தந்தைக்கு நிகருண்டோ தரணியிலே! Fathers day

 தந்தைக்கு நிகருண்டோ தரணியிலே

ஞாயிறு
20 ஜூன்

தந்தையர் தினம் 2021 (இந்தியா)

கருவறையிலேயே சுமக்காமல் கண்களிலே சுமந்து 
அருமருந்தாய் உயிரை காப்பவரே தந்தை

தூயவனாக உறவில் வலம் வந்து 
நாயகனாக நம்பிக்கை பாலமாகத் திகழ்வார்

முற்றும் இவ்வுலக வாழ்க்கை பாதையில்
 முற்றாத உறவென்பது தந்தையிடம் பெறுவதே....

இல்லற தூய்மைக்கு இதயத்தை விரித்து
 நல்லறத்தை நிலைநாட்டுவது தந்தை யன்றோ.....

மண்ணின் அடியிலிருக்கும் ஆணிவேரின் சக்தி
கண்ணின் கண்மணிக்குள் தென்படாத வெளிச்சம்தந்தையின் வெளிச்சமும் தணலாவே தெரியும்
விந்தையான வித்திற்கு உரமே தந்தை

வெயிலைத் தாங்க உதிரம் சிந்தி 
துயிலுறங்க நிழற்குடையாக நிற்பவரே தந்தை

எத்துயர் நேரிடனும் வெளியில் காட்டாமல்
 புத்துயிர் அளித்துக் காக்கும் கடவுளே....

நித்திரை யின்றி நாளும் உழைத்து 
முத்திரை பதிக்கும் முகவரியும் தந்தையே

கல்லையும் முள்ளையும் பாதங்களில் சுமந்து
 சொல்லாமல் தோளிலே சுமப்பவரே தந்தை


அறத்தால் நம்மை வழிநடத்திச் சென்று
 புறமது வெளிப்படுத்தாத உயர்வானவரும் தந்தையே

வெல்லும் சரித்திரத்தை ஊட்டி வளர்த்தி
வள்ளுவன் கூற்றை போற்றுபவரும் தந்தையே 

பிள்ளைகளுக்கென பாடுபட்டு தியாகம் செய்து
எல்லையை தாண்டிச் செல்லும் மகுடமே...

தந்தைக்கு நிகராக யாரேனும் உண்டோ....
சிந்தையில் இரண்டாம் கருவறையே தந்தை.

கே.கல்பனா
திருவனந்தபுரம்
Share on Google Plus

About நிதி நிபுணன்

நிதி - முதலீடு: தனிநபர் நிதி மேலாண்மை விழிப்புணர்வு இணைய தளம். வங்கிச் சேவை, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, காப்பீடு, நிதி ஆலோசனை, ரியல் எஸ்டேட் என அனைத்து முதலீட்டு விஷயங்களையும் அலசுகிறது. தங்கள் படைப்புகளை NITHIMUTHALEEDU@GMAIL.COM க்கு அனுப்பி வைக்கலாம்.