மொத்தப் பக்கக்காட்சிகள்

வீடு கட்ட ஆன்லைன் அனுமதி.. நிபந்தனைகள் ..~! Plan approval

வீடு கட்ட ஆன்லைன் அனுமதி.. நிபந்தனைகள் ..~! Plan approval

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 2,500 சதுர அடி வரையிலான வீட்டு மனையில் 3,500 சதுர அடியில் கட்டப்பட உள்ள வீடுகளுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டிட அனுமதி பெறலாம்

@ ஆன்லைன் முறையில் வழங்கப்படும் இந்த கட்டிட அனுமதி, ஐந்து ஆண்டுகளுக்கு செல்லும்.



@ இந்த அனுமதி ஆணை, சம்பந்தப்பட்ட நிலத்தின் மீதான உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம் பயன்படுத்தக்கூடாது

@
சம்பந்தப்பட்ட நிலம், ஆக்கிரமிப்பு வீடு கட்டுவதற்கு ஏற்றதல்ல. தவறான ஆவணங்கள் அடிப்படையில் உரிமை கொண்டாடப்படுவது தெரிந்தால், கட்டிட அனுமதி ரத்து செய்யப்படும்

@ பொது கட்டட விதிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த அனுமதியை பயன்படுத்த வேண்டும்

@ சம்பந்தப்பட்ட நிலம், விவசாய நிலமாக, நிறுவனத்துக்கு சொந்தமானதாக, திறந்தவெளிப் பகுதியாக, கேளிக்கை பயன்பாட்டுப் பகுதியாக அல்லது சாலைக்கு ஒதுக்கப்பட்டதாக இருந்தால், அனுமதி உத்தரவு தானாக ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்

@ ஒருங்கிணைந்த கட்டிட விதிமுறைகளின்படிதான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.  கட்டிடம் கட்டும்போது விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால், உரிய சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

@ விண்ணப்பதாரரின் சுய சான்றிட்ட ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு, அதில் ஏதாவது தவறு கண்டறியப்பட்டால், விண்ணப்பதாரருக்கு உரிய தண்டனை விதிக்கப்படும்.

@ விண்ணப்பத்தில் காட்டப்பட்ட கட்டிட வடிவமைப்பு, அடித்தளம், பயன்படுத்தப்படும் மரம், கான்கிரீட், கம்பி, கழிவுநீர் தொட்டி, மழைநீர் சேகரிப்பு அமைப்பு, தண்ணீர் தொட்டி ஆகியவை உரிய விதிமுறைகளின் படி அமைக்கப்பட வேண்டும்.

தெருக்களில் கட்டுமானப்பொருட்கள், கழிவுகளை கொட்டக்கூடாது. கட்டுமானப் பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்து வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 இரண்டு வீடுகள் கட்டலாம்!

வீட்டு மனையின் பத்திரம், பட்டா, வில்லங்க சான்று, உரிமையாளரின் ஆதார், கட்டிட வரைபடம் ஆகியவற்றின், 'ஸ்கேன்' செய்யப்பட்ட பிரதிகளை, ஆன்லைன் முறையில் உள்ளீடு செய்தால் போதும்.

அடுத்த 30 நிமிடங்களில் கட்டண விபரம் தெரிய வரும். அந்த கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தினால், ஒரு மணி நேரத்தில் கட்டிட அனுமதி ஆவணம் வந்து விடும்.

இந்த அனுமதி அடிப்படையில் தரை தளம், முதல் தளம் மட்டும் கட்டலாம். இரண்டு வீடுகள் மட்டுமே கட்ட முடியும்.

ஊரக பகுதிகளில் பெரும்பாலானோர் இது போன்ற வீடுகள் கட்டுவதால், இந்தத் திட்டம் மக்களுக்கு  மிகவும் உதவியாக இருக்கும். என்றார் இந்திய கட்டுனர், வல்லுநர் சங்கத்தின் (CAI) தென்னக மைய நிர்வாகி எஸ்.பிரபு. 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! AI

காப்பீடு - செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்பாடு..! செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் காகிதமில்லாத (paperless) மற்றும் 100% ரொக்கமில்லா (Cashles...