கிராம ஊராட்சி குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி: இந்த 5 ஆவணங்கள் அவசியம் தேவை…! Approval Documents
கிராம
ஊராட்சிகளில் குடியிருப்பு கட்டடங்களுக்கு அனுமதி பெற நான்கு வகைப்பாடுகளில்
கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி மோகன்
தெரிவித்துள்ளார்.
ஒற்றைச்சாளர இணையவழி அனுமதி..!
கிராம
ஊராட்சிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையிலான இணையவழியில்
அனுமதி வழங்குதல் திட்டம் 2.10.2023 முதல் முழு செயல் பாட்டுக்குக் கொண்டு வரப்
பட்டுள்ளது.
அதன்படி
ஒற்றைச்சாளர முறையில் விண்ணப்பதாரர்களுடைய சுய சான்றின் அடிப்படையில் உடனடி அனுமதி
வழங்கும் நடைமுறையைச் செயல்படுத்திட 2,500
சதுர அடிக்கு குறைவான மனைப்பரப்பில் 3,500 சதுர அடிக்குள் தரைத்தளம் அல்லது தரை
மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு
வரை உள்ள கட்டடங்களுக்கு உரிய கட்டணங்கள் செலுத்தி சுய
சான்று பெற முடியும்.
கட்டணங்கள்
நிர்ணயம்
இதில்
பின்வரும் முக்கிய 5 ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற செயல்முறை
எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
1 பதிவு
செய்யப்பட்ட கட்டட வல்லுனரால் கையொப்ப மிடப்பட்ட திட்ட வரைப்படம்,
2 விண்ணப்பதாரர்
பெயரில் பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம்
3. அங்கீகரிக்கப்பட்ட
மனைப் பிரிவு ஆவணம்
4. விண்ணப்பதாரர்
பெயரில் பட்டா
5. தளப் புகைப்
படம்
சுயசான்றின்
அடிப்படையில் கட்டட ஒப்புதல் பெற விண்ணப்பிக்க தகுதியானவை ஆகும்.
தகுதியில்லாதவை
மற்றும் நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு 274 கிராம ஊராட்சிகளை 4 வகைப்பாடுகளின்
கீழ் ஒரே தலைப்பாக கட்டணங்கள் 4 வகைப்பாடுகளுக்கேற்றவாறு காஞ்சீபுரம் மாவட்டத்தில்
உள்ள அந்தந்த கிராம ஊராட்சிகளில் கட்டணத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தக்
கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பதாரர் அனுமதி பெறலாம் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி
மோகன் தெரிவித்துள்ளார்.