மொத்தப் பக்கக்காட்சிகள்

ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட், 2020 ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள் அறிவிப்பு

ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட், 2020 ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள் அறிவிப்பு

மும்பை,  ஆகஸ்ட் 11, 2020: சிறு கடன் வழங்கும் முன்னணி   நிதி நிறுவனம், ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் (ஸ்ரீராம் சிட்டி - Shriram City Union Finance Limited -  Shriram City) 2020-2021 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு நிதி நிலை முடிவுகளை அறிவித்துள்ளது. கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட முதல்  காலாண்டில், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஒப்பீட்டளவில் சரிவு  சிறிதாக மட்டுமே இருந்தது (முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்துடன் ஒப்பிடும் போது 6% குறைவு மற்றும் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும் போது 2% குறைவு). இரு சக்கர வாகனக் கடன் முந்தைய ஆண்டை விட 10% அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. தனித்த நிகர லாபம் (Standalone Net Profit), முந்தைய ஆண்டை விட 24% குறைந்துள்ளது. அதேநேரத்தில், முந்தைய நான்காம் காலாண்டை விட  26%  அதிகரித்துள்ளது. செயல்பாட்டு செலவுகள் (Operating Expenses) கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது (முந்தைய ஆண்டை விட 18% மற்றும் முந்தைய காலாண்டை விட 20% குறைந்தது), அதன்படி, செயல்பாட்டு லாபம் 10% Q-o-Q அதிகமாக இருந்தது.

சொத்து தரம் (Asset quality) தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. மொத்த நிலை 3 நிலைகள் (Gross Stage 3 levels) 7.28% ஆக இருந்தது (ஒப்பிடும்போது- ஓராண்டுக்கு முன்பு 1.61 குறைவு% மற்றும் கடந்த காலாண்டில் 0.62%). கடந்த காலாண்டில் கடன் தவணைகள் தவறுவது மற்றும் கடன் தள்ளுபடி செய்வது (impairments and write offs) சீராக இருந்தன.

துணை  நிறுவனமான ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Shriram Housing Finance Ltd) –ன்  நிர்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 23% அதிகரித்துள்ளது. ஆனாலும், வழங்கப்பட்ட கடன் குறைந்திருக்கிறது. ஸ்ரீராம் ஹவுசிங் மொத்த நிலை 3 நிலை என்பது  2.3%  ஆக உள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறந்த சொத்து தரமாகும்.

ஸ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி திரு ஒய்.எஸ். சக்ரவர்த்தி,  (Mr. Y.S. Chakravarti, MD & CEO, Shriram City Union Finance) கருத்து தெரிவிக்கும் போதுஎங்கள் அலுவலகங்கள் அனைத்தும் தற்போது செயல்பட்டு வருவதால், நாங்கள் படிப்படியாக வணிக-வழக்கத்திற்கு (Business-as-Usual mode) வந்திருக்கிறோம். ஜூன் மாதத்தில் கடன் வழங்குவது வலிமையுடன் தொடங்கி இருக்கிறது. மேலும் ஆண்டின் பிற்பகுதியில் வணிகம் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். காலாண்டில் செலவுக் கட்டுப்பாட்டில் நாங்கள் சிறந்த முன்னேற்றம் கண்டிருக்கிறோம். மேலும் இந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நடைமுறைகளைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம் என்று நம்புகிறோம்.”

ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட்  பற்றி.. (About Shriram City Union Finance Ltd. BSE: SHRMCITY, NSE: SHRIRAMCIT): ஶ்ரீராம் சிட்டி யூனியன் ஃபைனான்ஸ் லிமிடெட் (Shriram City Union Finance Ltd) என்பது 34 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், சிறு கடன்கள் பிரிவில் நிதிச் சேவை அளிக்கும் நிறுவனமாகும். நாட்டில் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு (MSMEs) மற்றும்  இரு சக்கர வாகனக் கடன்கள் வழங்கும் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். இது பல்வேறு நிதித் திட்டங்களை, வர்த்தக வாகனக் கடன்கள், பயணிகள் வாகனக் கடன்கள் மற்றும் வீட்டு வசதிக் கடன்களை வழங்கி வருகிறது.

 

இவை தவிர, தங்க நகை அடமானக் கடன் மற்றும் தனிநபர் நுகர்வோர் கடன்களையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. டெபாசிட்களை  ஏற்றுக்கொள்ளும் வங்கிச் சாரா நிதிச் சேவை நிறுவனமான (என்.பி.எஃப்.சி),  ஸ்ரீராம் சிட்டி ரூ. 1 லட்சம் கோடி  மதிப்பு கொண்ட சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் குழுமத்தின்(Shriram Group) ஓர் அங்கமாகும்.

For More Information: Adfactors PR:

Nikhil Mansukhani/Neha Nalawade: 9833552171/8169346935

nikhil.mansukhani@adfactorspr.com, neha.nalawade@adfactorspr.com 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..! Food

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!* ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும்...