மொத்தப் பக்கக்காட்சிகள்

முழு ஆயுள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு சார்ந்த யூனிட் இணைக்கப்பட்ட காப்பீடு

 

பி.என்.பி மெட்லைஃப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ஆஷிஷ் குமார் ஸ்ரீவஸ்தவா (Ashish Kumar Srivastava, MD & CEO, PNB MetLife), கூறும்போதுபி.என்.பி மெட்லைஃப் நிறுவனத்தில், நாங்கள் வாடிக்கையாளர் மையத் தன்மையை  நம்புகிறோம். மேலும் வாடிக்கையாளர்களுக்கு எங்களின் கொள்கைகளை பின்பற்றி தீர்வுகளை வழங்குவதில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுகிறோம். வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்நாளில் நிதி நல்வாழ்வை வழங்கும் தேவை அடிப்படையிலான தீர்வுகளை வழங்குவதற்காக கருத்தியல் செய்யப்பட்டுள்ள எங்கள் 'வாழ்க்கை வட்டம்' (Circle of Life) அணுகுமுறையின் ஒரு பகுதியாக, புதிய திட்டங்கள்  ஆயுள் மற்றும்  ஆரோக்கிய பாதுகாப்பு மற்றும் செல்வம் உருவாக்குவதற்கான தேவையை நிவர்த்தி செய்யும்.

இந்த நிச்சயமற்ற காலங்களில் கூட பி.என்.பி மெட்லைஃப் நிறுவனம், அதன் பாலிசிதாரர்களுக்கு போனஸை அறிவித்தது. புதுமையான திட்டங்கள் உருவாக்கத்தில் நாங்கள் தொடர்ந்து முயற்சிகளை செய்வோம், மேலும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் வாழ்க்கை நிலை தேவைகளுக்கு உதவும் பல திட்டங்களை அறிமுகப்படுத்துவோம்.” என்றார்.  

பி.என்.பி மெட்லைஃப் கேரண்டீட் ஃப்யூச்சர் பிளான் (PNB MetLife Guaranteed Future Plan) ஒருவரின் நிதி இலக்குகளை பூர்த்தி செய்ய (meet one’s financial goals)  தொகுப்பு நிதியை உருவாக்க நான்கு வெவ்வேறு விருப்பங்களை (options) வழங்குகிறது. இந்தத் திட்டம், வருடாந்திர பிரீமியத்தில் 103% முதல் 245% வரையிலான உத்தரவாத வருமானத்துடன் வருகிறது. ரூ.30,000-க்கும் அதிகமான வருடாந்திர பிரீமியங்களும் வருடாந்திர பிரீமியங்களில் 4% முதல் 12% வரையிலான உயர் பிரீமியம் வெகுமதியைப் பெறுகின்றன. இவை தவிர, 30%-406% வரையிலான குறிப்பிட்ட இடைவெளியில் கூடுதல் வருமானத்தை  பெறும் பூஸ்டர் விருப்பங்களை (Income plus booster options) ஒருவர் தேர்வு செய்யலாம். பிறந்த நாள் அல்லது ஆண்டுவிழாக்கள் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் முதிர்வுத் தொகையைப் பெற வாடிக்கையாளர்களுக்கு இந்தத் திட்டம் அனுமதிக்கிறது. பாலிசிதாரர் செலுத்தும் பிரீமியங்கள் மற்றும் பெறும் சலுகைகள் 80சி மற்றும் 10 (10டி) கீழ் வருமான வரி சலுகையைப் பெறும்  தகுதியுடையதாகும்.

மேரா மெடிக்ளைம் பிளான் (Mera Mediclaim Plan) ஆயுள் காப்பீட்டுடன் விரிவான ஆரோக்கிய மருத்துவமனை சிகிச்சை காப்பீட்டிற்கான பாதுகாப்பை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் 7,500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளின் ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ் நெட்வொர்க்கில் ரொக்கமில்லா மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் 540க்கும் மேற்பட்ட தினசரி சிகிச்சைகள், மாற்று சிகிச்சைகளான (540 Day Care Treatments, alternative treatments) ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்றவற்றை அனுமதிக்கிறது. இழப்பீடு எதுவும் கோரவில்லை (no claim bonus) எனில் இரண்டு ஆண்டுகளில் 220% மற்றும் ஐந்து ஆண்டுகளில் 250% வரை காப்பீடு கவரேஜ் அதிகரிக்கும்.

இந்தத் தனித்துவமான திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்பீட்டு பிரீமியங்களில் 7.5% தள்ளுபடியை வழங்குவதன் மூலம் செலவு குறைந்த தீர்வை வழங்குகிறது, மேலும் பிரிவு 80சி மற்றும் 80 (டி) ஆகிய இரண்டின் கீழ் இரட்டை வரி சலுகைகளையும் வழங்குகிறது.

பி.என்.பி மெட்லைஃப் ஸ்மார்ட் பிளாட்டினம் பிளஸ் (PNB MetLife Smart Platinum Plus) என்பது ஒரு முழு ஆயுள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு சார்ந்த யூனிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டம், ஒரு தனித்துவமான பராமரிப்பு நன்மையைக் கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு  உடல்நல ஆரோக்கிய தேவைகளுக்கு எதிராக தங்கள் நிதி இலக்குகளைப் பாதுகாக்க உதவுகிறது. பட்டியலிடப்பட்ட ஐந்து தீவிர  நோய்களில் (critical illnesses) ஏதேனும் ஒன்றைக் கண்டறிந்தால் அனைத்து எதிர்கால பிரீமியங்களையும்  காப்பீடு அளிக்கும் நிறுவனம் செலுத்தும். இந்தத் திட்டம், நீண்ட கால முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக முதல் 5 ஆண்டுகள் நிதி மேலாண்மை கட்டணங்கள் மற்றும் 10 ஆம் ஆண்டின் இறுதியில் செலுத்தப்படும் ஃபண்ட் பூஸ்டர் போன்ற அம்சங்களின் மூலமான கட்டணங்களை திரும்ப வழங்குகிறது. இது நிதி மதிப்பை மேம்படுத்துகிறது.

இந்த முழுமையான திட்டம், பாலிசிதாரருக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதாவது, பிரீமியம் செலுத்தும் காலம், உறுதிப்படுத்தப்பட்ட பல தொகைகள் மற்றும் போர்ட்ஃபோலியோ உத்திகள் மற்றும் பல்வேறு நிதிகளின் தேர்வு மூலம் பாலிசிதாரர்களின் செல்வத்தை உருவாக்கும் திறனை அதிகரிக்க சுதந்திரத்தை வழங்குகிறது. இது பாலிசிதாரரின் இடர்ப்பாட்டை சந்திக்கும் திறனை பொறுத்து (risk appetite) வெவ்வேறு நிதிக்கு இடையே மாறுவதற்கும், முதலீட்டு பூட்டுக் காலத்திற்குப் (lock-in period.) பிறகு நிதி மதிப்பிலிருந்து ஓரளவு பணத்தை திரும்பப் பெறுவதற்கும் நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது.

இந்த நிறுவனம் இதுவரை பங்குச் சந்தையுடன் இணைந்த (unit-linked) 22 பாலிசிகளை கொண்டுள்ளது. இதில் பி.என்.பி மெட்லைஃப் விர்ச்சு ஃபண்ட் II மற்றும் பி.என்.பி மெட்லைஃப் விர்ச்சு ஃபண்ட் (PNB MetLife Virtue Fund II and PNB MetLife Virtue Fund) ஆகியவை காப்பீட்டு  மிகப் பெரிய பங்குச் சந்தை மதிப்பு கொண்ட பிரிவில் (Insurance Large Cap Category) முன்னணி சுய முதலீட்டு ஆராய்ச்சி அமைப்பான மார்னிங்ஸ்டார்-ன் (ஜூன் 30, 2020 நிலவரப்படி) முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன. இந்தத் தரவரிசை நிறுவனத்தின் வலுவான நிதி மேலாண்மை முன்னேற்றத்திற்கு  ஒரு சான்றாகும் மற்றும் பங்குச் சந்தையுடன் இணைந்த திட்டங்கள் மூலம் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க வளர்ச்சியை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பி.என்.பி மெட்லைஃப் அறிமுகப்படுத்திய இந்த மூன்று திட்டங்களும் நுகர்வோரின் மேம்பட்ட தேவைகளை முழுமையாக்குகின்றன.

இந்த மூன்று திட்டங்களில், மேரா மெடிக்ளைம் பிளான் மற்றும் பி.என்.பி மெட்லைஃப் கேரண்டீட் ஃப்யூச்சர் பிளான் ஆகியவை பி.என்.பி மெட்லைஃப் -இன் பேன்காசூரன்ஸ், ஏஜென்சி மற்றும் ஆன்லைன் சேனல்களில் கிடைக்கின்றன.

முன்பைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய நிலைக்கு மக்கள் மாறும்போது, ஆரோக்கிய காப்பீடு மற்றும்  ஆயுள் காப்பீடு மற்றும் செல்வம் உருவாக்குதல் ஆகியவற்றை பி.என்.பி மெட்லைஃப் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு புதிய சந்தர்ப்பத்திலும் அதன் ஆற்றல்மிக்க மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் அணுகுமுறையின் மூலம் சேவை செய்ய முயற்சிக்கிறது. இதன் மூலம் அது  வாடிக்கையாளர்களை  திருப்தி செய்யும்.

பி.என்.பி மெட்லைஃப் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் பற்றி (About PNB MetLife India Insurance Company Limited)

பி.என்.பி மெட்லைஃப் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (பி.என்.பி மெட்லைஃப்) - ன் பங்குதாரர்களாக மெட்லைஃப் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் எல்.எல்.சி. (எம்.ஐ.ஹெச்எல்), பஞ்சாப் நேஷனல் பேங்க் லிமிடெட் (பி.என்.பி), ஜம்மு & காஷ்மீர்  பேங்க் லிமிடெட் (ஜே.கே.பி), எம். பல்லோன்ஜி மற்றும் கம்பெனி பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற தனியார் முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள். எம்.ஐ.ஹெச்.எல் மற்றும் பி.என்.பி ஆகிய நிறுவனங்கள்பெரும்பான்மையான பங்குதாரர்களாக உள்ளன.

மேலும் தகவலுக்கு, ட்விட்டர், பேஸ்புக்-ல் எங்களைப் பின்தொடரவும் @PNBMetLife1, www.facebook.com/PNBMetLife

அல்லது பார்வையிடவும்  www.pnbmetlife.com

·          பி.என்.பிமற்றும்மெட்லைஃப்ஆகியவை முறையே பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் மெட்ரோபாலிடன் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனியின் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரைகள் (trademarks) ஆகும். பி.என்.பி மெட்லைஃப் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் இந்த வர்த்தக முத்திரைகளின் உரிமம் பெற்றவர் ஆவார்.

·         இடர்ப்பாட்டு காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பாலிசி எடுப்பதற்கு முன் விற்பனை சிற்றேட்டை (sales brochure) கவனமாகப் படியுங்கள்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - 365 நாள்கள்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அவசர அவசிய உதவி எண்கள் help

*🔹🔸அவசர அவசிய உதவி எண்கள்* 1 அவசர உதவி அனைத்திற்கும் 911/112 2 வங்கித் திருட்டு உதவிக்கு 9840814100 3 மனிதஉரிமைகள் ஆணையம் 044-22410377 4 ம...