மொத்தப் பக்கக்காட்சிகள்

மாரடைப்பு ஏற்படுவதற்கான 5 அறிகுறிகள் health

மாரடைப்பு ஏற்படுவதற்கான 5 அறிகுறிகள் health 

தற்போதைய வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் தவறான உணவுப் பழக்கம் காரணமாக, மாரடைப்பு என்பது பலரது வாழ்க்கையை நிலை குலைய செய்து விடுகிறது. 

இதனால் பெரும்பாலானோர் மாரடைப்புக்கு ஆளாகின்றனர். அதுவும் தற்போதைய மோசமான உணவு பழக்கத்தினால், வயதானவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்களுக்கும் மாரடைப்பு அபாயம் அதிகரித்து வருகிறது.

இதயத்திற்கு ரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் நாளங்களில் கொழுப்பு படிவது தான் முக்கிய காரணம். மாரடைப்புக்கு முந்தைய அறிகுறிகளை அலட்சியம் செய்து விடுகிறார்கள். நமக்கு, அதெல்லாம் வராது என்ற அதீத நம்பிக்கை அல்லது உடல் நலன் குறித்து அக்கறை காட்டாத தன்மை ஆகியவை இதற்கு முக்கிய காரணம்.

மாரடைப்புக்கு முன் தோறும் சில அறிகுறிகளை பற்றி அனைவரும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதனால் உயிரிழப்பு ஏற்படாமல் காக்க முடியும்.

இதயத்தின் ஒரு பகுதிக்கு ரத்த ஓட்டம் துண்டிக்கப்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. நீண்ட நேரம் ரத்த ஓட்டம் தடைபடும் போது, ​​இதய தசை சேதமடையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மாரடைப்புக்கு முன் ஏற்படும் சில அறிகுறிகள்:

1. மாரடைப்புக்கு முன் மார்பில் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம். எனவே, சிறிதும் தாமதமின்றி, நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

2. சிலருக்கு மயக்கமாகவும், மிகவும் சோர்வாக இருப்பது போன்ற உணர்வும் ஏற்படலாம். எனவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

3. எந்த காரணமும் இல்லாமல் மிகவும் சோர்வாக இருத்தல், குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை மாரடைப்புக்கு முன் ஏற்படும் அறிகுறிகளாக இருக்கலாம்.

4. அதிக அளவு வியர்த்தல், கை, முதுகு, தாடை மற்றும் வயிற்றிலும் வலி அல்லது அசெளகரியம் ஆகியவையும் மாரடைப்பின் அறிகுறிகள் ஆகும்

5.. மாரடைப்பு வலி உடலின் இடது பக்கமாக ஏற்படும் என்றும், நெஞ்சில் ஏற்படும் வலி அப்படியே கைகளுக்கு பரவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...