குரோவ் நிஃப்டி மெட்டல் இ.டி.எஃப் (Groww Nifty Metal ETF)
மெட்டல்
துறை சார்ந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் தீமெட்டிக் வகை திட்டத்தை குரோவ்
மியூச்சுவல் ஃபண்ட் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த திட்டத்தில் 2025 டிசம்பர் 17 வரை
என்.எஃப்.ஓ. வெளியீட்டின் மூலம் முதலீட்டை மேற்கொள்ளலாம்.
குறைந்தபட்சம் ரூ. 500 - இல் இருந்து முதலீட்டை தொடங்கலாம். காப்பர், ஸ்டீல், அலுமினியம் போன்ற பல்வேறு உலோகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ளன. பொதுவாக, மெட்டல் துறை அதிக ஏற்ற இறக்கம் மற்றும் பொருளாதார சுழற்சி சார்ந்தது ஆகும்.
இந்தியாவின்
வளர்ச்சியோடு தொடர்புடைய கட்டுமான துறையின் நேரடி தொடர்பு இருப்பது இந்தத்
துறைக்கு சாதகமான விஷயம் ஆகும். தீமெட்டிக் வகை திட்டங்கள் மிக அதிக ரிஸ்க்
உடையவை. அதனால் இந்த ஃபண்ட் திட்டத்தின் ரிஸ்கை அறிந்து முதலீடு செய்வது நல்லது.