மொத்தப் பக்கக்காட்சிகள்

இது கதை அல்ல உண்மை ...நல்ல மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர் மட்டுமல்ல பெற்றோர்களின் கடமையும் கூட.. Habit

முருகேசு : அப்பா உன்ன கணக்கு வாத்தியார் பார்க்கணுமாம்.நீ ஸ்கூலுக்கு வரணும்.

அப்பா : எதுக்குடா என்னை வரச் சொல்றான் ?

முருகேசு : கிளாஸ்ல ஒரு கேள்வி கேட்டாங்க.9 அ 7 ஆல பெருக்கினா என்ன வரும்னு? கேட்டாங்க அதுக்கு நான் 63 ன்னு சொன்னேன்.

அப்பா : சரி அப்புறம்.

முருகேசு : 7அ 9 ஆல பெருக்கினா என்ன வரும்னு கேட்டாங்க.

அப்பா : அதே எழவு தானேடா. வரும். சரி நீ என்ன சொன்ன?

முருகேசு : அதே எழவு தானேடா வரும்னு சொன்னேன்.உன்ன வந்து பார்க்கச் சொல்லிட்டாங்க.

அப்பா : சரி ,சரி நாளைக்கு வரேன்.

அடுத்த நாள்
முருகேசு : அப்பா ஸ்கூலுக்கு வந்து டீச்சரைப் பார்த்தியா?

அப்பா :இல்லடா நாளைக்கு வரேன்.

முருகேசு : சரி நாளைக்கு கணக்கு வாத்தியாரை பார்த்துட்டு அப்படியே பி.டி. வாத்தியாரையும் பார்த்துடு.

அப்பா : எதுக்குடா ?

முருகேசு : ட்ரில்(drill) இருந்தது.முதல்ல வலது கையத் தூக்கச் சொன்னாரு செஞ்சேன்.

அப்புறம் இடது கையத் தூக்கச் சொன்னார். செஞ்சேன்..

ரெண்டு கையயும் தூக்கிட்டே வலது கால தூக்கச் சொன்னாரு தூக்கினேன்..

அப்றம் இடது கால தூக்குன்னு சொன்னாரு .

அப்பா : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படி நிக்க முடியும்? லூசா அவன்?.. சரி நீ என்ன பண்ணுன?

முருகேசு : ரெண்டு காலையும் தூக்கிட்டு எப்படிடா நிக்க முடியும் லூசாடா நீ-ன்னு தான் சொன்னேன்.உங்கப்பாவை கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாரு.

அப்பா : சரி சரி நாளைக்கு வந்து பார்க்கிறேன்

அதற்கு அடுத்த நாள்
முருகேசு : இன்னிக்கு ஸ்கூலுக்கு போனியாப்பா ?

அப்பா : இல்லடா நாளைக்கு வரேன்.

முருகேசு : நீ போக வேணாம்பா.

அப்பா : ஏண்டா?

முருகேசு :ஸ்கூலேர்ந்து என்னை டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க

அப்பா : ஏண்டா? என்னாச்சுடா?

முருகேசு :பிரின்சிபல் ரூமுக்கு வரச் சொன்னார்.அங்க கணக்கு டீச்சர், பி.டி. டீச்சர், சயின்ஸ் டீச்சர் மூணு பேரும் இருந்தாங்க.

அப்பா : சயின்ஸ் டீச்சரா.! அந்த நாய் ஏன்டா அங்க இருந்தான்?

முருகேசு :அதைத் தான்பா நானும் கேட்டேன்.டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க

கூற வந்த கருத்து:
"பெற்றோரிடம் கற்றபடியே பிள்ளைகளும் வளர்கிறார்கள்"

"பெற்றோரிடம் கேட்டதையே பிள்ளைகளும் பேசுகிறார்கள்"

"நல்ல மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர் மட்டுமல்ல பெற்றோர்களின் கடமையும் கூட"
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...