செப்டம்பர் 30
*சர்வதேச மொழிபெயர்ப்பு நாள்*
திருவிவிலியத்தை எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக லத்தினுக்கு மொழி பெயர்த்த புனித ஜெரோமின் என்பவரின் நினைவு நாளான இன்று செப்டம்பர் 30ம் நாள் சர்வதேச மொழிபெயர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

குரோசியாவில் பிறந்த ஜெரோமின் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார்.
கிறிஸ்துவ குருவும், இறையியல்லாளர், வரலாற்று ஆசிரியராக இருந்தவர்.இவர் ரோமில் படித்த பின்னர் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல்வேறு நாடுகளுக்கு சென்றார்.
இதன் காரணமாக செம்மொழிகளான கிரேக்கம், லத்தின், எபிரேயம் ஆகிய மொழிகளில் மேதையானார். இவர் எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளில் இருந்து கிறிஸ்துவர்களின் புனித நூலான திருவிவிலியத்தை லத்தின் மொழியில் மொழி பெயர்த்தார்.
இதன் மூலம் இவர் உலகிற்கு பெரிதும் அறியப்பட்டார்.இவரின் மொழிபெயர்ப்பை ட்ரென்ட் பொதுச்சங்கம் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு என அறிவித்தது. இவரை சிறப்பிக்கும் விதமாக 1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இவரின் நினைவுதினத்தில் சர்வதேச மொழிபெயர்ப்பாளர்களர்களின் தினமாக ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது