.


2008, மார்ச் 10 - ம் தேதி நிலவரப்படி அதோட மதிப்பு 2,35,781 ரூபாயா இருந்திருக்கும். அதே தொகையை பேங்க்கில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருந்தா இதைவிடக் குறைவாத்தான் கிடைச்சிருக்கும்.
இதெல்லாம் இல்லாம ஒரு சேமிப்பு வழி இருக்கு. அந்தக் கணக்கைப் பார்த்தா தெரியும், அது எத்தனை சூப்பர்னு!

அதே ஒரு லட்சத்தை ஆரம்பித்த நாளிலிருந்து சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரிலையன்ஸ் குரோத்ங்கிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்துல 2003, மார்ச் 31 -ல் (என்.ஏ.வி. 28.28 ரூபாய்) போட்டிருந்தா, 2008 மார்ச் 10ல் கிடைச்சிருக்கக்கூடிய தொகை எவ்வளவு தெரியுமா?

 சுமார் 11,89,065 ரூபாய்! 


பணமும், காலமும் அதே அளவு. லாபம் மட்டும் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி.

அதான் மியூச்சுவல் ஃபண்ட். தமிழில் பரஸ்பர நிதி. நீண்டகால அடிப்படையில அதிக லாபம் தருகிற முதலீடு இது!சேமிப்பு முதலீடு தகவல் களஞ்சியம்

- சி.சரவணன்

Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.

0 Comments: