மொத்தப் பக்கக்காட்சிகள்

முதலாம் உலக முத்தமிழ் மாநாடு 2023 : தலைமுறைகளைக் கட்டமைக்கும் தமிழர் மாண்பு Tamil

முதலாம் உலக முத்தமிழ் மாநாடு 2023 : ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்களுக்காக

 


அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழும நிறுவனங்கள்


 இணைந்து நடத்தும்


உலக முத்தமிழ்க் கூட்டமைப்பின்


ஒருங்கிணைப்பில்

 

 முதலாம் உலக முத்தமிழ் மாநாடு 2023


 நாள்: அக்டோபர்-21,22 - 2023 (சென்னை)

          அக்டோபர்- 28,29 - 2023  ( இலங்கை)


தலைப்பு:

 

தலைமுறைகளைக் கட்டமைக்கும் தமிழர் மாண்பு

அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

உலகின் திசைகளைத் தமிழால் இணைக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டுத் தமிழ் இயக்கமான "உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு"  தமிழ்  தமிழர் மேம்பாடு  தமிழ்ப்படைப்பாளர்களை அங்கீகரித்தல் என்னும் இலக்குடன் செயலாற்றி வருகின்றது. அமெரிக்காவை மையமாக வைத்து உலகெங்கும் சிறகுகளை விரித்திருக்கும்  இம்முத்தமிழ்க்கூட்டமைப்பு,  பன்னாட்டுத் தமிழன்பர்களை இணைத்திடும் இலட்சியத்துடன் இந்தியா  இலங்கை ஆகிய நாடுகளில் உலகத் தமிழ் மாநாடுகளை  எதிர்வரும் அக்டோபர் (2023) திங்களில்  நிகழ்த்திட விழைந்துள்ளது.  

இயல்-இசை-நாடகத்தமிழின் பன்முகப் பரிமாணங்களை வெளிப்படுத்தும்  நிகழ்ச்சிகளுடன், ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்படவுள்ளன. பன்னாட்டுப் பேராளர்களால் வாசிக்கப்படும் கட்டுரைகளின் தொகுப்பாக ஆய்வு மலரும் வெளியிடப்படவுள்ளது. எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள தமிழரின் மாண்பினை மையப்பொருளாகக் கொண்டு இம்மாநாட்டு ஆய்வுத்தலைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்க விரும்பும் பேராளர்களுக்காக இங்கே சில தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தலைப்புகள்:  

o   சங்கத்தமிழரின் மாண்பு நிறை வாழ்வு

o   இலக்கியங்கள் வழி அறியலாகும் பண்டைத்தமிழரின் அறிவு சார் வெளிப்பாடு

o   செவ்வியல் பனுவல்கள் புலப்படுத்தும் அறம்

o   அறவிலக்கியங்கள்  உணர்த்தும் தமிழர் நெறி

o   தமிழ்க்காப்பியங்கள் காட்டும் தலைமை மாண்புகள்

o   பக்தி இலக்கியங்கள் பேசும் பெருவாழ்வு

o   சிற்றிலக்கியங்களில் செந்தமிழர் வாழ்வியல்

o   இலக்கியங்கள் காட்டும் தமிழரின் உளவியல் நோக்கு

o   தமிழ்க்கலைகள் உணர்த்தும் தகைசால் வாழ்வு

o   தமிழ் இலக்கியம் கட்டமைத்த மனிதவள மேம்பாடும் ஆளுமைத்திறன்களும்

o   கிராமப்புற நிகழ்கலைகளும் மாற்றங்களும்

o   தமிழ்நாடகவியலின் வளர்ச்சிப் போக்குகள்

o   தமிழிசை வளர்ச்சி வரலாறும் செல்நெறியும்

o   மகாகவி பாரதியாரின் படைப்புகளில் கல்விச்சிந்தனைகள்

o   பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகள் புலப்படுத்தும் தமிழர் வாழ்வியல்

o   தமிழில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் வளர்ச்சியும் போக்கும்

o   புலம் பெயர்ந்த தமிழர் வாழ்வியலும் தமிழர் சால்பும்

o   நவீன இலக்கியப் படைப்புகளில் நெறிசார் வாழ்வியல்

o   கணினித்தமிழின் அகப்புற வளர்ச்சிப்போக்குகள்

இத்தலைப்புகள் மட்டுமின்றி மாநாட்டு மையப்பொருண்மையான  "தலைமுறைகளைக் கட்டமைக்கும் தமழர் மாண்பு" என்னும் தலைப்புடன் தொடர்புடைய பிற தலைப்புகளிலும்கட்டுரைகள் அமையலாம்.கட்டுரைகளை worldtamilconference2023@gmail.com என்ற      

 மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

கட்டுரையாளர்களின் கனிவான கவனத்திற்கு :

v அனைத்துத்துறைகளைச் சார்ந்த பல்கலைக்கழகம்/கல்லூரி/பள்ளிகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகிய அனைவரிடமிருந்தும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

 

v ஆய்வுக்கட்டுரைகளைச் சொற்கோப்பில்  (word document)  A4 தாளில் 1.15 இடைவெளியுடன் ஏரியல் யூனிகோட்   (Arial Unicode) எழுத்துருவில் 6 பக்கங்களுக்கு மிகாமல் கணினிவழி

த் தட்டச்சு செய்து

   

worldtamilconference2023@gmail.com  என்ற 

 

மின்ன்ஞ்சல் முகவரிக்கு 15.08.2023 ஆம்  தேதிக்குள் அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

v ஆய்வுக்கட்டுரைகள் எழுதுபவர்களின் சொந்த முயற்சியில் உருவானதாகவும், புதிய மற்றும் அசல் கண்டெடுப்புகளாகவும் இருத்தல் வேண்டும். ஆய்வுக்கட்டுரைகள் ஆய்வுமுறைப்படி அமைவதுடன், அடிக்குறிப்புகள் மற்றும் துணைநூற்பட்டியல் ஆகியவற்றுடன் இடம் பெறுதல் முக்கியமாகும்.

 

v ஆய்வு முறைமையுடன் எழுதப்பட்ட கட்டுரைகள் மட்டுமே நூலாக்கம் பெறும், தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்களிடமிருந்து நூலாக்கத்திற்காக ரு.500 (ரூபாய் ஐந்நூறு மட்டும்) கட்டணம் பெறப்படும்.

 

v வெளிநாடு வாழ் ஆய்வாளர்கள் இணைய வாயிலாகவும் மாநாட்டில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வசதிகள் உருவாக்கித் தரப்படும்.

 

v தேர்வு செய்யப்பட்டும் கட்டுரைகள் ISBN எண்ணுடன் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு பதிப்பாக வெளியிடப்படும்.

 

v இந்தியா,-இலங்கை  இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வாழும் கட்டுரையாளர்கள் அந்தந்த நாடுகளில் நிக்ழும் மாநாட்டு அரங்குகளில்  நேரடியாகப் பங்கேற்றுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க  வேண்டும்.

 

v கட்டுரையாளர்களுக்கு மாநாட்டில் பங்கேற்றமைக்கான/ ஆய்வுத்தாள் சமர்ப்பித்தமைக்கான சான்றிதழ் மற்றும் நூல் வழங்கப்படும்.

 


மாநாட்டுப்  புரவலர்:

தமிழ்மாமணி முனைவர் தாழை இராஉதயநேசன்

நிறுவனர்/ தலைவர் - அமெரிக்கா முத்தமிழ்க் கூட்டமைப்பு

நிறுவனர் –  அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள் 

 

மாநாட்டு முதன்மை ஆலோசகர்கள்

 

மதிப்புறு முனைவர் அமுதபாரதி

மதிப்புறு முனைவர் கவிச்சுடர் .நா.கல்யாணசுந்தரம்

மதிப்புறு முணைவர் கவிமாமணி ஆரூர் தமிழ்நாடன்

முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்

மதிப்புறு முனைவர் கலைமாமணி கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி

முனைவர் செ.சு.நாசந்திரசேகரன்

இயக்குநர் திரு. யார் கண்ணன்

மதிப்புறு முனைவர் டி.கே.எஸ். கலைவாணன்

முனைவர் மோ.பாட்டழகன்

முனைவர் ரவி கோவிந்தராஜ்

பாடகர் திரு. வேல்முருகன்

மதிப்புறு முனைவர் கவிமாமணி வெற்றிப்பேரொளி

 

பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள்

கவிஞர் திருமகள் சிறிபத்மநாதன்இங்கிலாந்து .

திரு. எஸ். பிரதீஸ்குமார்இங்கிலாந்து

திரு. எம். இரமேஷ்வரன் – கம்போடியா

 

பன்னாட்டுத் துணை ஒருங்கிணைப்பாளர்கள்

திருமதி நகுலா சிவநாதன்.  ஜெர்மனி

திருரியாஸ் முகமதுஇலங்கை

திருமதி ந. தாமரைச்செல்வி – இலங்கை

 

மாநாட்டு அமைப்புக்குழு உறுப்பினர்கள்

மதிப்புறு முனைவர் உமாபாரதி

முனைவர் ஓசூர் மணிமேகலை

திருமதி மோகனா கோபாலகிருஷ்ணன்

திருமதி ரமணி மாடசாமி

முனைவர் இரா. செந்தில்குமார்

முனைவர் கா. விஜயகுமாரி

திருமதி சுகுணா சுதாகரன்

 

தொடர்புக்கு :

முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்-9629662507

முனைவர் ஜோ.சம்பத்குமார்- 9976025731

முனைவர் செ.சு.நாசந்திரசேகரன் -9283275782

செல்வி எம்.மேரிமுத்து -9159698466 (கட்டணம் & நிதி விசாரணை மட்டும்)

 

அழைப்பின் மகிழ்வில்:

தமிழ்மாமணி முனைவர் தாழை இராஉதயநேசன் ( நிறுவனர்தலைவர்.

முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன்

பொதுச்செயலாளர்

 

வங்கி விவரம்

Name         :  Udhayanesan Raji

Bank Name: ICICI Bank

A/C No        : 156501075002

IFSC code   : ICIC0001565

Branch        :  Ambur

Cell: 9159698466

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...