மொத்தப் பக்கக்காட்சிகள்

ஐசிஐசிஐ வங்கி: பங்குச் சந்தை மற்றும் கஸ்டோடி சேவைகளில் பங்கேற்பவர்களுக்கு டிஜிட்டல் தீர்வுகள் அறிமுகம் ICICI Bank


 

ஐசிஐசிஐ வங்கி:  பங்குச் சந்தை மற்றும் கஸ்டோடி சேவைகளில் பங்கேற்பவர்களுக்கு டிஜிட்டல் தீர்வுகள் அறிமுகம்

 

·   பங்கு தரகர்கள் மற்றும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் '3-in-1' கணக்கை வழங்குகிறது

·     பி.எம்.எஸ் வாடிக்கையாளர்களுக்கான சேமிப்புக் கணக்கு மற்றும் டீமேட் கணக்கை  முதல் முறையாக  டிஜிட்டல் வழியில் செயல்படுத்துகிறது

·     எஃப்.பி.ஐகள்/ எஃப்.டி.ஐ-களுக்கு டிஜிட்டல் சேவை தளத்தை வழங்குகிறது

 

மும்பை: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) இன்று பங்குச் சந்தையில் (Capital Market) பங்கேற்பாளர்கள் மற்றும் கஸ்டோடி சேவைகளை (Custody Services) அளிக்கும் நிறுவனங்களின்  வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தத் தீர்வுகள், பங்குத் தரகர்கள், போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவை (PMS - Portfolio Management Service) வழங்குநர்கள், வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPIs - Foreign Portfolio Investors), வெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் (FDIs - Foreign Direct Investors), மற்றும் மாற்று முதலீட்டு நிதிகள் (AIFs - Alternative Investment Funds) உள்ளிட்ட பல்வேறு பங்கேற்பாளர்கள் தங்கள் வங்கித் தேவைகள் அனைத்தையும் தடையின்றி பூர்த்தி செய்ய உதவுகிறது.


கடந்த சில ஆண்டுகளில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ள இந்திய பங்குச் சந்தையில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் விரைவான ஆன்போர்டிங் (Onboarding) மற்றும் வசதியை வழங்க ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இந்தத் தீர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாகத் தொடங்கப்பட்ட '3-இன்-1' கணக்கு ('3-in-1' Account), பங்குத் தரகர்களின் வாடிக்கையாளர்களுக்கு, ஆன்லைன் வர்த்தகம், டிமேட் மற்றும் சேமிப்புக் கணக்கை (online trading, demat and savings account) டிஜிட்டல் முறையில் நாடு முழுவதும் எங்கிருந்தும் சில மணி நேரங்களில் (in few hours from anywhere across the country) ஆரம்பிக்க உதவுகிறது.

இந்த வசதி பங்கு தரகர்களுக்கு தங்கள் வர்த்தகம் மற்றும் டெபாசிட்டரி அமைப்புகளை ஏ.பி.ஐ (API - Application Programming Interface)மூலம் வங்கியுடன் ஒருங்கிணைத்து, முதலீட்டாளர் நிதிகள் கிடைப்பது குறித்த நிகழ் நேரத் தகவலை அவர்களுக்கு வழங்குகிறது. பிஎம்எஸ் சேவைகளை வழங்குபவர்களுக்கு ஒரே வேலை நாளில் சேமிப்புக் கணக்கு மற்றும் டீமேட் கணக்கை டிஜிட்டல் முறையில் ஆரம்பிக்க (digitally open savings account and demat account in a single working day) இந்த வங்கியில் முடியும்.

 

கூடுதலாக, உலகெங்கிலும் உள்ள எந்த நாட்டிலிருந்தும் எஃப்.பி.ஐ-கள்/ எஃப்.டி.ஐ-களை பதிவு செய்வதற்கு ஒரு டிஜிட்டல் தளத்தை இந்த வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. முன் சரிபார்ப்புக்காக ஆவணங்கள் மற்றும் தகவல்களை தடையின்றி பதிவேற்ற எஃப்.பி.ஐ-கள்/எஃப்.டி.ஐ- களுக்கு இந்தத் தளம் உதவுகிறது, இதன் மூலம் பதிவு செய்வது மற்றும் வங்கிக்கு வந்து செல்லும் நேரத்தை சில நாள்களாக குறைக்கிறது.

 ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பெரிய வாடிக்கையாளர்கள் குரூப்- ன் தலைவர் திரு. சுமித் சங்காய் (Mr. Sumit Sanghai, Head- Large Clients Group, ICICI Bank) பேசுகையில், "கடந்த சில ஆண்டுகளில் இந்தியப் பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மியூச்சுவல் ஃபண்ட் துறையின் நிர்வகிக்கும் தொகை (AUM) அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம்  அளவிடப்படுகிறது.

பட்டியலிடப்பட்ட இந்திய நிறுவனங்களின் பங்குச் சந்தை மூலதனம் (Market Capitalisation) கடந்த ஐந்து ஆண்டுகளில் ~ ரூ. 148 டிரில்லியனில் இருந்து ~ ரூ. 257 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.

 

சந்தை தொடர்ந்து வலுவான வளர்ச்சியை கொண்டிருப்பதோடு, 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்திற்கு உத்வேகம் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

 

வங்கியால் தொடங்கப்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் பங்குச் சந்தை மற்றும் கஸ்டோடி சேவைகளில் பங்கேற்பாளர்களுக்கு ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நடைமுறை செயல்முறைகளை கணிசமாகக் குறைக்கவும், அதன் மூலம் வணிகத்தில் அவர்களின் செயல்பாட்டுத் திறன் மற்றும் அளவிடுதல் ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவும்." என்றார்.

 

பங்குச் சந்தைகள் மற்றும் கஸ்டோடி சேவைகளில் உள்ள நிறுவனங்களுக்கான டிஜிட்டல் தீர்வுகளின் முக்கிய சேவைகள் மற்றும் சலுகைகள் வருமாறு:

 

·      பங்குத் தரகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான '3-இன்-1' கணக்கு வசதி: இந்த வசதி முதலீட்டாளர்கள் டிமேட், சேமிப்பு வங்கி மற்றும் வர்த்தகக் கணக்கை ஒரே நேரத்தில் முற்றிலும் டிஜிட்டல் முறையில், சில மணி நேரங்களில் ஆரம்பிக்க உதவுகிறது. இந்த வசதி முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணத்தை பங்கு தரகர்களுக்கு மாற்றுவதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனைக்காக கணக்கில் உள்ள பணத்தை நிறுத்தி வைக்க உதவுகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பங்கு வர்த்தகம், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் போது மட்டுமே பணம் செலுத்துவதற்கான நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது. கூடுதலாக, பங்கு தரகர்கள் தங்கள் அமைப்புகளை வங்கியுடன் ஒருங்கிணைத்து முதலீட்டாளர்களின் பணம் கிடைப்பது குறித்த நிகழ்நேர தகவலைப் பெறலாம்.

 

· பி.எம்.எஸ் வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் கணக்கு தொடங்குவது: ஒரு கஸ்டோடியனாக, பி.எம்.எஸ் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் டீமேட் மற்றும் வங்கிக் கணக்கைத் திறப்பதற்கான தீர்வை  இந்தத் துறையில் முதலாவதாக வங்கி வழங்குகிறது. பொதுவாக, கணக்கு ஆரம்பிக்க 7 முதல் 10 நாள்கள்  ஆகும். இந்த  கணக்கு திறப்பு செயல்முறை ஒரே நாளில் எளிய டிஜிட்டல் நடைமுறை மூலம் கணக்கு தொடங்கப்படுகிறது.

 

·      எஃப்.பி.ஐ/எஃப்.டி.ஐ வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் ஆன்-போர்டிங் மற்றும் முன்-சரிபார்ப்பு: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஃப்.பி.ஐ- கள்/எஃப்.டி.ஐ-களை பெறுவதற்கான அதிநவீன டிஜிட்டல் தளத்தை வழங்குகிறது. டிஜிட்டல் செயல்முறையானது, பல நேர மண்டலங்களைக் கையாள்வதற்குத் தேவைப்படும் நீண்ட நேரத்தை  நீக்கி கால அளவை குறைக்கிறது. வாடிக்கையாளர்கள் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து, முன் சரிபார்ப்பு செயல்முறைக்காக, நிறுவனம் பதிவு செய்யபப்ட்டதற்கான சான்றிதழ் (Certificate of Incorporation), சங்கத்தின் மெமோராண்டம் (Memorandum of Association), ஒழுங்குமுறை உரிமங்கள் (Regulatory Licenses) போன்றவற்றை உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) ஆவணங்களாகப் பதிவேற்றலாம்.

 

விசாரணைகள், கேள்விகள், சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால், பிளாட்ஃபார்மில் உள்ள பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட்டவுடன், வாடிக்கையாளர்கள் ஒழுங்குமுறை ஆவணங்களை தேவைக்கேற்ப, வங்கிக்கு அனுப்ப வேண்டும். இந்த டிஜிட்டல் செயல்முறையானது வங்கிப் பணிகளை எளிதாக்குகிறது மற்றும் கணக்கு ஆரம்பிக்க எடுக்கும் நேரத்தை குறைக்கிறது, தொழில் நடைமுறையில் 2 முதல் 3 வாரங்கள் வரை எடுத்துகொள்ளும் வேலையை சில தினங்களில் முடிக்க உதவுகிறது.  மின்னஞ்சல் (e -mail) மூலம் ஆவணங்களை பரிமாற்றம் செய்வதை நீக்கி ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

·    சுய-சேவை போர்டல்: பி.எம்.எஸ், ஏ.ஐ.எஃப் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs - Foreign Institutional Investors) உள்ளிட்ட கஸ்டோடி சேவைகளின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சுய சேவை போர்ட்டலை, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்குகிறது, இது 'வலைதள கஸ்டோடி' ('Web Custody') மூலம் கஸ்டோடியில் வைத்திருப்பவர்கள், பரிவர்த்தனைகள் மற்றும் பல்வேறு அறிக்கைகளுக்கு 24*7 டிஜிட்டல் அணுகலை வழங்குகிறது. இது கார்ப்பரேட் இணைய வங்கியின் (Corporate Internet Banking) புதிய அம்சம் ஆகும்.

இந்த வங்கியானது 'E-Protector' பயன்பாட்டிற்கான அணுகலை வழங்குகிறது, இது பங்கு வர்த்தகத்தில் மார்ஜின் பயன்பாடு, பங்கு ஒன்றுக்கான மார்ஜின் மற்றும் டெரிவேட்டிவ் கிளியரிங் சேவைகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தகத்தின் அங்கீகாரம் ஆகியவற்றை நிகழ்நேர கண்காணிப்புக்கான டிஜிட்டல் டாஷ்போர்டு மூலம் வழங்குகிறது.

·  ஏ.ஐ.எஃப்-களுக்கான மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள்: நிதி கணக்கியல் (Fund Accounting), அந்நிய செலாவணி, எஸ்க்ரோ ஏற்பாடு, டிஜிட்டல் சேகரிப்பு மற்றும் கட்டண தீர்வுகள் போன்ற சேவைகள் உட்பட ஏ.ஐ.எஃப்-களுக்கு இந்த வங்கி தீர்வுகளை வழங்குகிறது.

வங்கியின் சமீபத்திய நிதி கணக்கியல் மென்பொருள், ஏ.ஐ.எஃப் மற்றும் அதன் முதலீட்டாளர்களுக்கான இணைய அடிப்படையிலான அணுகலைத் தவிர, ஒழுங்குமுறை அறிக்கை உட்பட அனைத்து சொத்து வகுப்புகளையும் நிர்வகிக்கும் திறனைக் கொண்டிருக்கிறது.

ஏ.ஐ.எஃப் போர்ட்ஃபோலியோ நிறுவனங்களின் பல்வேறு தேவைகளான பங்கு வாங்கும் ஒப்பந்தம், பங்கு வாங்குதல், இணைத்தல், டீமேட் எஸ்க்ரோ, ரெரா (RERA) கணக்குகள் மற்றும் கடன் இணைக்கப்பட்ட (Credit Linked) ஏற்பாடுகள் போன்ற பல்வேறு தேவைகளுக்காக வங்கி தனிப்பயனாக்கப்பட்ட எஸ்க்ரோ சேவைகளை விரிவுபடுத்துகிறது.

·   டிஜிட்டல் பண சேகரிப்பு தீர்வுகள்:முதலீட்டாளர்களிடமிருந்து நிதிகளைச் சேகரிக்கவும், மார்ஜின் பணத்தைச் சேகரிக்கவும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை ஐ.சி.ஐ.சி.ஐ  வங்கி வழங்குகிறது. பண சேகரிப்பு தீர்வுகளின் பட்டியலில் மின் சேகரிப்புகள், மின் கட்டளைகள், e-NACH மற்றும் UPI இடைமுகங்கள் (e-collections, e-mandates, e-NACH and UPI interfaces) போன்ற டிஜிட்டல் சேனல்கள் அடங்கும். இந்த சேனல்கள் அதிநவீன ஏ.பி.ஐகள் மூலம் வாடிக்கையாளர்களுடன் கம்யூட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தானியங்கு மற்றும் திறமையான பணப்புழக்க மேலாண்மைக்கு இது அவர்களுக்கு உதவுகிறது.

 

·  டிஜிட்டல் கட்டண தீர்வுகள்: பண பரிமாற்றம், முதலீட்டாளர் பணம் செலுத்துதல், விற்பனையாளர்களுக்கான செலவினம் மற்றும் சட்டப்பூர்வ பணப்பட்டுவாடா போன்ற பல்வேறு பணப்பட்டுவாடாகளை மேற்கொள்வதற்காக, பங்குச் சந்தை மற்றும் கஸ்டோடி சேவைகளின் பங்கேற்பாளர்களுக்கு இந்த வங்கி பொருத்தமான தீர்வுகளை வழங் ஐசிஐசிஐ வங்கி குகிறது.

 

பங்கேற்பாளர்கள் வங்கியின் அமைப்புகள் மற்றும்  யூ.பி.ஐ ஆகியவற்றுடன் நேரடியாக ஒருங்கிணைத்து, தங்கள் இஆர்பி (ERP - Enterprise resource planning) அமைப்புகளுக்குள் கட்டணத் தீர்வுகளை  வழங்கலாம்.  பாதுகாப்பான மற்றும் விரைவான முறையில் வங்கியுடன் ஏபிஐ (API) ஒருங்கிணைப்புடன் இதைச் செய்யலாம். இந்த ஒருங்கிணைப்பு பங்கேற்பாளர்களுக்கு நிகழ்நேர நிலை புதுப்பித்தல், வேகமான வரவுகள் மற்றும் கிளையன்ட் அமைப்புகளுடன் தானியங்கு வசதி மற்றும் சரிபார்த்தல் ஆகியவற்றுடன் உதவுகிறது.

 பங்குச் சந்தைகள் மற்றும் கஸ்டோடி சேவைகளுக்கான டிஜிட்டல் தீர்வுகளைப் பற்றி மேலும் அறிய, பார்வையிடவும்

https://www.icicibank.com/ms/corporate/icicibankstack/Capital_Market.html or write to capitalmarket@icicibank.com 

செய்திகள் மற்றும் புதிய தகவல்களுக்கு பார்வையிடவும். www.icicibank.com and follow us on Twitter at www.twitter.com/ICICIBank

 

பத்திரிக்கை விசாரணைகளுக்கு எழுதவும்:  corporate.communications@icicibank.com

 

ஐசிஐசிஐ வங்கி பற்றி (About ICICI Bank):  ஐசிஐசிஐ வங்கி (BSE: ICICIBANK, NSE: ICICIBANK மற்றும் NYSE:IBN) இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியாகும். டிசம்பர் 31, 2022 இல் வங்கியின் ஒருங்கிணைந்த மொத்த சொத்து மதிப்பு ரூ.15,21,748 கோடியாக இருந்தது.

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உலக ஆரோக்கிய தினம் ஏப்ரல் 7 World Health Day

உலக ஆரோக்கிய தினம்  ஏப்ரல் 7