மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த முதலீட்டாளர் விழிப்புணர்வைப் பரப்புவதற்காக பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா "சேஞ்ச் தி சோச் – கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணம்" என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்குகிறது
·
பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியாவின் தலைவர் அவினாஷ் சத்வலேகர், நிதி அறிவு மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்காக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4000+ கிமீ தூரம் பயணம் செய்து, பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்களைச் சந்திக்க உள்ளார்.
·
இந்த முதலீட்டாளர் கல்விப் பிரச்சாரம், குறிப்பாக இந்தியாவில் உள்ள பெண்கள் சேமிப்பிலிருந்து முதலீட்டை நோக்கி முன்னேறுவதற்கான நிதி அறிவின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு அமையும்
பிராங்க்ளின் டெம்பிள்டன் (இந்தியா) நிறுவனம் இன்று “சேஞ்ச் தி சோச் – கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணம்” எனும் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இது நிதி அதிகாரமளித்தலை, குறிப்பாகப் பெண்களிடையே ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முதல் வகையான நாடு தழுவிய பிரச்சாரமாகும். பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம் இந்தியாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்வதைக் கொண்டாடும் வகையில், 30 நாட்கள் நடைபெறும் இந்தப் பயணம் நாட்டின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் தொடங்கி 21 நகரங்களைக் கடந்து, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் முடிவடையும். ஊடாடும் நிதி கல்வி அமர்வுகள், நிபுணர்களின் கருத்துக்கள், சமூக ஈடுபாடு ஆகியவற்றின் மூலம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த சந்தேகங்களைத் தீர்த்து, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்கள் நிதி எதிர்காலத்தைத் தாங்களே பொறுப்பேற்றுக் கொள்ளும் நம்பிக்கையை இந்தப் பயணம் வழங்கும்.
Avi Satwalekar, President of Franklin Templeton Asset Management (India) Private Limited
பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியாவின் தலைவர் அவினாஷ் சத்வலேகர், இந்தப் பயணத்தை முன்னின்று நடத்தி, நாடு முழுவதும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்த உள்ளார். அவர் ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒரு புதிய நகரம் அல்லது கிராமத்தில் தங்கி, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்காக முதலீட்டாளர் கல்விப் பயிலரங்குகளை நடத்துவார்.
இதில் சேமிப்பு, முதலீடு, மற்றும் வாழ்க்கை இலக்குகளை அடைய நீண்டகாலச் செல்வத்தை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து அவர் வலியுறுத்துவார். இந்த முன்முயற்சியில் பரந்த அளவிலான பங்கேற்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
இதில் பெரும்பான்மையானோர் பெண்களாக இருப்பர், (குறிப்பாக மீனவச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல் பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் வரை), கல்வித் துறையினர் (மாணவர்கள், பெற்றோர், பள்ளி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள்), சுயஉதவிக் குழுக்கள் (உணவு மற்றும் கைத்தறி துறைகளில் ஈடுபட்டுள்ள பெண்கள்), தொழில்முனைவோர், தனியார் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள், இராணுவம், கடற்படை மற்றும் காவல் துறையினர் இதில் அடங்குவர்.
இந்த முன்முயற்சி அறிமுகம் குறித்து பேசிய பிராங்க்ளின் டெம்பிள்டன்-இந்தியாவின் தலைவர் அவினாஷ் சத்வலேகர் கூறியதாவது, ”பெண்களிடையே நிலவும் நிதி அறிவு என்பது இந்தியாவின் நீண்டகால சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையானது. நகர்ப்புற மையங்கள் அர்த்தமுள்ள முன்னேற்றங்களை அடைந்துள்ள நிலையில், பாரதத்தின் இலட்சக்கணக்கான பெண்கள், குறிப்பாக 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரப் பகுதிகளில் உள்ளவர்கள் நிதி அறிவு மற்றும் கருவிகளை அணுகுவதில் இன்னும் பின்தங்கியே உள்ளனர். இந்த முன்முயற்சியின் மூலம், நாங்கள் வாழ்க்கையின் பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த பெண்களுடன் இணைந்து பணியாற்றி, சேமிக்கவும், முதலீடு செய்யவும், டிஜிட்டல் நிதி முறைகளைப் பின்பற்றவும் தேவையான அறிவையும் நம்பிக்கையையும் அவர்களுக்கு வழங்குவோம்.”
அவர் மேலும் கூறுகையில், ”பெண்கள் தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்கும்போது, குடும்பங்கள் வலிமை பெறுகின்றன, சமூகங்கள் செழிக்கின்றன, மற்றும் நாடு உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. இந்த இடைவெளியைக் குறைப்பது என்பது வெறும் கல்வியைத் தாண்டியது - இது 2047-ஆம் ஆண்டுக்குள் விக்சித் பாரதம் (வளர்ச்சியடைந்த நாடு) என்ற இந்தியாவின் இலட்சியத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாகும், மேலும் இது ஒரு அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான நிதிச் சூழலை உருவாக்குவதற்கும் வழிவகுக்கும்.”
About Franklin Templeton
Franklin Templeton (India) is one of the largest foreign
fund houses** in the country. It manages one of the most comprehensive ranges
of mutual funds catering to varied investor requirements and offering different
investment styles to choose from. It has offices in 39 cities and Collection
Centers in over 100 locations across the country.
Franklin Resources, Inc. [NYSE:BEN] is a global
investment management organization with subsidiaries operating as Franklin
Templeton and serving clients in over 150 countries. Franklin Templeton’s
mission is to help clients achieve better outcomes through investment
management expertise, wealth management and technology solutions. Through its
specialist investment managers, the company offers boutique specialization on a
global scale, bringing extensive capabilities in equity, fixed income,
multi-asset solutions and alternatives. With offices in more than 25 countries
and approximately 1,600 investment professionals, the California-based company
has 77 years of investment experience and $1.66 trillion in assets under
management as of December 31, 2025.
** Source: AMFI Website (based on AAUM as on December 31,
2025)
*Visit our website http://www.franklintempletonindia.com
for further details including details of AUM by geography.