நாராயணா ஹெல்த் இன்ஷூரன்ஸ்: ஆர்யா ஹெல்த் திட்டம்:
ஆர்யா மற்றும் ஆர்யா பிளஸ் என்ற பெயரில் இரண்டு புதிய காப்பீட்டு திட்டங்களை நாராயணா மருத்துவக் குழுமம் அறிமுகம் செய்திருக்கிறது. இந்தக் காப்பீட்டை பயன்படுத்தி நாராயணா ஹெல்த் மருத்துவமனைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வேறு பல பிரபல மருத்துவமனைகளிலும் தங்கி சிகிச்சை பெற முடியும்.
இந்தக் காப்பீட்டை நாராயணா குழும மருத்துவமனைகளில் பயன்படுத்தும் போது கூடுதலாக எந்தப் பணமும் செலுத்த வேண்டியதில்லை.
ஆர்யா பிளஸ் காப்பீட்டு
திட்டத்தை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி மருத்துவமனைகளில்
சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவ காப்பீடு தேவைப்படுபவர்கள் இந்தப் புதிய
காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.