மொத்தப் பக்கக்காட்சிகள்

முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு விண்ணப்பிப்பது எப்படி? CM Insurance

முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க

காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு GH க்கு முதலில் போங்க..

அங்க காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி பூர்த்தி செய்து  அதை கிராம நிர்வாக அதிகாரி  VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க... (குடும்பத்துல இருக்குற எல்லோரோட ஆதார் நகல்  எடுத்து செல்லவும்.) 

பின் VAO எழுதி சீல் போட்டு தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..

அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்... ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள்.செலவு ஏதும் கிடையாதுங்கோ...

இந்த காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு  ரூபாய்.5 லட்சம் வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.

 அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம்.

இதுல ENT சர்ஜ்சரி , கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், Including Aasthuma, Dengue, Hearing Aid, Free CT Scan, Free MRI Scan எல்லாமே கவர் ஆகும்..


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...