பண மோசடிகளுக்கு முக்கிய காரணங்கள்..!
இந்தியாவில் பண மோசடிகளால், கடந்த  3 ஆண்டுகளில் 42% பேர்  பாதிக்கப்பட்டிருப்பதாக, சமூக  ஊடக  தளமான,  'லோக்கல் சர்க்கிள்ஸ்' ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
  
  இத்தகைய மோசடிகளில் சிக்கியவர்களில், 17%  பேர், அவர்கள் இழந்த  பணத்தை  மீட்டுள்ளனர். சுமார்  75% பேருக்கு, இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும் இந்த  ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் இதற்கு முந்தைய ஆய்வில், 29% பேர், அவர்களது ஏடிஎம். ரகசிய எண் உள்ளிட்ட பல தகவல்களை, குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பதாக அறிவித்திருந்தது.
  மேலும்,  4%, உடன்  பணியாற்றுபவர்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தது.
வங்கி கணக்கு, கார்டுகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை, ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்திருப்பது, பண மோசடிகளுக்கு முக்கிய காரணமாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.