ஆதித்ய
பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ்: புதிய பென்ஷன் திட்டம்:
ஆதித்ய
பிர்லா சன்லைஃப் இன்ஷுரன்ஸ் நிறுவனம் (ABSLI), விஷன் ரிட்டயர்மென்ட் சொல்யூஷன்
(Vision Retirement Solution) என்ற பெயரில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த
நிறுவனத்தின் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பென்சன் திட்டமான கேரன்டீட் ஆனுட்டி பிளஸ் மற்றும்
யூலிப் திட்டமான வெல்த் இன்ஃபினியா ஆகிய இரண்டு திட்டங்களின் கலவையாக இந்தப் புதிய
ஓய்வூதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் அதிகபட்சம் 65 வயது வரை ஒருவரால் சேர முடியும். 100 வயது வரை இந்தத் திட்டத்தின் பயனாளருக்கு பென்ஷன் கிடைக்கும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 5% தொகையை எஸ்.டபிள்யூ.பி. முறையில் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது. பென்ஷன் தொகையை ஒவ்வொரு மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இடைவெளியில் பெற்றுக் கொள்ளும் வசதி உள்ளது.
மருத்துவத்துறை வளர்ச்சி மனிதரின் சராசரி ஆயுள் காலத்தை கணிசமாக
அதிகரித்துள்ளது. அதனால் நீண்ட காலத்திற்கு நிம்மதியான ஓய்வு கால வாழ்க்கைக்கு
பென்ஷன் வேண்டும் என நினைப்பவர்கள் ஒருவரின் 100 வயது வரை ஓய்வூதியம் வழங்கும்
இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.