குறைந்தபட்ச முதலீடு: ரூ. 1,000
இன்வெஸ்கோ இந்தியா கன்சப்ஷன் ஃபண்ட்
Invesco India Consumption Fund
இன்வெஸ்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நுகர்வோர் துறை சார்ந்த நிறுவனப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை மியூச்சுவல்
ஃபண்ட் திட்டத்தை இன்வெஸ்கோ இந்தியா கன்சப்ஷன் ஃபண்ட் (Invesco India Consumption Fund)
என்கிற
பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
இந்தப்
புதிய ஃபண்ட் திட்டத்தில் (NFO) 2025 அக்டோபர் 3 முதல் அக்டோபர் 17 வரை வெளியீட்டின் மூலம் முதலீடு செய்யலாம்.
குறைந்தபட்ச முதலீடு: ரூ. 1,000
இந்தியாவில்
நுகர்வோர் துறை சார்ந்த நிறுவனங்களில் வரும் 2030 -ம் ஆண்டில் ரூ. 4.3 லட்சம் கோடிக்கு நாட்டில் வர்த்தகம் நடைபெறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
குறைவான கடன் வட்டி விகிதம், பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, நிதியாண்டு 2025-26-; ரூ. 12 லட்சம் வரைக்கும் வருமான வரி விலக்கு, , ஜிஎஸ்டி 2.0 மாற்றங்கள் மூலம் குறைந்த வரி, விவசாயத்துக்கு ஏற்ற பருவ மழை காலம், மத்திய அரசின் 8-வது சம்பள
கமிஷன் மூலம் கிடைக்க உள்ள ஊதிய உயர்வு போன்றவை நாட்டில் நுகர்வை அதிகரிக்கும்.
இது இத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அனுகூலமானது.
இந்தத் திட்டம் நிஃப்டி இந்தியா கன்சப்ஷன் டிஆர்ஐ குறியீட்டில் உள்ள நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும்.
நீண்ட
காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12-13 சதவிகித வருமானத்தை இந்த ஃபண்ட் மூலம் எதிர்பார்க்கலாம்.
கூடுதல் விவரங்கள் மற்றும் முதலீட்டுக்கு..!
கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்,
நிறுவனர், விருக்ஷம் ஃபின்மார்ட் பிரைவேட் லிமிட்,
(Viruksham Finmart
Private Ltd)
சென்னை
இ மெயில் : kpvenkat02@gmail.com
செல் நபம்பர் : 98410 34997
நாணயம் விகடன் இதழில் வெளியான திரு. கே.பி.வெங்கடராமகிருஷ்ணன்
அவர்களின் கட்டுரைகளை படிக்க
Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை ரிஸ்க்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் நிச்சயமான ஆதாயங்கள் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.