மொத்தப் பக்கக்காட்சிகள்

மாரடைப்புக்கு 3 மணி நேரம் முன் தோன்றும் அறிகுறிகள்.* - பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் .

 *மாரடைப்புக்கு   மூன்றுமணி நேரம்   முன்  தோன்றும்   அறிகுறிகள்.*  - பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் . 




                       **பிரபல இதயநோய் மருத்துவர்  பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவலின்படி:-     
                    
 அவருக்கு   மாரடைப்பு  (HEART    ATTACK )   இருக்கக்கூடும்   என்ற  சந்தேகம்  ஏற்பட்டால்,  அவர்  நடக்க  அனுமதிக்கக்கூடாது;  மாடி  படிக்கட்டில்  ஏறவோ அல்லது  இறங்கவோ  அனுமதிக்கக்கூடாது;  மருத்துவமனைக்கு   ஆட்டோவில்  கொண்டுசெல்லக்கூடாது.   இந்த  தவறில்   ஏதேனும்  ஒன்றை  செய்தாலும்  அந்த  நோயாளி  உயிர்  பிழைப்பது  கடினம்.
                  
மாரடைப்பை (HEART   ATTACK )  மூன்றுமணி நேரம்  முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது  மூளையாகும்.   மூளை உடனே    நமது  உடலில்,  செயலில்  சிறு   தடுமாற்றம்   ஏற்படுத்தி  நம்மை  முன்னெச்சரிக்கை  செய்யும்.   இந்த  முன்னெச்சரிக்கையை  சக்கரை  நோயாளிகள்  உணர்வது  கடினம். 
                   
  ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.
                    
ஆனால், அவர் நம்மிடம் தனக்கு *ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்* என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடக்கூடாது.*
                     
  மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையை   பார்த்தவுடன்    அவர்  உடல்நிலையை  தெளிவாக  அறிந்துகொள்ள நாம்  அவரை 
*S T R* அதாவது,
*SMILE (சிரிக்க சொல்வது 😄),*
*TALK (பேச சொல்வது😲),*
*RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)*
இது போன்ற செயல்களை செய்யச் சொல்லவேண்டும்.  
 *இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்!* இதில் 
  ஏதேனும்  ஒன்றை    அவர் சரியாகச் செய்யவில்லை  என்றாலும்  பிரச்சனை பெரிதுதான்!  உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.
                     
  *இந்த அறிகுறி  தெரிந்த , 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால்  பெரும்பாலும்  உயிர் இழப்பை தடுத்து விடலாம்*, என்று மருத்துவர்கள்  கூறுகிறார்கள்.
                     
 இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த *ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும்* என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.
                     
   *அவருடை நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,*

அவர் தனது நாக்கை நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் *ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால்*, அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.
                     
 இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், *ஜாதி, மத* பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.
                     
மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் *10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம்* என்றும் சொல்கிறார்!! 
                     
  
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் 2024 அக்டோபர் 1 முதல் 

ஐ ஆர் டி ஏ உத்தரவுப்படி அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் மாறுதல் அக்டோபர் 1 முதல்  செய்யப்படவுள்ளது  அதன்படி எல் ஐ சி யில் 10 ஆண்டுகளுக்கு...