மொத்தப் பக்கக்காட்சிகள்

மஹிந்திரா மேனுலைஃப் ஃபோகஸ்ட் ஈக்விட்டி யோஜனா: யாருக்கு ஏற்றது?

 

மஹிந்திரா மேனுலைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம்,மஹிந்திரா மேனுலைஃப் ஃபோகஸ்ட்  ஈக்விட்டி யோஜனா  என்கிற புதிய திட்டத்தை  அறிமுகப்படுத்துகிறது. இது, பங்குச் சந்தையில் பல்வேறு சந்தை மதிப்பில் 30 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்துகிறது.

 

·           ஜி.சி.எம்.வி செயல்முறை மூலம் சாத்தியமான லாபம் தரும் நிறுவனப் பங்குகளை தேர்ந்தெடுப்பது #

·         வலுவான இடர்ப்பாடு மேலாண்மை செயல்முறைகளுடன் அதிக கவனம் கொண்ட  முதலீட்டுக் கலவை

·         ஒப்பீட்டளவில் சிறந்த இடர்ப்பாடு ஈடுக்கட்டப்பட்ட வருமானத்தை உருவாக்குவதற்கான சாத்தியம்

# ஜி.சி.எம்.வி (GCMV) என்பது வளர்ச்சி, பணவரத்து, நிர்வாகம் மற்றும் மதிப்பீடு (growth, cashflow, management and valuation) ஆகியவற்றின் அடிப்படையில்  முதலீட்டுக்கு பங்கு தேர்வை மேம்படுத்தும் ஓர் உள் செயல்முறை கட்டமைப்பு (internal process framework) ஆகும்.

மும்பை, அக்டோபர் 20, 2020: மஹிந்திரா மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் (Mahindra Manulife Investment Management Private Limited- இதன் முந்தைய பெயர் மஹிந்திரா அசெட் மேனேஜ்மென்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் ஆகும்), இது 51:49 மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (Mahindra & Mahindra Financial Services Limited –MMFSL - எம்.எம்.எஃப்.எஸ்.எல்) மற்றும் மேனுலைஃப் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட் (சிங்கப்பூர்) பி.டி. லிமிடெட் (Manulife Investment Management (Singapore) Pte. Ltd. -‘Manulife Singapore’ ‘மேனுலைஃப் சிங்கப்பூர்) இணைந்ததாகும். 

இந்த நிறுவனம்,  பல்வேறு சந்தை மூலதனம் (அதாவது மல்டி கேப்) கொண்ட அதிகபட்சம் 30 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதை நோக்கமாகக் கொண்ட பங்குச் சந்தை சார்ந்த திட்டமான  (equity scheme) ‘மஹிந்திரா மேனுலைஃப் ஃபோகஸ்ட்  ஈக்விட்டி யோஜனா  (Mahindra Manulife Focused Equity Yojana) - அறிமுகப்படுத்துகிறது

இது எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் முதலீட்டை திரும்ப எடுக்கும் ஓப்பன் எண்டடு (open ended) திட்டமாகும். 

நீண்ட கால மூலதன அதிகரிப்பை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் பொருத்தமானது. மேலும், இடர்ப்பாடு  ஈடு செய்யப்பட்ட வருவாய்க்கு வாய்ப்புள்ள இந்தத் திட்டம் நடுத்தர கால முதலீட்டாளர்களுக்கும்  பொருத்தமானது. மஹிந்திரா மேனுலைஃப் ஃபோகஸ்ட்  ஈக்விட்டி யோஜனா (‘திட்டம்) என்பது நிபுணத்துவம் கொண்ட நிதி மேலாளர்களால் நிர்வகிக்கப்படும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகும். 

இது வலுவான ஆராய்ச்சி மற்றும் இடர்ப்பாடு மேலாண்மை மூலம் மிகவும் சாத்தியமான வெற்றிகரமான யோசனைகளை அடையாளம் காணும் நோக்கம் கொண்டதாகும். இந்தத் திட்டத்தின் முதலீட்டு  பாணி (Investment Style), பல்வேறு சந்தை மதிப்பு கொண்ட 30 நிறுவனப் பங்குகளின் முதலீட்டுக் கலவையை (portfolio) உருவாக்குவதாகும். இது தவிர, கூடுதலாக, உள்நாட்டு மற்றும் உலகளாவிய மேக்ரோ-பொருளாதார இயக்கவியல் போன்ற போர்ட்ஃபோலியோவை உருவாக்குவதற்கு பல காரணிகள் பரிசீலிக்கப்படும்; நிறுவனங்களின் வணிக சுழற்சியின் நிலை; முழுமையான மற்றும் தொடர்புடைய மதிப்பீடு; பணமாக்குதல் மற்றும் பங்கின் சந்தை மதிப்பு (liquidity and market cap) அடிப்படையில் போர்ட்ஃபோலியோ மதிப்பீடு; துறையின் எதிர்கால வளர்ச்சி பார்வை; வணிக  வளர்ச்சி எதிர்ப்பார்ப்பு (1 முதல் 3 ஆண்டு வளர்ச்சிக்கு முன்னுரிமை); எதிர்கால வளர்ச்சிக்கு எதிராக பங்கின் மதிப்பீடு; நிர்வாக மேலாண்மை திறன்கள் மற்றும் பெருநிறுவன நிர்வாகம் (corporate governance) ஆகிய கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம் PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING

 PERSONAL FINANCIAL PLANNING & TAX PLANNING தனி நபர் நிதி மேலாண்மை மற்றும் வரி திட்டமிடல் கூட்டம் சென்னை 2024 ஏப்ரல் 28 அனுமதி இலவசம்  ச...