மொத்தப் பக்கக்காட்சிகள்

தங்கம் விலை அதிகரிப்பு - பத்து முக்கிய காரணங்கள்...!

Gold price தங்கம் விலை அதிகரிப்பு குறைவு -  பத்து முக்கிய காரணங்கள்...!

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் ஆண், பெண் வயது வித்தியாசம் இல்லாமல் தங்கத்தை ஆபரணமாக அணிவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். கல்யாணம், காட்சி என்றால் முக்கிய பரிசுப் பொருளாக இருப்பது தங்கம்தான் என்றால் மிகை இல்லை.
அண்மை மாதங்களில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கடன் சுமை கண்டபடி அதிகரித்து அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கேள்வி குறியாகி இருக்கிறது.

இந்நிலையில் மிக பாதுகாப்பான முதலீடாக உலகம் முழுக்க தங்க மாறியிருக்கிறது. பத்து கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை 25,000 ரூபாய், 26,000 ரூபாய் என தாண்டி கொண்டிருக்கிறது. அது விரைவில் 27,000 ரூபாய்க்கு மேல் சென்றாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.


தங்கம் விலை இப்படி வேகமாக அதிகரித்து வருவதற்கு பல காரணங்கள் என்கிறார்கள், பொருளாதார மேதைகளில் அவற்றில் மிக முக்கியமான பத்து காரணங்கள் இங்கே உங்களுக்காக பட்டியலிடப்பட்டிருக்கின்றன. படித்து பயன் பெறுவதோடு தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பாருங்கள்.

1. வெட்டி எடுப்பது குறைவு: 

உலகில் தங்கம் வெட்டி எடுப்பது ஆண்டாண்டு குறைந்து கொண்டு வருகிறது. காரணம், பூமிக்கு அடியில் இருக்கும் தங்கத்தில் அளவு குறைந்துக் கொண்டே வருவது. மேலும், தங்கத்தை வெட்டி எடுக்கும் செலவு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.<br /><br />பூமிக்கு மேல் இருக்கும் தங்கம் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டு நிலையில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு கீழே குடைந்து சென்றால்தான் தங்கத் துகள்களை கண்ணிலேயே பார்க்க முடிகிறது. உலக முழுக்க தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 3,550 டன்னாக இருக்கிறது. ஆனால், உற்பத்தி 2,450 டன்தான். அதாவது பற்றாக்குறை சுமார் 1,100 டன். மேலும், உலக அளவில் பூமிக்கு அடியில் வெறும் 22,000 டன் தங்கம்தான் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

2 இருப்பு கொஞ்சம்தான்...!

பூமிக்கு அடியில் தங்க இருப்பு குறைவாக இருப்பதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். பூமிக்கடியிலிருந்து இதுவரை சுமார் 1.70 லட்சம் டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் தோராயமான மதிப்பு 7.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் (டிரில்லியன் என்பது லட்சம் கோடி) என்கிறது ஒரு புள்ளி விவரம். அதே நேரத்தில், சர்வதேச அளவில் புழக்கத்திலிருக்கும் பணம், கம்பெனிகளின் பங்குகள், சேமிப்புகள், முதலீடுகள் உள்ளிட்டவற்றின் மதிப்பு சுமார் 60 டிரில்லியன் அமெரிக்க டாலர். இது தங்கத்தின் மதிப்பை விட சுமார் 8.5 மடங்கு அதிகம். <br /><br />சுருங்கச் சொல்வது என்றால் மக்களிடம் அதிக பணம் இருக்கிறது. தங்கம் குறைவாக இருக்கிறது. இதனால் அரிய பொருளாக இருக்கும் தங்கத்தை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுகிறார்கள்.

3 இயற்கை பொருள் 

தங்கத்தை செயற்கையாக தயாரிக்க முடியவில்லை என்பதால் அதன் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்யும். அதாவது, இருக்கிற தங்கத்தைத்தான் பயன்படுத்த வேண்டிய நிலையில் உலக மக்கள் இருக்கிறார்கள்.

இந்தியா, அதன் தேவையில் சுமார் 95 சதவிகிதத்தை இறக்குமதி மூலம்தான் ஈடுகட்டி வருகிறது. கடந்த 2010 ம் ஆண்டில் மட்டும் நாம் சுமார் 9.63 லட்சம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறோம்.

4 ஜொலிக்கும் தங்கம் 

ஆபரணங்களை எடுத்துக் கொண்டால் தங்கத்துக்கு இணை எதுவுமில்லை. அதன் பளிச் மஞ்சள் மங்களகரம் என்பதோடு நிறம் மங்காது. வைரம், பிளாட்டினம் எல்லாம் தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கதாக இருக்கலாம். ஆனால், தங்கத்தின் அழகுக்கு அவற்றால் ஈடு கொடுக்கவில்லை என்பதால் வாங்குபவர்கள் அதிகம் இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் அரசர் காலம் முதல் இன்று வரை ஆபரண விஷயத்தில் தங்கம் தான் வெற்றி ராணியாக இருக்கிறது.

5 டாலர் மதிப்பு வீழ்ச்சி 

அமெரிக்க நாட்டின் கரன்ஸியான டாலரின் வெளிமதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதும் தங்கம் விலை உயர்வு ஒரு காரணம். அதாவது, டாலர் கரன்ஸியாக வைத்திருப்பதற்கு பதில் தங்க நாணயமாக பெரும்பாலோர் வாங்கி வைக்கிறார்கள். தேவை ஏற்படும்போது தங்கத்தை விற்று செலவு செய்துக் கொள்கிறார்கள். இது அமெரிக்கா தொடங்கி நம் தமிழ்நாடு வரை வந்திருக்கிறது.

6 இதர முதலீடு லாபமில்லை

சர்வதேச நாடுகளில் 2008 ம் ஆண்டுக்கு பிறகு பங்குச் சந்தைகள் குறிப்பிடும்படி லாபம் கொடுக்கவில்லை. மேலும், பணவீக்க விகிதம் மற்றும் விலைவாசி அதிகரிப்பை கணக்கு எடுக்கும் போது ஃபிக்ஸட் டெபாசிட், ரியல் எஸ்டேட் முதலீடு போன்ற எதுவும் நல்ல லாபம் தரவில்லை.

அமெரிக்காவில் பல வங்கிகள் அண்மை ஆண்டுகளில் திவாலாகி இருக்கின்றன. கொடுத்து வருகின்றன. இதனால், வங்கிகளில் பணம் போட்டு வைக்கவே அந்த நாட்டு மக்கள் தயங்குகிறார்கள். அதற்கு பதில் தங்க நாணயம், கட்டிகளாக வாங்கி குவித்து வருகிறார்கள்

7 பண வீக்க விகிதத்தை தாண்டிய வருமானம்

தங்கத்தில் செய்யப்பட்ட முதலீடு, விலைவாசி உயர்வையும் மீறி லாபம் தந்துக் கொண்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இரண்டு லட்ச ரூபாய்க்கு தங்க நாணயம் வாங்கி இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதனை கொண்டு அப்போது என்ன பொருள்கள் எல்லாம் வாங்கியிருப்பாரோ அதே பொருட்களை ஏன் அதிகவிட அதிக பொருட்களை கூட இன்றைய தேதியில் வாங்க முடியும். அந்த அளவுக்கு விலைவாசி உயர்வையும் தாண்டி தங்கத்தின் விலை உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.

8 முதலீட்டு கோணம்..! 

தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்து வருவதால் அதை லாபகரமான முதலீடாக பார்க்க தொடங்கி இருக்கிறார்கள், உலகம் முழுக்க உள்ள முதலீட்டாளர்கள். அதனால், தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏழை எளிய மக்கள் கிராம் கணக்கில் வாங்கினால் பணக்காரர்கள் பவுன் கணக்கில் வாங்குகிறார்கள். கோடீஸ்வரர்கள் கிலோ கணக்கில் வாங்குகிறார்கள். நாடுகளோ டன் கணக்கில் வாங்கி குவிக்கின்றன. இப்போது கூட தென்கொரியாவின் மத்திய வங்கி 25 டன் தங்கத்தை வாங்கி அதன் இருப்பில் சேர்த்திருக்கிறது.

9 தொழில்துறை பயன்பாடு அதிகரிப்பு 

செல்போன் உள்ளிட்ட எலெக்ட்-ரானிக்ஸ் பொருட்கள், மருத்துவத் துறையில் தங்கத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் இந்த உபயோகம் இன்னும் கூடும் என்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்பு. .

10 பொருளாதார வளர்ச்சி குறைவு

எப்போது எல்லாம் உலக நாடுகளின் பாருளாதார வளர்ச்சி குறைகிறதோ, அவ நம்பிக்கை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தங்கத்தின்  மதிப்பு வேகமாக ஏறத் தொடங்கும். இப்போது அமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய மண்டலத்தில் பொருளாதார அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்பதால் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருக்கிறது.

அடுத்து தொடர்ந்து ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை என கல்யாண மற்றும் பண்டிகை காலங்கள் வருவதால் இன்னும் ஆறு மாத காலத்துக்கு தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் இருக்கும் என்கிறார்கள், நிபுணர்கள்.
அமெரிக்காவின் கரன்ஸியான டாலரின் மதிப்பு அதிகரித்தால் தங்கத்தின் விலை குறையும். டாலரின் மதிப்பு குறைந்தால் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இலவச பங்குச் சந்தைப் பயிற்சி ஞாயிறு, 21 ஏப்ரல் 2024

இலவச  பங்குச் சந்தைப் பயிற்சி  பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளவரா? பங்குச் சந்தை முதலீடு பற்றி அறிய இந்த இலவசப் பயிற்சியில் சேரவ...