மொத்தப் பக்கக்காட்சிகள்

இப்போபே நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் தொழில்முனைவர் மிதுன் சஞ்செட்டி! Business



இப்போபே பணப்பரிவர்த்தனை நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் பிரபல தொழில்முனைவர் மிதுன் சஞ்செட்டி!

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பணப்பரிவர்த்தனைத் தொழில்நுட்ப நிறுவனம் இப்போபே. இந்நிறுவனம் கேரட்லேன் நிறுவனர் மிதுன் சஞ்செட்டி மற்றும் ஜெய்ப்பூர் ஜெம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த் சஞ்செட்டி ஆகிய முன்னணி தொழில் முனைவோர்களிடமிருந்து முதலீட்டைப் பெற்றுள்ளது.

*இப்போபேவின் வளர்ச்சி பாதை*

தென்னிந்தியாவின் கடைக்கோடி பகுதியான ராமேஸ்வரத்தில் ஓர் எளிய மீனவக்குடும்பத்தில் பிறந்தவர் மோகன் கருப்பையா. அவர் தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய இப்போபே நிறுவனம் சிறு, குறு வணிகர்களுக்கான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை எளிதாக்குகிறது. 

மாநகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பான்மை வணிகர்களின் ஏகோபித்த தேர்வாக இப்போபே திகழ்கிறது. தமிழ்நாட்டில் 5 லட்சம் சிறு வணிகர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழிலும் வாடிக்கையாளர் சேவை மையத்தைக் கொண்டிருக்கும் ஒரே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனம் இப்போபேதான். 

தமிழ்நாட்டில் வலுவான இருப்பைக் கொண்டுள்ள இப்போபே,  அடுத்த கட்டமாக தென்னிந்தியாவின் பிற மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா என என தங்களது சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) நடப்புக் கணக்குகளைத் திறக்க உதவுவதிலும், அவற்றுக்குண்டான நிதிப் பரிமாற்றங்களை  செயல்படுத்தி தருவதிலும் கூட இப்போபே பங்காற்றி வருகிறது. மக்கள் பாதுகாப்பாகப் பணத்தை அனுப்புவதற்கான அனுமதியை  இந்திய தேசிய பணப்பரிமாற்ற நிறுவனத்திடமிருந்து (NPCI) பெற்றுள்ளது இப்போபே.

*மோகன் கருப்பையா*

"மிதுன் மற்றும் சித்தார்த்தை வரவேற்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். வெற்றிகரமான தொழில்முனைவோர்களாக அவர்கள் கொண்டிருக்கும் அனுபவம், எங்களது வியாபார உத்திகள் சரியான திசையில் பயணிப்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், இப்போபே நிறுவனத்துக்கும் கணிசமான மதிப்பையும் சேர்க்கும். எங்களது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்குவதில் அவர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்" என்று இப்போபேவின் தலைமை நிர்வாக அதிகாரி மோகன் கருப்பையா கூறினார்.

*மிதுன் சஞ்செட்டி* 

மிதுன் சஞ்செட்டி கூறுகையில், "இப்போபேயுடன் கைகோர்ப்பதில் நாங்கள் உற்சாகம் கொள்கிறோம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கி சேவைகளைப் பெறுவதற்கும், முதலீடுகளைப் பெறுவதற்கும், பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும் சில வழிமுறைகளைக் கடைப்பிடித்து வந்தன. அவற்றை மேம்படுத்துவதற்கு மோகன் கருப்பையா கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் என்னை மிகவும் ஈர்த்தது. இந்தியாவில் நிலையான நிதித் தொழில்நுட்பத் (fintech) தளத்தை உருவாக்கும் இப்போபேயின் திறன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்.

*இப்போபேவின் தொலைநோக்குத் திட்டங்கள்* 

நிதித் தொழில்நுட்பத் துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் இப்போபே நிறுவனத்தில், இந்தியாவின் மிகச்சிறந்த தொழில்முனைவராகக் கருதப்படும் மிதுன் சஞ்செட்டி ஆர்வத்துடன் முதலீடு செய்திருப்பது சிறப்பான தருணம். 

வலிமையான நிர்வாகம், சிறப்பான முதலீட்டு உத்திகள், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், நிதி உள்ளீடுகள் மீதான தெளிவான கவனம், வாடிக்கையாளர் சேவையில் தனிக்கவனம் ஆகியவற்றால் இப்போபே நிறுவனம் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
வருங்காலத்தில் இப்போபே பயனாளர்களுக்கான வசதிகளை மேலும் மேம்படுத்தி, புதிய சேவைகளை அறிமுகப்படுத்தி, வலுவான தொழில் உத்திகளை அமைத்து இந்தியாவின் நிதித்துறையில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பது உறுதி.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...