மொத்தப் பக்கக்காட்சிகள்

பணி ஓய்வுக்குத் தயாராக இருக்கும் 65% இந்தியர்கள்..நீங்கள்தயாரா? Retirement

பணி ஓய்வுக்குத் தயாராக இருக்கும் 65% இந்தியர்கள்..நீங்கள் தயாரா? Retirement

 

கே.கிருபாகரன், நிறுவனர், www.moneykriya.com


சமீபத்தில்  பிஜிஐஎம் இந்தியா  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பணி ஓய்வு  (Retirement)  தொடர்பான சர்வே முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.  அந்த  ஆய்வு முடிவுகளில் 67 சதவிகிதம் பேர் தாங்கள் ஓய்வுகாலத்துக்குத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  2020 ஆம் ஆண்டில்  இதே  ஆய்வில் 49 சதவிகிதம் பேர் ஓய்வுக் காலத்துக்குத் தயாராக இருப்பதாக கூறியிருந்தனர்.

 

பிஜிஐஎம் இந்தியா எம்.எஃப் சி.. அஜித் மேனன் கூறும் போது, ''இந்தியர்களின் பண மேலாண்மையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்கூடாகப் பார்க்கப்படுகிறதுகொரோனா - 19 காலகட்டம் மக்களிடையே 

குடும்பத்தினருக்கான பொறுப்புகளையும் கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு நிகராக ஒவ்வொருவரும் அவரவர் 

சுய ஆரோக்கியம்சுய மதிப்புசுய அடையாளம் மற்றும்நிதிச் சுதந்திரம் ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை  உணர்த்திருக்கிறதுஅதன் வெளிப்பாடுதான் இந்த மாற்றம்' என்றார்

 

குடும்ப செலவு..

 

மேலும் இந்த சர்வேயில் இந்தியர்கள் தங்களின் வருமானத்தில் 59 சதவிகிதத்தை குடும்ப செலவுகளுக்காகச் செலவிடுவதாகவும் 18 சதவிகிதத்தை கடன்களைத் திருப்பிச் செலுத்த செலவிடுவதாகவும் கூறியுள்ளனர்.

சதவிகித பணம் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்காகச் செலவிடுவதாகக் கூறியுள்ளனர்

 

48 சதவிகிதம் பேர் கொரோனா 19  பாதிப்புகள் நிதிநிலை சார்ந்து மேலும் விழுப்புணர்வுடன் இருக்கவும் நிதி ஒழுக்கத்தின் அவசியத்தையும் உணர்த்தியதாகக் கூறியுள்ளனர்

 

குறைவான வருமான ஈட்டுபவர்களும் தங்களின் வருமானம் ஈட்டும் திறனை மேம்படுத்திக்கொள்ளும் அவிசியத்தை உணர்ந்துள்ளதாகக் கூறியுள்ளனர்மேலும் ஓய்வுகாலத்துக்கான நிதிநிலையில் பாதிப்பை உண்டாக்கும் முக்கிய காரணிகளாகப் பணவீக்கமும்பொருளாதார மந்தநிலையும் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள்

 

ஒய்வுகாலத்துக்கான தொகுப்பு நிதி குறித்த கேள்விக்கு 2020 சர்வேயில் ஆண்டு வருமானத்தில் 8-9 மடங்கு பணம் தேவை எனக் கூறியிருந்தார்கள்ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் பணவீக்கம் போன்ற பேரியல் பொருளாதார காரணிகளால் 2023 சர்வேயில் ஆண்டு வருமானத்தில் 10-12 மடங்கு ஓய்வுகால தொகுப்பு நிதி தேவை எனக் கூறியிருக்கிறார்கள்.

 

 

25 வயதில் வேலைக்கு சேரும் ஒருவர் மாதம் ரூ.5,000 வீதம் அவரின் 60 வயது வரை 35 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால் அவருக்கு ரூ.3.25 கோடி சேர்ந்திருக்கும்.  இங்கே முதலீட்டுத் தொகை வெறும் ரூ,21 லட்சம்தான்.

 

ரூ.3.25 கோடியை ஆண்டுக்கு 8 சதவிகிதம் வருமானம் தரும் கடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ. 2.15 லட்சம் கிடைக்கும். இதனை கொண்டு முழுக்க சுகமாக பணி ஓய்வுக் காலத்தை கழிக்க முடியும்.

 

ஆலோசனை மற்றும் முதலீட்டுக்கு தொடர்பு கொள்க


 

திரு. கே.கிருபாகரன்,

ஆம்ஃபி பதிவு பெற்ற மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் (AMFI Registered Mutual Fund Distributor)

வடபழனி, சென்னை

அழைக்க 73050 68154

இமெயில் moneykriya@gmail.com

இணைய தளம்: www.moneykriya.com

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உலக ஆரோக்கிய தினம் ஏப்ரல் 7 World Health Day

உலக ஆரோக்கிய தினம்  ஏப்ரல் 7