மொத்தப் பக்கக்காட்சிகள்

மெட்ராஸ் வர்த்தக மற்றும் தொழிற்சபைக்கு (MCCI) புதிய நிர்வாகிகள் தேர்வு

 


 

மெட்ராஸ் வர்த்தக மற்றும் தொழிற்சபைக்கு (MCCI) புதிய நிர்வாகிகள் தேர்வு


·        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருடன் MCCI-ன் நிர்வாகிகள் சந்திப்பு

 

சென்னை: தமிழ்நாட்டின் தொழில்துறை சார்ந்த மிக தொன்மையான அமைப்பான மெட்ராஸ் வர்த்தக மற்றும் தொழிற்சபை (Madras Chamber of Commerce and Industry - MCCI), 2022-2024 ஆண்டிற்கான அதன் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்திருக்கிறதுஇந்தியாவில் தொழில்துறைக்காக தொடங்கப்பட்ட இரண்டாவது தொன்மையான கூட்டமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் நடைபெற்ற மெட்ராஸ் வர்த்தக மற்றும் தொழிற்சபையின் 186-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில், டாஃபே லிமிடெட் ன் குரூப் பிரசிடென்ட் (கார்ப்பரேட் உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள்) திரு. T.R. கேசவன் இதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். செம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் ன் நிர்வாக இயக்குனர் திரு. ராம்குமார் சங்கர் இந்த அமைப்பின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்

 

பொறியியல் மற்றும் மேலாண்மை கல்வித் தகுதிகளுடன் தொழில்முறை நிபுணராகத் திகழும் திரு. T.R. கேசவன், வேளாண் உற்பத்தித்திறன், அரசு தொழில்துறை உறவுகள் மற்றும் அரசு தனியார்துறை கூட்டாண்மைப் பிரிவுகளில் 30 ஆண்டுகள் செழுமையான அனுபவம் கொண்டவர்பல்வேறு தொழிலக மற்றும் அரசு சார்ந்த சங்கங்கள் மற்றும் அமைப்புகளில் நிர்வாகக்குழு உறுப்பினராக இவர் திறம்பட பணியாற்றி வருகிறார்

 


நிதிசார் தொழில்துறை நிபுணரான திரு. ராம்குமார் சங்கர், மேலாண்மை பிரிவில் விரிந்து பரந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.  FCA மற்றும் AICWA பட்டங்கள் பெற்றிருப்பதற்கும் கூடுதலாக, 2003-ம் ஆண்டில் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தில் துரிதமாக்கப்பட்ட மேலாண்மை கல்வி திட்டத்திலும் திரு. ராம்குமார் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

 

 

மெட்ராஸ் வர்த்தக மற்றும் தொழிற்சபைக்கு (MCCI) புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிர்வாகிகள் குழு, சமீபத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.. ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அத்துடன், தமிழ்நாட்டினை இன்னும் விரைவாக தொழில்துறை முன்னேற்றத்தை நோக்கி எடுத்துச் செல்வதற்காக முதலமைச்சருடன் ஆரோக்கியமான கலந்துரையாடலையும் நடத்தினர்.

 

மெட்ராஸ் வர்த்தக மற்றும் தொழிற்சபை (MCCI) குறித்து:

 

மெட்ராஸ் வர்த்தக மற்றும் தொழிற்சபை (MCCI) என்பது, வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான சேவையில் 186-வது ஆண்டில் தற்போது செயல்பட்டு வருகிறது.    1836-ம் ஆண்டு நிறுவப்பட்ட மெட்ராஸ் சேம்பர், தமிழ்நாட்டில் மிக தொன்மையான வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்பாகும்நாட்டின்  இரண்டாவது மிக தொன்மையான தொழில்துறை அமைப்பு என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இது, புதுடெல்லியில் உள்ள அசோசேம் (ASSOCHAM) கூட்டமைப்பை நிறுவிய ஐந்து சேம்பர்களுள் ஒன்றாகும்தென்னிந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சியில் ஒருங்கிணைந்த அங்கமாக தொடர்ந்து இருந்து வரும் இந்த மெட்ராஸ் சேம்பர், கொள்கை உருவாக்கம் மற்றும் ஆலோசனை வழங்குவதில் வலுவான பங்காற்றி வருகிறதுஅத்துடன், தனது அமைப்பின் உறுப்பினர்களுக்கு வர்த்தகம் மற்றும் தொழில் சார்ந்த பல்வேறு சேவைகளை சிறப்பாக வழங்கி வருகிறது.   www.madraschamber.in

 

ஊடக தொடர்பிற்கு:

கிறிஸ்டோபர் சார்லஸ் | பிரெடிக்ட் பிஆர் | 98424 75706 | charles@predictpr.com

*****

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண் இதழியலாளருக்கு“கலைஞர் எழுதுகோல் விருது”* அதற்கான தகுதிகள் நிபந்தனைகள் அரசு அறிவிப்பு women awards

*பெண் இதழியலாளருக்கு"கலைஞர் எழுதுகோல் விருது"* தகுதிகள்  நிபந்தனைகள்  அரசு அறிவிப்பு