மொத்தப் பக்கக்காட்சிகள்

Family finance குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான 12 காரணங்கள்

 குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான 12 காரணங்கள்:

1. குடும்பத்தில் உள்ள அனைவரின் கைகளில் தவழும் தொடுதிரைக் கைபேசிகள்...

2. சமூக மதிப்பிற்காக மேற்கொள்ளப்படும் விடுமுறை சுற்றுலாக்கள்...

3. வாகனங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் சமூக மதிப்பின் அடையாளமாக மாறிப்போனது...

4. வீட்டில் சமைக்கப்பட்ட உணவைத் தவிர்த்து, வார இறுதி மற்றும் பிற நாட்களிலும் தேவையில்லாமல் வெளியே சாப்பிடுவதை முதன்மையாகவும், உயர்வாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் மேன்மையைப் பறைசாற்றும் வடிகாலாகவும் நினைக்கத் தொடங்கியது...

5. சீரழிந்த வாழ்க்கைமுறை - மருத்துவச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...

6. சலூன்கள், பார்லர்கள் மற்றும் ஆடைகளை சமூக மதிப்பிற்கான பெரு நிறுவன தயாரிப்பினைக் (BRAND VALUE) குறியீட்டு உணர்வாக வளர்த்துக் கொண்டது...

7. ஒன்றாக நேரத்தைச் செலவழிப்பதை விட, அதிகப் பணத்தைப் பிறந்தநாள் மற்றும் ஆண்டுவிழாவை சிறப்பாக்க செலவழிப்பதன் மூலம்...

8. பிரமாண்டத் திருமணங்கள் மற்றும் குடும்ப விழாக்கள்...

9. வணிகமயமாக்கப்பட்ட உணவுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், பயிற்சிகள் மற்றும் கல்வி போன்றவற்றினால்...

10. தங்கள் வருமானத்தில் அனுபவிக்க இயலாததைக் குறித்த காலத்தில் - குறைந்த காலத்தில் அடைந்துவிட கடன் மற்றும் கடன் அட்டைகள் இன்றியமையாததாக மாறிவிட்டதால்.....

11. வீடு மற்றும் அலுவலகத்தின் உட்புறங்களில் பணம் செலவழித்து உள் மற்றும் வெளி அலங்காரம் செய்து குவியல் குவியலாகக் குப்பைகளைச் சேரச்செய்து அதன் மூலம் பராமரிப்புச் செலவுகளை அதிகரிக்கச் செய்வது...

12. நமது தேவைகளையும் வருமானத்தையும் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களின் வாழ்க்கை முறையை நகலெடுக்கிறோம்.

இது குறைக்கப்படாவிட்டால், அது பல ஆண்டுகள் கடந்தும் (பழக்கங்கள் மாறாததால்) நோயாக மாறி அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு வழிவகுக்கும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...