மொத்தப் பக்கக்காட்சிகள்

சென்னையில் 2022 டிசம்பர் 18-ல் காரைக்குடி சந்தை: அனுமதி இலவசம்..!

சென்னையில் 2022 டிசம்பர் 18-ல் காரைக்குடி சந்தை: அனுமதி இலவசம்..!

காரைக்குடி என்றவுடன் நம் அனைவருக்கும் பிடித்த செட்டி நாடு உணவுகள்  நினைவுக்கு வரும்.  மேலும்  கண்டாங்கி சேலை,  செட்டி நாடு கூடை, காரைக்குடி கொட்டான்,  காரைக்குடி மங்கு,  கலைநயமிக்க காரைக்குடி  மரச் சாமான்கள் ஞாபகத்துக்கு வரும்.

சென்னையில் காரைக்குடி சந்தை..!


இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக 'சென்னையில் காரைக்குடி' என்கிற நிகழ்ச்சியின் மூலம் காரைக்குடியின் பெயர் சொல்லும் அத்தனை பொருட்களையும் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சி 2022  டிசம்பர் 18 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை சென்னை எழும்பூர் ராணி மெய்யம்மை அரங்கில் 'காரைக்குடி சந்தை' என்ற பெயரில் நடைபெற உள்ளது.


காரைக்குடி நகரத்தார் சங்கம்
இதுகுறித்து காரைக்குடி சந்தை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்  திருமதி. விஜி பழனியப்பன் மற்றும் திருமதி  விசாலாட்சி கணேஷ் கூறும் போது.,'' காரைக்குடி நகரத்தார் சங்கம் சார்பாக முதல் முறையாக கடந்த 2019 ஆம் ஆண்டு காரைக்குடி சந்தை நடந்தது. இதில் 50 பெண் தொழில்முனை வோர்கள் பங்கேற்று  அரங்குகள் அமைத்தனர். சுமார் 6,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

பெண் தொழில்முனைவோர்கள்


2022 டிசம்பர்  18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  நடக்க இருக்கும் சந்தையில்  அரங்குகளை அமைக்க 80 பெண் தொழில்முனைவோர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்தச் சந்தையில் செட்டி நாட்டுக் கொட்டான், செட்டி நாட்டு கூடைகள், செட்டி நாட்டு பித்தளை, செட்டி நாட்டு மங்கு, கலைநயம் மிக்க செட்டி நாட்டுமரச் சாமான்கள், செட்டி நாட்டு பருத்தி புடவைகள், பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான வடிவமைக்கப்பட்ட  ஆயத்த  ஆடைகள், பை வகைகள், வெள்ளிச் சாமான்கள், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், செட்டி நாட்டுக்கே உரித்தாகிய மாவு வகைகள், பலகாரங்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும்.  தவிர, பார்வையாளர்கள் செட்டிநாடு உணவுகளை சுவைக்க தனி அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன'' என்றார்கள்.

இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசமாகும். 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...