பொதுப்பங்கு மூலம் ரூ.1,700 கோடி நிதி திரட்டுகிறது 'லலிதா ஜூவல்லரி'
'செபி' அமைப்பு ஒப்புதல்
சென்னை, 2025 அக்.7-லலிதா ஜூவல்லரி நிறுவனம், பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.1,700 கோடி நிதி திரட்ட, 'செபி' எனும் இந்திய பங்கு மற்றும் பரி வர்த்தனை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
லலிதா ஜூவல்லரி
தமிழ்நாடு மற்றும் தென்மா நிலங்களின் முன்னணி நிறுவ னங்களில் ஒன்றான லலிதா ஜூவல்லரி, 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
தங்கம், வெள்ளி, வைர நகைகள் விற்பனையில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மொத்தம் 56 கடைகளுடன் இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் ஐ.பி.ஓ. எனப்படும் ஆரம்ப பொதுப்பங்கு வழங்கல் மூலம் ரூ.1,700 கோடி திரட்ட முடிவு செய்தது.
இதற்காக, செபி அமைப்பிடம் லலிதா ஜூவல்லரி நிறுவனம் ஆவணங்களை தாக்கல் / செய்தது. இந்த ஆவணங்களை பரிசீலித்த செபி அமைப்பு, லலிதா ஜூவல்லரி நிறுவனம் பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.1,700 கோடி திரட்ட ஒப்புதல் அளித்தது.
புதிய கடைகள்
இந்த ஐ.பி.ஓ.வில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியீடு மற்றும் லலிதா ஜூவல்லரி நிறுவனர் |கிரண் குமார் ரூ.500 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கான சலுகை ஆகியவை அடங்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "இந்த புதிய வெளியீடு மூலம் வரும் தொகையிலிருந்து 14.50 கோடி வரை இந்தியாவில் புதிய கடைகளை அமைப்பதற் கான மூலதன செலவினம் மற்றும் பொது நோக்கங்களுக்காக செலவிடப்படும்.
நிகர லாபம் உயர்வு
எங்கள் நிறுவனம் செயல்ப டுத்தி வரும் 'தன வந்தனம்' | மற்றும் 'ப்ரீ அன்ட் பிளக்சி' போன்ற நகை திட்டங்களில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 261 வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
சென்னை திருமுடிவாக்கம், மறைமலை நகர் ஆகிய இடங்களில் 563 பணியாளர்கள் மூலம் எங்கள் நிறுவனம் நகைகளை உற்பத்தி செய்து வருகிறது.
2022-23-ம் நிதியாண்டில் ரூ.238 கோடி என இருந்த எங்
கள் நிறுவனத்தின் நிகர லாபம் 2023-24-ம் நிதியாண்டில் ரூ.359 கோடியாக உயர்ந்தது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.