கோடை விடுமுறை: முதலீட்டுக்குக் கவனிக்க வேண்டிய பங்குகள்..! Summer vacation
சங்கர்
ராஜா எம்.பி. தென் மண்டலத் தலைவர் – பிரைவேட் கிளையண்ட் குரூப், பிரபுதாஸ் லீலாதர்
பிரைவேட் லிமிட்
மழைக்
காலம் நெருங்குவதற்கு முன்பே எறும்புகள் தமது உணவுகளை சேகரிக்க தொடங்கி விடும். அதைப்போல நம்மில் பலர் கோடை காலம் நெருங்கும் போது விடுமுறை பயணங்களுக்கு தயார் செய்ய தொடங்கி விடுவோம். குழந்தைகளுக்கு நீண்ட நாள்கள் கோடைகால விடுமுறை இருப்பதால் அவர்களும் இந்தப் பயணத்தை எதிர்நோக்கி இருப்பர்.
இந்தப்- பயணங்களின் மூலம் கிடைக்கும் சந்தோஷம் சிறுவர்களுக்கு மட்டுமின்றி பெரியவர்களிடத்திலும் மிகப்பெரிய மன மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தான்சானியா நாட்டிலுள்ள செரங்கட்டி தேசிய பூங்கா தான் உலகத்திலேயே அதிக விலங்குகள் ஒரே நேரத்தில் பயணம் மூலம் இடம் பெயர்வதில் முதலிடத்தை பிடிக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள இந்த நாட்டில் கோடை காலத்தில் வரிக்குதிரை உட்பட 1.5 கோடி விலங்குகள் கால்நடையாக ஏறக்குறைய 2500 கிலோ மீட்டர் பயணம் செய்து கென்யா நாட்டில் உள்ள மசை மாரா தேசிய பூங்காவிற்கு இடம் பெயரும்.
அதை விஞ்சும் வகையில் தற்போது நமது நாட்டில் கோடை காலங்களில் 82% இந்தியர்கள் விடுமுறை போன்ற காரணங்களால் பயணம் மேற்கொள்வதாக ஓயோ (OYO) நிறுவனத்தின் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
விருந்தோம்பல்
துறை..!
இவ்வாறு அதிக மக்கள் பயணம் செய்வது விருந்தோம்பல் (Hospitality) துறை சார்ந்த பல நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வருவாயை வழங்கி வருகிறது. இந்த நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்தால் நம்மால் அதிக லாபத்தை அடைய முடியும்.
முதலீட்டுக்கு
சரியான பங்குகளை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதை முதலில் பார்ப்போம்.
நல்ல பங்குகளை
தேர்வு செய்வது எப்படி?
நல்ல பங்குகளை பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம்.
நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில் நிறுவனரின் பங்கு அதிகமாக இருக்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். நிறுவனர்களின் பங்கு குறைவாக இருக்கும்பட்சத்தில் அந்த நிறுவன பங்கை தவிர்த்து விடுவது நல்லது. அடுத்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், உள்நாட்டு மியூச்சுவல்
ஃபண்ட் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு முதலீடு அதிகமாக
இருப்பது நல்லது.
பங்கு
மூலதனம் மீதான வருமானம் (Return on Equity) ஆண்டுக்கு 15% என்ற அளவிற்கு மேல் இருக்க வேண்டும்.
கடன்களுக்கான வட்டி கவரேஜ் விகிதம் 2% க்கும் அதிகமாக இருக்க வேண்டும். இந்த விகிதம் என்பது நிறுவனத்தின் வட்டி, வரிக்கு
முந்தைய வருவாயை வட்டி செலவால் வகுக்க கிடைப்பதாகும்.
மேலும் கடனுக்கும் பங்கு மூலதனத்துக்குமான விகிதம் (Debt to Equity Ratio) 1.5 என்ற அளவிற்கு குறைவாக இருக்க வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் வருமான வளர்ச்சி 15%,நிகர லாப வளர்ச்சி 15% என்ற அளவிற்கு அதிகமாகவும் இருக்க வேண்டும்.
செயல்பாட்டு லாப வரம்பு (Operating Profit Margin
- OPM) 30% என்ற அளவிற்கு அதிகமாகவும் இருக்கும் நிறுவனப் பங்குகளை முதலீட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம்.
வெவ்வெறு
பயணத் திட்டம்..!
பயணம் மேற்கொள்வதற்கு பலருக்கு விருப்பம் இருந்தாலும் ஒவ்வொரு நபரின் பயணத் திட்டமும் வெவ்வேறாக இருக்கும்.
ரமேஷ் குடும்பத்திற்கு பென்ஸ் காரில் இந்தியா முழுவதும் சுற்றி வருவதற்கு ஆசை. ஸ்ரீநிவாஸ் குடும்பத்திற்கோ தூங்கும் வசதி கொண்ட பஸ்ஸில் தென்னிந்திய கோயில்களுக்கு செல்வதற்கு விருப்பம். சந்திரன் குடும்பத்திற்கோ விமானத்தில் வெளிநாடு செல்வதற்கு ஆசை. ஆனந்த் குடும்பத்திற்கு சொகுசு கப்பலில் கடலில் பிரயாணம் செய்ய அதிகமாக பிடிக்கும். அவர்களின் பயணத்திட்டத்தில் நல்ல ஹோட்டலில் அறை எடுத்து தங்குவது, ரிசார்ட்டில் ஓய்வெடுப்பது, அம்யூஸ்மென்ட் பார்க்கில் திரில் ரைட் செல்வது என்று பல்வேறு விருப்பங்கள் இருக்கலாம்.
இதுபோன்ற பல்வேறு விருப்பங்களை பூர்த்தி செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் தேடி முதலீடு செய்வது நல்லது. நாம் மேலே கூறிய காரணிகளுக்கு பொருந்தி போகும் நிறுவனங்கள் பின்வருமாறு:
Rategain,
TBO Tek, Le Travenues, BLS International, Chalet Hotels, EIH, Imagica and
Safari Industries.
பொழுது
போக்கு…!
பயணம் தவிர்த்து கோடை விடுமுறையை கழிப்பதற்கு இன்னும் பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று பொழுது போக்கு ஆகும்.
இதுவும் தனிநபரின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுபடும். பிடித்த இசையை கேட்பது, திரையரங்கிற்கு சென்று பிடித்த நடிகரின் படத்தை நண்பர்களுடன் பாப் கார்ன் கொறித்த படி பார்ப்பது, மல்டி குசைன் ரெஸ்டாரண்டிற்கு சென்று பிடித்த உணவுகளை புசித்து மகிழ்வது என்று அவரவர் விருப்பத்தின்படி விடுமுறையை கழிப்பர். வேறு சிலருக்கோ வீட்டிலிருந்தபடியே ஓடிடி மூலம் வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டு உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களிடமிருந்து ஹோட்டல் உணவுகளை வீட்டிற்கு வரவழைத்து சாப்பிடுவது விருப்பமாக இருக்கலாம்.
தற்போது ஐபிஎல் சீசன் நடக்கிறது. நம்மில் பலருக்கு நமக்கு பிடித்த சிஎஸ்கே அணியின் போட்டியை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அமர்ந்து பார்ப்பதற்கு பிடித்திருக்கலாம்.
மேற்கூறிய விருப்பங்களை பூர்த்தி செய்யும் முக்கிய நிறுவனங்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள்:
Varun
beverages, Manorama Industries, PVR Inox, TIPS Music, Saregama Industries,
Nazara Tech, Zomato, Bharti Airtel
படிப்பு
தொடர்பானது..!
கோடை விடுமுறை முடிந்தவுடன் பள்ளி கூடங்கள், கல்லூரிகள் திறந்து விடும். புதிய புத்தகப் பை, புத்தகங்கள், பென்சில், காலனி வரை பல்வேறு பொருள்கள் வாங்குவது இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும்.
புதிய ஆண்டிற்கான கல்விக் கூட திறப்பிற்கு உதவிடும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள்:
Metro
Brands, Bata, Doms Industries, S Chand and Company
கோடை விடுமுறையை ஜாலியாக கழிக்கும்
அதேநேரத்தில், அது சார்ந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்து நீண்ட காலத்தில் பண
வீக்க விகித்தை விட இரு மடங்கு லாபம் ஈட்டி, வருங்காலத்தில் கோடையை இன்னும்
ஜாலியாக கழிக்க வாழ்த்துகள்.