மொத்தப் பக்கக்காட்சிகள்

Investment எந்த முதலீடு நல்ல முதலீடு விரிவான விவாதம்

இன்று காலையில் நான் எழுதி இருந்த ஒரு பதிவுக்கு, 
இதுவரை 41 பின்னூட்டங்கள் எழுதி இருக்கின்றார்கள். 
படியுங்கள். 

பதிவு

காலையில் ஒரு தம்பி அழைத்தார். 

அண்ணா,
குடும்பச் சொத்து விற்றதில் 
என் பங்கு 6 இலட்சம் ரூபாய் கிடைத்தது. 
பங்குச் சந்தை அல்லது மியூச்சுவல் பண்டில் போடுமாறு ஒரு நண்பர் சொல்லுகின்றார். 
சரியா? என்று கேட்டார். 

அவருக்கு நான் அளித்த விளக்கம்:

பங்குச் சந்தை நிலவரங்களை எத்தனையோ ஆண்டுகளாகப் பார்த்து வருகின்றேன். 
எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

ஒரு நிறுவனத்தின் பங்குகள் காலையில் விலை ஏறுகிறது..
மாலையில் கீழே விழுகின்றது. 
அது எப்படி?

முழுக்க முழுக்க அது பணக்காரர்கள் ஆடும் சூதாட்டம்தான். 

எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர், 
சுமார் 30 இலட்சம் ரூபாய் வரை இழந்து, 
தற்கொலை செய்து கொண்டார். 

உங்களுக்கு அதைப் பற்றி அ னா ஆ வன்னா கூடத் தெரியாது. 
எதற்கு வீண் வேலை? 

நமக்குத் தெரிந்த வழிகளில் முதல் போடுங்கள். 

பணத்தைக் கையில் வைத்து இருக்காதீர்கள். 
ஒவ்வொரு நாளும், 100,200, 500 எனக் கரைந்து காணாமல் போய்விடும். 

ஒன்று, தங்கம் வாங்குங்கள். 

அல்லது, இந்தத் தொகையுடன், மேலும் வங்கிக் கடன் பெற வழி இருந்தால், ஒரு சிறிய சொத்து வாங்குங்கள்.
 
அல்லது வங்கிகளில் வைப்புத் தொகை போடுங்கள். 
மாதந்தோறும் கைச்செலவுக்கு வட்டி கிடைக்கும் என்றேன். 

நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள்?

Comments

Ra Raajasegar
அண்ணா...சரியாகச் சொன்னீர்கள்...

Raj Mohan
வங்கியிலும் தங்கத்திலும் போட்டால், விலைவாசி உயர்வு (inflation ) மட்டுமே ஈடு செய்யும்.

Manimekalai Palanisamy
Bank or post office போட்டால் 
நம் பணம் நம் கையில்

Kvr Ramesh
கோட்டக்கல்

ஒரு சென்ட் ஒரு லட்சம் வைத்து 
ஆறு செண்டு வாங்கி வைத்தால், 
பத்து ஆண்டுகளில் குறைந்தது 25 லட்சம் 30 லட்சம் ஆவது கிடைக்கும்.

13 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் ரூபாய் 7 லட்சம் இருந்தது.
ஒரு சென்ட் 65,000 வைத்து 10 சென்ட் வாங்கி வைத்தேன். 
தற்போது அதன் மதிப்பு 50 லட்சத்திற்கும் கூடுதல் ஆகிவிட்டது. 

Siddhique

வெள்ளிக் கட்டிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
ஆபரணக் கடைகளில் வாங்காதீர்கள்.

ஓசூர் அல்லது சேலம் பகுதிகளில் வியாபாரிகளிடம் கட்டியாக வாங்கி வைத்துக் கொள்ள சொல்லுங்கள்

வெள்ளிக் கட்டிக்குத்தான் விலை நிலவரம்
Fluctuation அதிகம் இருக்கும்
இறங்கும் பொழுது வாங்கி
ஏறும் போது விற்று லாபம் அடையலாம்

அல்லது. பழைய நகைகள் வாங்கி விற்கும் வணிகர்களைத் தேடிப் பிடித்து
வெளிநாட்டு காயின்கள் வாங்கி வைத்து கொள்ள சொல்லுங்கள்.

எப்பொழுதும் ஒரே கூடையில் அத்தனை முட்டைகளையும் போடக்கூடாது

ஆறாகப் பிரித்து
கொஞ்சம் வெள்ளி கொஞ்சம் தங்கம் கொஞ்சம் விசுவல் ஃபண்ட் கொஞ்சம் கையிருப்பு போன்று பிரித்து வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்.

நான் வணிகன் அல்ல
ஆனால் நானும் வாங்கிக் கொள்ளும் பழக்கம் வைத்து இருக்கிறேன்.
சேமிப்புகளை பல்வேறு இடங்களில் வைத்திருக்க வேண்டும்.

அருணகிரி
வெள்ளிக்கு நல்ல விலை கிடைக்காது. தங்கம் தான் சரி.

Arumugam Saravanan
இடம் வாங்கிப் போடுவது நல்லது.
நிலத்தின் மதிப்பு மூன்று மடங்காக உயர வாய்ப்புள்ளது.

பா.ச. பாலசிங்

பங்குச் சந்தை முதலீடுகள் தொடர்பாக என்னை அணுகலாம்ணே. 
கட்டணம் இல்லாமல் முழுமையாக சொல்லித் தரலாம்.
என் முதலீடுகள் என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகம் படித்தால் அடிப்படைகள் தெரிந்து கொள்ளலாம்,


என் முதலீடுகள்.../En Mudhaleedukal...: முதலீடுகள் ஓர் எளிய அறிமுகம்... (Tamil Edition)

Nagu Narayanan

பா.ச. பாலசிங் please share your number

Nagu Narayanan

ஒன்று விலை ஏறும் இடத்தில் நல்ல நிலம் வாங்குங்கள். 
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு 
don't put all your eggs one basket. 

முதலில் நீங்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். 
எதிர்காலத்தில் மருத்துவமனைச் செலவை தவிர்க்கலாம். 

அருணகிரி
மிகச் சரியான யோசனை. 
நான் பல ஆண்டுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கருதி எடுக்காமலேயே இருந்தேன். 
ஆனால், எதிர்பாராத செலவு வந்தது. 
எனவே, இப்போது மருத்துவக் காப்பு செய்து கொண்டேன். 
ஆனால், சில நோய்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்குக் காப்பு கிடைக்காது. 
ஏதேனும் ஊர்தி மோதல்களில் ஏற்படுகின்ற காயங்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கு 
உடனே பாதுகாப்பு கிடைக்கும். 

எல்லோரும் முதலில் மருத்துவக் காப்பு ஈடு 
செய்து கொள்ள வேண்டும். 

நாகு நாராயணன்

பிறகு கொஞ்சம் பணத்தை 
அஞ்சலக கிசான் விகாஸ் பத்ராவில் முதலீடு செய்யலாம். 
பிறகு கொஞ்சம் பணத்தை 
பரஸ்பர நிதி திட்டங்கள் Mutual fund நல்ல திட்டங்களைத் தேர்ந்து எடுத்து முதலீடு செய்ய வேண்டும். 
அந்த முதலீட்டுத் திட்டங்களில் கூட தங்கம் சார்ந்த திட்டங்களைத் தாராளமாகத் தேர்ந்து எடுக்கலாம்.

கொஞ்சம் பணத்துக்கு தங்கம் வாங்குங்கள். 
தங்கம் விலை நிச்சயம் 2025 அல்லது 26 வது வருடத்திற்குள் பத்தாயிரம் ரூபாய் தொட்டுவிடும்.

Kanagaraj Nandhan

E - Asset எனப்படும் வைப்பு நிதி
திட்டத்தில் முதலீடு செய்து,
மாத ( அ) ஆண்டு வட்டி பெறலாம்.
முதலீட்டு பணம் பயம் இல்லை.
பராமரிப்புச் செலவு இல்லை
திட்டத்தில் பணம் செலுத்தி சேர்ந்த நாளில் இருந்து
ஒருவரது 100 ஆண்டுகள் வரை,
குறைக்கப்படாமல், உத்தரவாதமான
வட்டித் தொகை வழங்குகின்ற
வாய்ப்பான திட்டம் Lic யில் உண்டு

Sitharthan K
Kanagaraj Nandhan

எல்லாம் ஏமாற்று
அத்தனையும் ஒரே சதவிகித 
வட்டி தான்

Sitharthan K

இன்றைக்கு ஒரு ரூபாய் விற்கும் பொருள் நாளை 
நூறு ரூபாய் ஆகும்.
ஆனால் பென்ஷன் வருமான வட்டியில் கடைசி வரை மாற்றம் இருக்காது
என்ன செய்வது?
அரசு அலுவலர்கள் கேட்கும் DA உயர்வு என்பது சாதாரணம் இல்லை
உண்மையில் அது வாழத் தேவை

Kanagaraj Nandhan
Sitharthan K விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.

Sitharthan K
Kanagaraj Nandhan

Lic பென்ஷன் ஸ்கீம் என்று ஒரு வைப்பு திட்டம் உள்ளது
ஒரு கோடி வைத்தால் 
50 ஆயிரம் பென்ஷன்
இந்தக் கணக்கில் ரூ ஆயிரத்தில் இருந்து
போட்டுப் பாருங்கள்.

ஆனந்தன் அருள்

தங்கம் பெரிதாக உயர வாய்ப்பு இல்லை, 
நிரந்தர வைப்புத்தொகைக்கு பெரிதாக வட்டியும் கிடைப்பது இல்லை.
எதாவது வளர்ந்த நகரங்களுக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட வீட்டு மனைகள் வாங்கலாம்.
பிற்காலத்தில் நல்ல விலை போக வாய்ப்புகள் அதிகம்,

வசந்த் திருநாவுக்கரசு
Boston Sriram

Krishnaraj Thiyagarajan

டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம். 
தேவையான நேரத்தில் விற்றுப் பணமாகப் பெறலாம்.
டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா.?

Rajendran Perumal

பங்குச் சந்தையும் லாபகரமானதுதான்.
ஆனால் இன்று வாங்கி நாளை விற்பது சூதாட்டம்.
நிறுவனத்தின் நீடித்த நிலைப்பாடு, 
அதன் விற்பனை, ஆண்டுதோறும் அடையும் லாபம், வளர்ச்சி அகியவற்றையும் கணக்கிட்டு முதலீடு செய்யலாம்.
பங்கின் விலை இறங்கலாம்.
லாப ஈவு,
போனஸ் பங்குகள் ஆகியவற்றால் முதலீடு உயரும்.
ஆனால், அடுத்த ஆண்டே செலவுக்குப் பணம் வேண்டும் என்கிற சூழ்நிலை இருந்தால் 
பங்குச் சந்தை சரி வராது.

அருணகிரி
அண்ணா,
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. 
நான் 2003 ஆம் ஆண்டு, 
ரூ 2500 மதிப்பில், மூன்று நிறுவனங்களில், மொத்தம் 7500 ரூபாய்க்கு பங்குகள் வாங்கினேன். அதற்காக, ஐசிஐசிஐ வங்கியில் டீமேட் கணக்கு தொடங்கினேன். அதற்கு குறைந்தது 10000 ரூபாய் இருப்பு வைத்து இருக்க வேண்டும். 

அடுத்து அதை நான் மறந்தே போய்விட்டேன். ஆர்வம் இல்லை.
அண்மையில் சரி பார்த்தபொழுது, அந்த வங்கியில் என் 10000 ரூபாய் கரைந்து வெறும் 800 ரூபாய் இருந்தது. 
ஆனால், பங்குகளின் மதிப்பு 22000 ரூபாய் ஆகி இருந்தது. அந்தப் பணத்தை எடுத்துவிட்டு, வங்கிக் கணக்கையும் மூடி விட்டேன். 

Ravi Chandran

யாரோ ஒரு சிலருக்குத்தான் வீட்டு மனைகளுக்கு 
சிறந்த பலன் கிடைக்கும்.

ஒரு சிறிய தேநீர் கடை 
நகரத்தின் நல்ல கூட்டம் சேரும் இடத்தில் தொடங்கலாம். 
சன்னஞ்சன்னமாக இலாபம் வரும். பின்னர் பெருகும்.

Rajasekar Mallaiyasamy

நிலத்தில் முதலீடு செய்வதே சிறந்தது

Sampath Perialwar

Mரtual funds நீண்ட காலம் முதலீடு செய்ய சரியான ஒன்று. 
கூட்டு வட்டி விகித அடிப்படையில் இயங்குவதால் பாதுகாப்பான நல்ல return கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Rathna Pandian

முதலில் கையில் உள்ள தொகையை 
Long Term & Short Term தேவைகளை அனுசரித்து வங்கியில்
Deposit செய்யவும்.
மற்ற முதலீடுகளைப் பற்றி நன்கு யோசித்து முடிவு எடுக்கவும்.

சரவணன் கார்த்திகேயன்

மனை அல்லது தங்கமே 
சிறந்த முதலீடு

Mujebur Rahiman

வீட்டு மனைகள் வாங்கிப் போடுங்க, 
உறுதியாக  நல்ல பலன் கிடைக்கும். 
சென்னை முதல் தின்டிவனம் வரை உங்கள் விருப்பமான பகுதியில் வாங்க அனுகவும் 
ரஹ்மான் 9629990157

Ramalingam Balachandran

நல்ல அறிவுரை.
அவருக்கு விருப்பமான தொழில் கூட தொடங்கலாம்.
தொடங்கும் தொழிலில் கூட்டு வைத்துக் கொள்ள வேண்டாம்.

Rajasekar Mallaiyasamy

4 ஆண்டுக்கு முன் 7 இலட்சத்திற்கு வாங்கிய இடம் 
இப்போது 27.5 இலட்சம்.

Mahalingam Maheswari

பணம் பணத்தைச் சம்பாதிக்காது. 
வட்டியாகவும் லாபமாகவும் உங்களுக்குக் கிடைப்பது பிறரின் உழைப்பின் பலனே. 
அதனால் தான் நமக்கு வரும் மனக் குழப்பங்களும் உடல் நலன் குறைபாடுகளும். 
யாருமே மனம் உவந்து / மகிழ்ந்து வட்டி கொடுக்க மாட்டார்கள்.

அதற்கு நீங்களே ஒரு நியாயமான சிறு தொழில் தொடங்கலாம். 
நற்செயல்கள் புரிய பேராற்றல் துணை இருக்கும்.

Kpm Jummakhan

தொழில் வேலை இருந்தால் கிராமப்புறத்தில் வயல் இடம் வாங்கலாம்!
இல்லை என்றால் மளிகைக் கடை வைக்கச் சொல்லுங்க.

Kayal Amanullah

வட்டியில் வருமானம் இருக்கலாம்.
அது அருள் வளம் இல்லை.
இது நிரூபிக்கப்பட்ட உண்மை.

Elangovan Kaniappan

நல்ல ஆலோசனை.
வங்கி அல்லது நில முதலீடு பாதுகாப்பானது

Sitharthan K

அது ஒரு சூதாட்டம் தான் - அருமையான வரிகள்

வங்கிகளில் சேமிப்பை செய்வதையும்
அதன் மூலம் மக்களுக்குக் கிடைக்கும்
வட்டி வருமானத் திட்டத்தை உடைத்து
நாசமாக்க 
பணக்கார முதலைகளால்
கண்டு பிடிக்கப் பட்ட ஒரு கள்ளத்
தொழில் பங்குச் சந்தை.

அதானால் post office ல் 5 வருடத்தில்
சேமிப்பு மற்றும் இந்திர விகாஸ் பத்திரங்கள் முதிர்வு தேதி படிப்படியாக
உயர்ந்தது என்று சொல்வார்கள்

Sridhar Srinivasan

வீட்டு மனை வாங்கலாம்....

Manoharan

பங்குச் சந்தை சூதாட்டம்.
மொத்த காசும் போய்விடும்.
சிறிது பணம் கூடுதலாக போட்டு நிலம் வாங்கலாம். நல்ல லாபம் தரும்.

பதிவு
அருணகிரி
29.10.2022
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...