மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை Mantra life

*மனநிறைவு என்பது  நம்மிடம் இயல்பாகவே உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை.*

 *நட்பு என்பது வெறும் வார்த்தை அல்ல, உணர்வோடும் உறவோடும் நம் வாழ்வில் நுழையும் ஒரு பொக்கிஷம்.*

*நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சினைகளோடு போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் பிறரை பார்க்கும்போது நன்றாக தானே இருக்கிறார்கள் என்று எண்ணுகிறோம், அப்படி அல்ல எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.*

*பொய்யைச் சொல்லாதீர், நீங்கள் தான் அதனை காப்பாற்ற வேண்டும். உண்மையைச் சொல்லுங்கள். அது உங்களை காப்பாற்றும்.*

*துர்மதி படைத்தவரின் கல்வி விவாதங்களுக்கும், செல்வம் அகந்தைக்கும், சக்தி பிறரைத் துன்புறுத்தவுமே பயன்படுகிறது. நன்மதி படைத்தவருக்கோ அவர் கல்வி நல்வழிப்படுத்தவும், செல்வம் கொடைக்கும், சக்தி நலிந்தவரைக் காக்கவும் பயன்படுகிறது.*

*நெருங்கியவர்களுடன் கலந்துரையாடுவது மன அழுத்தத்தை குறைக்க ஒரு சிறந்த வழி முறையாகும். உறவினர்களையும் நண்பர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்குங்கள்.*

*கடவுள் தந்த அருமையான பரிசு வாழ்க்கை. அதனை ஒவ்வொரு நிமிடமும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து காட்டுவோம்.*

*நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் கடந்த காலத்தின் பாதிப்புகளை மறந்து விடுங்கள். எதிர்காலத்தைப்பற்றிய பயத்தினை விட்டுவிடுங்கள்.*

*எப்பொழுதும் எல்லோருடனும் நல்ல செயல்களைச் செய்வதன் மூலம் மனம் தூய்மை அடையும்.  கெட்ட எண்ணங்கள் இல்லாத தூய்மையான மனமே கோயில்.*

*#வாழ்த்துகள்.*

*#வாழ்க_வளத்துடன்.*
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...