மொத்தப் பக்கக்காட்சிகள்

உடல்நலக் காப்பீடு ஸ்டார் ஹெல்த், UPI QR குறியீடு அடிப்படையில் பிரீமியம் பணம் செலுத்துதல்

உடல்நலக் காப்பீடு ஸ்டார் ஹெல்த், UPI QR குறியீடு அடிப்படையில் பிரீமியம்  பணம் செலுத்துதல்

ஸ்டார் ஹெல்த் விரைதிறமுடைய UPI QR குறியீடு அடிப்படையிலான கட்டண விருப்பங்களை அறிமுகப்படுத்தி 'மேக் இன் இந்தியா' முயற்சியை ஆதரிக்கிறது.

 

Ø  NPCI மூலம் இயக்கப்படுகிற UPI QR குறியீடு அடிப்படையிலான கட்டண முறையானது, வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துகிறது, பாதுகாப்பை அதிகரிக்கிறது மேலும் குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் காப்பீடு வாங்குதல்களை எளிதாக்குகிறது.

 

Ø  செலுத்துதல் பயணத்தை குறைக்கிறது, பரிவர்த்தனை நேரத்தை குறைக்கிறது, வாடிக்கையாளர் திருப்தியை அதிகரிக்கிறது.

 

Ø  இந்தியா முழுவதும் UPI செலுத்துதல்களை காப்புறுதித் துறை பின்பற்றவேண்டும் என்ற IRDAI இன் தொலைநோக்கை ஆதரிக்கிறது.

சென்னை, செப்டம்பர் 14, 2023: இந்தியாவின் முன்னணி உடல்நல காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ், பாலிசி வாங்குதல்கள் மற்றும் புதுப்பித்தல்களுக்கான விரைதிறமுடைய UPI QR குறியீடு அடிப்படையிலான பிரீமியம் செலுத்துதல் விருப்பத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் காப்பீடு பணம் செலுத்துதல் சூழலை மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை இன்று அறிவித்துள்ளது


தனிப்பயனாக்கப்பட்ட தீர்வு வாடிக்கையாளர் வாங்கும் செயல்முறையை சில முடுக்கங்களுக்கு எளிதாக்குகிறது. ஸ்டார் ஹெல்த் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்த தனிப்பயனாக்கப்பட்ட UPI செலுத்துதல் நோக்கத்திற்கான இணைப்புகளையும் அறிமுகப்படுத்தியது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த அதிநவீன முயற்சியானது, நவீன தொழில்நுட்பம் சார்ந்த செலுத்துதல் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு முன்னுதாரண மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சியானது, ஸ்டார் ஹெல்த் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளில் கவனம் செலுத்துவதை பலப்படுத்துகிறது, தடையற்ற மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் அதே வேளையில் வாடிக்கையாளர் அனுபவத்தையும் சௌகரியத்தையும் மேம்படுத்துகிறது.


இந்த விரைதிறமுடைய UPI QR குறியீடு, பணம் செலுத்தும் நினைவூட்டல் மின்னஞ்சல்களில் ஒருங்கிணைக்கப்பட்டு, வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை நொடிகளுக்குள் முடிக்க அதிகாரம் அளிக்கிறது. பிரீமியம் தொகை உட்பட அனைத்து அத்தியாவசிய செலுத்துதல் விவரங்களும், QR குறியீட்டில் முன்கூட்டியே உட்படுத்தப்பட்டு, பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்குகிறது மற்றும் கைமுறையாக பிரீமியம் தொகை செலுத்தும் தேவையை நீக்குகிறது. இந்த தனிப்பயனாக்கப்பட்ட குறியீட்டின் ஒரு எளிய ஸ்கேன் மூலம், வாடிக்கையாளர்கள் சில நொடிகளில் பணம் செலுத்தலாம், இது தொந்தரவு இல்லாத, பிழை இல்லாத மற்றும் திறமையான அனுபவத்தை உறுதி செய்கிறது.

ஸ்டார் ஹெல்த் இன் தனித்துவமான தனிப்பயனாக்கப்பட்ட UPI செலுத்துதல் நோக்கத்திற்கான இணைப்பு, உலகளாவிய அணுகலை மேம்படுத்துகிறது, வாடிக்கையாளர்கள் எந்த மொபைல் போனிலும் எளிதாக பரிவர்த்தனைகளை முடிக்க உதவுகிறது. இணைப்பைக் கிளிக் செய்தவுடன், UPI செயலி உடனடியாகத் தொடங்கும், மேலும் பல UPI செயலிகள் கிடைக்கும் சந்தர்ப்பங்களில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான செயலியைத் தேர்ந்தெடுக்கும்படி கேட்கப்படுவார்கள். பிரீமியம் தொகை உள்ளிட்ட செலுத்துதல் விவரங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட செயலியில் தானாகவே ஏற்றப்படும், மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் UPI பின் பயன்படுத்தி செலுத்துதலை உறுதிப்படுத்தலாம், இது ஒரு சுமூகமான கொள்முதல் அனுபவத்தில் முடிவடைகிறது.

ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் இன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. ஆனந்த் ராய் கூறுகையில், "எங்கள் வாடிக்கையாளர்களின் எப்போதும் வளர்ந்து வரும் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்திசெய்து, எங்கள் விரைதிறமுடைய QR குறியீடு மற்றும் இன்டென்ட் லிங்க் அடிப்படையிலான UPI செலுத்துதல் விருப்பங்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முன்முயற்சியானது, செலுத்துதல் தொழில்நுட்பத்தில் சமீபத்திய

 

ஒன்றை செயல்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, மேலும் எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தீர்வுகளை வழங்குவதில் எங்களை ஒரு முன்னணி காப்பீட்டாளராக ஆக்குகிறது. ஸ்டார் ஹெல்த் இல், எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம், மேலும் தனிப்பயனாக்கப்பட்ட UPI செலுத்துதல் தீர்வுகளை செயல்படுத்துவது, தடையற்ற, திறமையான மற்றும் பாதுகாப்பான செலுத்துதல் அனுபவங்களை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. இந்த வளர்ச்சியின் மூலம், காப்பீட்டு பரிவர்த்தனைகளின் ஒரு புதிய சகாப்தத்தைத் தழுவுவதற்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் அதிகாரம் அளிக்கிறோம்."என்று கூறினார்.

"பணம் செலுத்தும் செயல்முறையை ஒழுங்குபடுத்துவதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஸ்கேன் மற்றும் ஒரு கிளிக் மூலம் காப்பீட்டைப் பெறுவதற்கு நாங்கள் அதிகாரம் அளிக்கிறோம். ஒரு விரைதிறமுடைய QR குறியீடு அடிப்படையிலான UPI செயல்முறையை செயல்படுத்துவது, ஸ்டார் ஹெல்த் இன் சிறப்பான மற்றும் புதுமைக்கான தொடர்ச்சியான முயற்சிக்கு ஒரு சான்றாக இருக்கிறது. UPI செலுத்துதல்களை ஏற்றுக்கொள்வது அரசாங்கத்தின் 'மேக் இன் இந்தியா' தொலைநோக்கு மற்றும் IRDAI இன் இன்சூரன்ஸ் துறைக்கான மாற்றியமைக்கும் இலக்குகளுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. " என்று ஸ்டார் ஹெல்த் & அலைட் இன்சூரன்ஸ் கோ. லிமிடெட் இன் சீஃப் இன்னோவேடிவ் ஆஃபீஸர் திரு. சிட்டி பாபு கூறினார்.

NPCI இன் சீஃப் ஆஃப் ப்ராடக்ட்ஸ் திரு. குணால் கலாவடியா, "யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) அதன் வசதி மற்றும் பரவலான ஏற்புடைமை காரணமாக, நாட்டில் மிகவும் விருப்பமான செலுத்துதல் முறைகளில் ஒன்றாக குறிப்பிடத்தக்க பிரபலத்தைப் பெற்றுள்ளது. ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களின் காப்பீடு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கான UPI அடிப்படையிலான செலுத்துதல் விருப்பங்களுக்கு இப்போது விரைவான அணுகலைக் கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். UPI மூலம் வழங்கப்படும் தடையற்ற, திறமையான மற்றும் பாதுகாப்பான செலுத்துதல் விருப்பங்கள் , இந்தியாவில் ஒரு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட காப்பீட்டுச் சூழலுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி வழி வகுக்கும். நாட்டின் பொருளாதார கொள்கையின் முன்னணியில் நிதிச் சேர்க்கையுடன், UPI இன் ஒருங்கிணைப்பு, பாலிசி புதுப்பித்தல் மற்றும் வாங்குதல் செயல்முறையை மேலும் அணுகக்கூடியதாக மாற்றும், இதன் மூலம், இந்தியாவில் காப்பீட்டுத் துறையின் ஊடுருவலை மேலும் அதிகரிக்கும். "என்று கூறினார்.

ஸ்டார் ஹெல்த் இன் UPI QR குறியீடு மற்றும் UPI பேமெண்ட் இன்டென்ட் லிங்க் அடிப்படையிலான செலுத்துதல் முறை ஆகியவை செலுத்துதல் பயணத்தை கணிசமாக சுருக்கி பரிவர்த்தனை நேரங்களை சில வினாடிகளாகக் குறைத்து, ஒரு தொந்தரவு இல்லாத அனுபவத்தை வழங்குகிறது.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...