மொத்தப் பக்கக்காட்சிகள்

மகிழ்ச்சியின் இரகசியம்... ஏ.சுந்தரராஜன் Relaxமகிழ்ச்சியின் இரகசியம்...

*மகிழ்ச்சி என்பதை பல மக்களும் பொருள் சார்ந்ததாகவே நினைத்து வருகிறார்கள். எனக்கு இந்த மகிழுந்து வாங்குவதில் தான் மகிழ்ச்சி, எனக்கு ஒரு பெரிய வீடு கட்டுவது தான் மகிழ்ச்சி என பொருட்கள் சார்ந்ததாக மட்டுமே நினைத்து வருகிறார்கள்.* 

*மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது மட்டுமே இல்லை.  அது நமது உடல் மற்றும் மனம் சார்ந்தது. பொருள் சார்ந்ததாக மட்டுமே இருந்திருந்தால் பணம் இருப்பவர்கள் அனைவரும் கவலையே இல்லாமல் இருந்திருப்பார்கள்.* 

*அப்படி எதுவும் இதுவரை நிகழ்ந்தது இல்லை. அவர்களும் மகிழ்ச்சியைத் தேடிய வண்ணமே உள்ளனர். இதிலிருந்தே நாம் புரிந்துகொள்ளலாம் மகிழ்ச்சி என்பது நமது உடல் மற்றும் மனம் சார்ந்தது தான் என்பதை.* 

*நாம் மகிழ்ச்சியாக வாழ்வதும் கவலையாக வாழ்வதும் நம்முடைய எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் சார்ந்தே தீர்மானிக்கப்படுகிறது.* 

*நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது கவலையாக இருந்தாலும் சரி அதை நாம் உணர்வதற்கான காரணம் நம் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றம் தான்.* 

*நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஹார்மோன்கள் சுரக்கிறது. நாம் கவலையாக இருந்தாலும் ஹார்மோன்கள் சுரக்கிறது. அப்படி ஹார்மோன்கள் சுரப்பதை தான் நாம் உணர்வாக உணர்கிறோம்.*

*நாம் நல்ல உணர்வுகளுடன் இருக்கும்பொழுது மகிழ்ச்சியையும் அதற்கு மாறான உணர்வுகளுடன் இருக்கும்பொழுது கவலையையும் உணர்கிறோம்.* 

*நமது எண்ணங்கள் எதை எண்ணுகிறதோ? எப்படி எண்ணுகிறதோ? அதன்படிதான் நமக்கு ஹார்மோன்கள் சுரக்கும். **

*அந்த எண்ணங்களுக்கு ஏற்றவாறு ஹார்மோன்கள் சுரப்பதை தான் நாம் மகிழ்ச்சியாகவோ? அல்லது கவலையாகவோ? உணர்கிறோம்.*

*இதனால்தான் நமது மகிழ்ச்சிக்கு மற்றும் நமது கவலைக்கு காரணம் நம்முடைய எண்ணங்கள் தான் என்று கூறுகிறேன். நமது எண்ணங்களை நாம் சரியாக வைப்பதிருப்பதின் மூலமாக, சரியாக வழி நடத்துவதன் மூலமாக மட்டுமே நமது வாழ்க்கையை நம்மால் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.* 

*ஏனென்றால் நல்ல எண்ணங்கள் நல்ல உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்தும்.*

*நமக்கு எது வேண்டும், எது வேண்டாம், எதற்காக இதை செய்ய வேண்டும் என்பது போன்ற தெளிவான எண்ணங்களை நாம் வளர்த்துக்கொள்ளும் பொழுது நமது மகிழ்ச்சி தடையின்றி நிகழ்கிறது.* 

*சின்னச் சின்ன அழகையும் ரசிக்கும் மனதை நாம் பெறும் பொழுது நாம் பார்க்கும் ஒவ்வொன்றிலும் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.*

*நாம் பார்க்கும் அனைத்திலும் உள்ள நல்லதைப் பற்றி மட்டும் நாம் சிந்திக்கும் பொழுது நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.*

*நாம் எண்ணும் அனைத்திலும் நல்லவை அதிகமாகும் பொழுது நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகமாகிறது...*

*வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க அனைத்து உயிரினங்களும்* 

🌸 *அடையாளங்களிலிருந்து விலகிவிடு*

ஆணவம் ஒரு செயலுடன்

ஒரு குணநலனுடன்

தன்னை அடையாள படுத்திக் கொள்கிறது 

ஒருவர் கிளார்க் 

ஒருவர் போலீஸ் 

ஒருவர் கமிஷ்னர் 

ஒருவர் தோட்டக்காரர் 

ஒருவர் கவர்னர்

ஒருவர் மேனேஜர்

ஒருவர் டாக்டர் 

என இருந்தால்

அவை யாவும் செயல்கள் 

நீங்கள் செய்பவை அவை நீங்கள் அல்ல

நீ உன்னை அடையாளபடுத்திக் கொள்ளும் அளவு

நீ உயிரற்று போய் விடுகிறாய் 

இது நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று 

நீ செய்வது எதனுடனும் உனக்கு சம்பந்தமில்லை 

உனது இருப்பிற்கும் உனது வேலைக்கும் தொடர்பில்லை 

நீ செய்யும் வேலை எதுவாக இருப்பினும் 

அது உனது இருப்பை தொடாது 

உன் மனைவியுடன் இல்லாத போது நீ கணவனல்ல 

மனைவி இல்லாதபோது 

நீ எப்படி கணவனாக இருக்க முடியும்

இது மடத்தனம் 

உன் குழந்தையுடன் நீ இல்லாதபோது 

எப்படி நீ ஒரு தாயாகவோ தந்தை யாகவோ இருக்க முடியும்...??? 

அது இயலாது 

நீ கவிதை எழுதாத போது நீ கவிஞனல்ல 

நடனமாடாதபோது நீ டான்ஸர் அல்ல 

நீ நடனமாடும்போதுதான் நீ டான்ஸர் 

அந்த நேரத்தில் உனது உடலின் நிலை 

நாடித்துடிப்பு நடனமாடுவதற்கு ஏற்றாற் போல ஒரு குறிப்பிட்ட விதமாக இருக்கும் 

ஆனால் 

அது அந்த நேரத்திற்கானது மட்டுமே 

நிறுத்தியவுடன் டான்ஸர் மறைந்து விடுவார் 

நீ அதிலிருந்து வெளியே வந்து விடுவாய் 

இது போன்று இருந்தால் நீ சுதந்திரமாக இருக்க முடியும் 

சுமையின்றி இருக்க முடியும் 

பொங்கி பெருகி வழிந்தோடலாம் 

நீ ஆபிஸில் இருக்கும்போது 

ஒரு கிளார்க்காகவோ

ஒரு கமிஷ்னராகவோ

ஒரு கவர்னராகவோ இரு 

அது மிகவும் சரியானது 

ஆனால் 

நீ ஆபிஸை விட்டு வெளியே வந்தவுடன் 

கிளார்க்காகவோ  

கமிஷ்னராகவோ  கவர்னராகவோ இருக்காதே 

அந்த வேலை முடிந்தது 

எதற்கு அதை சுமக்கிறாய் 

ஒரு கவர்னர் போல தெருவில் நடக்காதே 

நீ அதல்ல 

அந்த கவர்னர்தனம் உன் தலைமேல் ஒரு பாரமாக உட்கார்ந்து இருக்கும் 

அது உன்னை சந்தோஷமாக இருக்க விடாது 

மரத்தின் மீதுள்ள பறவைகள் பாடிக் கொண்டிருக்கின்றன 

ஆனால் 

ஒரு கவர்னரால் எப்படி கூட பாட முடியும்

ஒரு கவர்னரால் எப்படி பறவைகள் பாட்டுக்கு ஆட முடியும்

மழை வருகிறது

மயில் ஆடுகிறது 

*எப்படி ஒரு கவர்னரால் கூட்டத்தில் நின்று அதை ரசிக்க முடியும்* 

முடியவே முடியாது 

*ஒரு கவர்னர் ஒரு கவர்னராகத்தான் இருக்க முடியும்* 

*அவர் வழியில் போய்கொண்டே இருப்பார்* 

*அங்கு மிங்கும் பார்க்கவே மாட்டார்* 

*மரங்களின் பசுமையை, நிலாவை ரசிக்க மாட்டார்* 

*அவர் ஒரு கவர்னராகவே இருப்பார்* 

*இந்த அடையாளப்படுத்திக் கொள்ளுதல் உன்னை கொன்று விடுகின்றன*

*அடையாளத்தில் இருந்து வெளியே வா  🌸*
*நலவாழ்வியல் சிந்தனைகள்!!*
🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮🔮

*🔮பிரச்சனைகளை சதா எல்லா நேரமும் நினைக்காமல் இருந்தால்,  அந்த இடைப்பட்ட காலத்தில் தீர்வு கிடைத்து விடும்.*

*🔮வயதாகி விட்டது என்று தினசரி வாழ்க்கையில் எதையும் நிறுத்த வேண்டாம்  அப்படி நிறுத்தினால் நிம்மதி போய் விடும்.*

*🔮வாழ்க்கை அமைதியானது தான். மனம் மட்டும் தான் பதற்றமாக இருக்கிறது.*

*🔮திறமை இல்லை என்றால் தவறு இல்லை.  ஆனால் சோம்பேறித் தனம் உடலையும் மனதையும் பாழாக்க விடக் கூடாது.*


ஏ.சுந்தரராஜன்
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...